கோடி கோடியாக கொட்டி விளம்பரங்கள் செய்கின்றன நிறுவனங்கள். சந்தையில் தங்களது பொருட்கள் அல்லது பிராண்டுகள் அதைவிடவும் பல கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக.
அப்படி செலவு செய்த கோடிகளை திரும்ப சம்பாதிக்கலாம் அல்லது சம்பாதிக்காமலும் போகலாம். ஆனால் விளம்பரங்களில் புரளும் கோடிகள் ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.
இது விளம்பர யுகம், எல்லாவற்றுக்கும் விளம்பரம், எதற்கும் விளம்பரம். விளம்பரம் செய்தால்தான் சந்தையில் நிலைத்து நிற்க முடியும் என்பதுதான் நிலைமை.
விளம்பரமே வேண்டாம் என்று ஒதுங்கி நிற்கும் நிறுவனங்கள் மக்கள் மனங்களில் இடம் பிடிப்பதில்லை.
இப்படி மக்கள் மனங்களில் இடம் பிடிப்பதற்காக ஒவ்வொரு நிறுவனங்களும் பல கோடிகளை விளம்பரங்களுக்கு ஒதுக்குகின்றன. விளம்பரத்துறை இந்திய பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது. ரேடியோ, டிவி, பிரிண்ட் மீடியா வழியாகவும் வெளிப்புற விளம்பரங்கள் வழியாகவும் விளம்பரத்துறைக்கு வருமானம் கொட்டுகிறது.
ஒரு நிறுவனம் தொழிலை புதிய சந்தைக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றால் தங்களது ஆராய்ச்சி, தயாரிப்பு எல்லாவற்றையும் தாண்டி அணுகுவது விளம்பர நிறுவனங்களைத்தான் என்கிறது ஆய்வுகள்.
கோடிகளில் ஒப்பந்தங்கள்
சின்ன தயாரிப்போ, பெரிய தயாரிப்போ தங்களது சந்தைக்கு ஏற்ப விளம்பரத்துக்கு ஒதுக்கித்தான் ஆக வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் கோடிகளை கொட்டுகிறது என்றால் சிறு நிறுவனங்கள் லட்சங்களாவது ஒதுக்க வேண்டும். சில நிறுவனங்கள் விளம்பரத்துறையில் முதலீடே செய்கின்றன. காக்னிசென்ட் நிறுவனம் சமீபத்தில் ஒரு டிஜிட்டல் விளம்பர நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் விளம்பரம் செய்ய WPP மீடியா என்கிற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அமேசான் நிறுவனம் 2015 நிதி ஆண்டில் விளம்பரத்துக்கு செலவிட ஒதுக்கியுள்ள தொகை ரூ.150 கோடி. தவிர க்விக்கர், ஜபாங், ஸ்நாப்டீல், பிளிப்கார்ட் என வளர்ந்து வரும் ஆன்லைன் நிறுவனங்களும் விளம்ப வருவாயைக் கணிசமாக சம்பாதிக்க உள்ளதாக ஆய்வுகள் சொல்கிறது.
எவ்வளவு ஒதுக்கீடு
ஆரம்ப நிலையில் இருக்கும் ஒரு நிறுவனம் முதற்கட்டமாக தனது விளம்பரங்களுக்கு மொத்த வருமானத்தில் 2 முதல் 3 சதவீத தொகையை ஒதுக்குகின்றன. நடுத்தர நிறுவனங்கள் 7 முதல் 8 சதவீத தொகையையும் வளர்ந்த நிறுவனங்கள் 10 முதல் 12 சதவீத தொகையையும் ஒதுக்குகின்றன. சில நிறுவனங்கள் தங்களது மொத்த வருமானத்தில் 16 முதல் 23 சதவீதம் வரை விளம்பர செலவுகளை செய்கின்றன.
விளம்பர சந்தை வளர்ச்சி
இந்தியாவில் மட்டும் கடந்த இரண்டு வருடங்களில் விளம்பர சந்தையின் வளர்ச்சி 27.5 சதவீதம் உயர்ந்துள்ளது. 2014 ம் ஆண்டில் மட்டும் இந்த துறையில் புழங்கிய தொகை ரூ.37,100 கோடி என்கிறது புள்ளிவிவரங்கள்.
இது 2015ல் 9.6 சதவீதம் வளர்ந்து ரூ.40,658 கோடியாக இருக்கும் என்கிறது. 2014 தேர்தல் காலத்தில் 3 பங்கு வளர்ச்சியில் 2 பங்கு தேர்தல் விளம்பர வருவாயாக இருந்துள்ளது.
2014ம் ஆண்டில் 16.4 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது இந்திய விளம்பரத்துறை. அதில் 7.2 சதவீதம் தேர்தல் விளம்பரங்கள் வழியாகவும், 3.6 சதவீதம் இ-காமர்ஸ் மூலமாகவும், இதர வகைகளிலான விளம்பரங்களின் மூலம் 5.6 சதவீத வளர்ச்சியும் கண்டுள்ளது.
2014 ல் தேர்தல் விளம்பரங்களின் மூலம் கிடைத்த வருவாய் மட்டும் ரூ.2,300 கோடியாகும். இ-காமர்ஸ் நிறுவனங்கள் செலவழித்த தொகை ரூ.1,150 கோடியாக உள்ளது.
இன்டர்நெட் மொபைல் அசோசியேசன் ஆப் இந்தியா நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில் டிஜிட்டல் விளம்பர துறை ரூ.2,750 சந்தையை கொண்டுள்ளது என கூறுகிறது. மொத்த விளம்பர வருமானத்தில் இணையதளம் மூலமான விளம்பரம் 2013ல் 8 சதவீதமாக இருந்தது. இது 2018ல் 16 சதவீதமாக இருக்கும் என்கிறது அந்த அறிக்கை.
வேலைவாய்ப்பு
விளம்பரத்துறையின் வேலைவாய்ப்பு உருவாக்கமும் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. புதுமையான முயற்சிகளோடும், சிந்தனை களோடும் வருபவர்களுக்கு விளம்பரத் துறையில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
விளம்பர நிறுவனம் நிலைத்து நிற்க வேண்டும் என்றாலும், அது புதுமைகளை முயற்சித்து பார்க்கும் நிறுவனமாக இருக்க வேண்டும். பல துறைகளைச் குறித்த அறிவும், திறமையும் வேண்டும். அப்படிப்பட்ட நிறுவனங்கள்தான் வெற்றி பெற முடியும்.
2025ல் இந்தியா நுகர்வோர் பொருட்கள் சந்தையில் உலக அளவில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் என்கிறது மெக்கன்ஸி குளோபல் நிறுவனத்தின் ஆய்வு ஒன்று. இந்திய உள்நாட்டு உற்பத்தியில் 7.3 சதவீதமாக இருக்கும் என்கிறது அந்த ஆய்வு.
நுகர்வோர் துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப விளம்பரதுறையின் வளர்ச்சி இருக்கும் என்றும், விளம்பரத்துக்கு ஆகும் செலவு இயல்பாகவே பொருளாதார வளர்ச்சிக்கும், பொருளாதார சூழலை சீராக வைத்துக் கொள்வதற்கும் காரணியாக இருக்கிறது என்றும் சொல்கிறது.
மேலும் இந்திய நுகர்வோர் சந்தையின் முக்கிய காலகட்டம் 2005 - 2025 என்று அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. ஒரு பொருளை தேடி மக்கள் வாங்கத் தொடங்கும்போதே விளம்பரத்தின் வெற்றி உருவாகிறது. மக்களின் நுகர்வு வீதம் அதிகரிக்க அதிகரிக்க விளம்பர சந்தையின் வளர்ச்சியும் அதிகரிக்கும் என்பதுதான் உண்மை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago