Title: The Power of Positive Thinking in Business
Author: Scott W Ventrella
Publisher: Vermilion
தொழில் வெற்றிக்கான நேர்மறை எண்ணங்களின் திறனை பற்றிய புத்தகம். தொழிலில் அதிகபட்ச பலன்களை பெறுவதற்கான செய்திகளைப் பற்றி பேசுகின்றது.
மனம் எவ்வாறு செயல்படுகின்றது என்பதைபற்றியும் பயம், பயன் தராத எண்ணங்கள், நம்பிக்கைக் குறைபாடு போன்ற எதிர்மறை மனப்பாங்கினை நீக்கி குறிக்கோள் மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதற்கான மனநிலையை சொல்கின்றார் ஆசிரியர். தொழிலில் ஏற்படும் கடினமான சூழ்நிலைகளில் திறம்பட செயல்பட உதவும் புத்தகம்.
Title: Be Positive, Think Positive
Author: Mridula Agarwal
Publisher: Rupa and Co
வெற்றிகரமான மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு தேவையான மாற்றத்தினை ஏற்படுத்தும் விஷயங்களை உள்ளடக்கியது இந்த புத்தகம். முழு திருப்தியினை உணரும் பயனுள்ள வாழ்க்கைக்கான கருத்துகளை ஆழமான ஆய்வுகளின் மூலம் தொகுத்து கொடுத்துள்ளார் ஆசிரியர்.
நேர்மையான எண்ணங்களையும், அமைதியான மனதினையும் பெறுவதற்கான செயல்பாடுகளைப் பற்றியும், சீரான வளர்ச்சி மற்றும் மனதிற்கான புத்துணர்வு குறித்தும் சொல்கின்றது. எதிர்மறையான பழக்கங்களை உடைத்தெறிவதும், நேர்மறை எண்ணங்களின் மூலம் இலக்கை நிர்ணயித்துக் கொள்வதற்கான கருத்துகளையும் விளக்குகிறது.
Title: Positive Thinking Positive Action
Author: Douglas Miller
Publisher: BBC Worldwide
நேர்மறை எண்ணங்களைக் கொண்டவர்களே அனைத்து சூழ்நிலைகளிலும் வெற்றிக்கான வாய்ப்புகளைப் பெறுகின்றார்கள் என்று சொல்லும் புத்தகம். நேர்மறை எண்ணம் என்றால் என்ன?, அதன் பயன் என்ன? என்பதைப் பற்றியும் நிகழ்கால வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய செய்திகளைப்பற்றியும் சொல்கின்றார்.
நல்ல வாய்ப்புகளை சரியான நேரத்தில் திறமையான வகையில் பயன்படுத்திக்கொள்வது மற்றும் நம்பிக்கையின் மூலம் கிடைக்கும் சக்தி போன்றவற்றை பேசுகிறது.
Title: Success Through Positive Thinking
Author: Sharma S P
Publisher: Pustak Mahal
வெற்றி மற்றும் தோல்வி ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசம் முழுக்க முழுக்க நம்முடைய அணுகுமுறையின் அடிப்படையிலேயே அமைகின்றது என்பதை வலியுறுத்தும் புத்தகம் இது. சிக்கலான ஒவ்வொரு நிலையிலும் மறைந்துள்ள வாய்ப்புகளை சரியான அணுகுமுறையின் மூலம் திறம்பட பயன்படுத்திக் கொள்வதைப்பற்றி பேசுகின்றது.
மேலும், எவ்வாறு இந்த அணுகுமுறையின் வாயிலாக தோல்வியானது வெற்றியாக மாறுகின்றது என்பதையும், பிரச்சினைகளின் மீதான முழுமையான பார்வையையும் கற்றுக்கொடுக்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago