வறுமையில் வாடும் வங்கம்

By செய்திப்பிரிவு

மேற்கு வங்கம் - தேசிய கீதம் தந்த நோபல் மேதை ரவீந்திரநாத் தாகூரின் தாயகம். சாந்திநிகேதன் விஸ்வபாரதி பல்கலைக் கழகம் போன்ற வரலாற்று புகழ்மிக்க கல்வி மையங்கள் உள்ள மாநிலம் என வரலாற்று புகழ்சேர்க்கும் பட்டியல் நீளும்.

வங்கதேசம், பூடான், நேபாளம் என மூன்று நாடுகளை ஒட்டி இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது மேற்கு வங்கம். வேளாண் உற்பத்தியில் 6 மாநிலங்களில் முக்கியமானதாகத் திகழ்கிறது. ஆனால் இங்குள்ள 20 மாவட்டங்களிலும் வறுமை தாண்டவமாடுகிறது என்பதுதான் கசப்பான உண்மை.

1960-ம் ஆண்டுக்குப் பிறகு இம்மாநிலத்துக்கு எல்லாம் இறங்கு முகம்தான். மேற்கு வங்க மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கியதற்கு மிக முக்கிய காரணம் 34 ஆண்டுகளாக அங்கு ஆட்சியிலிருந்த கம்யூனிச கட்சிதான் என்று கூறப் படுகிறது.

2011-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியாலும் அங்கு மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியவில்லை.

மேற்கு வங்கத்தின் சராசரி தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.69 ஆயிரமாக உள்ளது. ஆனால் தேசிய சராசரி ரூ. 74 ஆயிரமாகும்.

கடந்த 5 ஆண்டுகளாக சிசு இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 31 குழந்தைகள் இறந்துவிடுகின்றன. இந்திய அளவில் ஆயிரம் குழந்தைகளுக்கு 13 குழந்தைகள் இறப்பதாக உள்ளது.

10 கோடி அளவுக்கு மக்கள் தொகை கொண்ட மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் வறுமையில் வாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய சராசரி 15 சதவீதமாக உள்ளது.

மாநிலம் முழுவதும் ஏழ்மையில் வாடுவோர் விகிதம் அதிகமாக உள்ளது. புருலியா மாவட்டத்தில் கடுமையான வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை மிக அதிகம். இங்கு வாழும் மக்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பசிக்கொடுமையில் தவிக்கின்றனர்.

வறுமையில் வாடும் ஏழை மக்கள் தங்களது ஏழ்மை போகாதா என்ற ஏக்கத்தில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகம் மிகுந்த அதாவது நிலக்கரி சுரங்கம் மற்றும் விவசாய பண்ணைகள் அதிகம் உள்ள பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

புருலியா மட்டுமின்றி உத்தர் தினாஜ்பூர், மால்டா, பீர்பும், பங்குரா ஆகிய மாவட்டங்களில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகம் உள்ள பகுதிகளில் ஏழை மக்கள் அதிகம் குவிவதால், இத்தகையோரின் எதிர் பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல் இம் மாவட்டங்கள் திணறுகின்றன.

மாநிலத்தில் அதிகரித்து வரும் வேலை யில்லாத் திண்டாட்டமும் மாநில வளர்ச்சியை வெகுவாகப் பாதித் துள்ளது.

மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து வசதி போதுமான அளவுக்கு இல்லாததும் ஏழ்மைக்குக் காரணமாகும். காடுகள் அதிகம் உள்ள பகுதிகளான மால்டா, ஜல்பைகுரி, பர்த்மான், புர்பா, மெதினாபூர் ஆகியவற்றில் வசிக்கும் மக்கள் அதீத வறுமையில் வாடுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆதிவாசி சமூகத்தினராவர்.

பெரும்பாலான மாவட்டங்களை இணைப்பதற்கு போதிய சாலை வசதி கிடையாது. வெகு குறைந்த எண்ணிக்கையிலான பள்ளிகள், மருத்துமனைகள் இருப்பது மாநிலத்தின் வளர்ச்சி போதிய அளவுக்கு இல்லை என்பதை உணர்த்துகின்றன.

மாநிலத்தில் நிலவும் வறுமையைப் போக்க அரசு எடுக்கும் முயற்சிகள் இன்னமும் முனைப்பாக ஒருமுகமாக இருக்க வேண்டும் என்ற தெரிகிறது. யார் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள் என்ற துல்லியமான வரையறை வகுக் கப்பட்டு அவர்களை கண்டறிந்து உதவிகள் வழங்கப்படும்போதுதான் ஏழ்மை அகலும். இதற்கு தொலை நோக்குத் திட்டத்துடன் கூடிய கொள்கைகள் வகுக்க வேண்டியது அவசியம்.

இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் நான்காவது பெரிய மாநிலமாகும் மேற்கு வங்கம்.

மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் மட்டும் வீடில்லாமல் வாழ்வோர் எண்ணிக்கை ஒரு லட்சம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்