முறைபடுத்தப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளார்கள் மற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்று அவர்களது அடிப்படை சம்பளத்திலிருந்து 12 சதவீதம் பிடிக்கப்படுகிறது. அந்த தொகையுடன், அதே அளவு தொகையை நிறுவனப் பங்களிப்பாக சேர்த்து, தொழிலாளரது பி.எப். கணக்கில் சேர்க்கப்படும். இதுதான் பி.எப் கணக்கின் நடைமுறை.
தவிர ஊழியர்களின் சம்பள முறை அடிப்படையில் கணக்கிடும் ஒரு முறையும் உள்ளது. இதன்படி மொத்த தொகையும் தொழிலாளரின் சம்பளத்திலிருந்தே பிடித்தம் செய்யப்பட்டு பிஎப் கணக்கில் சேர்க்கப்படுகிறது. ஒரு பணியாளருக்கு ஆண்டுக்கு இவ்வளவு செலவு செய்யப்படும் என்ற தீர்மானத்தின் அடிப்படையில் இது முடிவு செய்யப்படும்.
பிஎப் கணக்கு எண்
பி.எப் கணக்கில் உள்ள தொகை வங்கிக் கணக்கு போல பாவிக்கப்பட்டு அதற்கு வட்டியும் ஆண்டுக்காண்டு சேர்க்கப்படும். மேலும் தொழிலாளர்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப அந்த தொகையிலிருந்து மருத்துவம், திருமணம் தொடர்பான தேவைகளுக்கு பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
நிறுவனத்திலிருந்து விலகிவிட்டால் பிஎப் கணக்கின் மொத்த தொகையையும் எடுத்துக் கொள்ளலாம்.
கோரப்படாத தொகை
ஆனால் வேலையிலிருந்து விலகுபவர்கள் எல்லோரும் பிஎப் பணத்தை அப்படி எடுத்து விடுவதில்லை. நாடு முழுவதும் அப்படி கோரப்படாமல் உள்ள பிஎப் பணம் மட்டும் ரூ. 27,000 கோடியாக உள்ளது. மேலும் ஒரு பணியாளர் வேறு நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேரும்போது, தாங்கள் முன்னர் வேலை பார்த்த நிறுவனத்தில் கொடுத்த பி.எப். கணக்கில் தொகையை மாற்றிக்கொள்ள முடியும் என்றாலும், பல்வேறு நடைமுறை சிக்கல்களால் அதனைச் செய்வதில்லை.
எனவே பி.எப். பணத்தை உடனடியாக குறிப்பிட்ட காலத்திற்குள் பெற்று விடுகின்றனர். சிலரோ முன்பு வேலை செய்த நிறுவனத்தில் பிடிக்கப்பட்ட பி.எப். தொகை குறைவாக இருக்கும்பட்சத்தில் எடுக்காமலேயே விட்டுவிடுகின்றனர்.
இதனால் ஒரே பணியாளர் பல நிறுவனங்களுக்கு மாறும்போது ஒவ்வொரு முறையும் பல பிஎப் கணக்குகள் தொடங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை மாற்ற கொண்டு வரப்பட்டதுதான் நிரந்தர பிஎப் கணக்கு எண்.
நிரந்தர பி.எப். கணக்கு எண்
ஒரு நிறுவனத்தில் பணியாற்றும்போது பி.எப். கணக்கு தொடங்கிவிட்டால், அந்த நிறுவனத்திலிருந்து விலகி வேறு நிறுவனங்களுக்குச் சென்றாலும் அதே பிஎப் கணக்கை வைத்துக் கொள்ளலாம். இதற்காக நாட்டில் உள்ள தொழிலாளர் அனைவருக்கும் நிரந்தர பி.எப். கணக்கு எண் (Universal Account Number -UAN) வழங்க மத்திய அரசால் திட்டமிடப்பட்டு, அது நடைமுறைக்கும் வந்து விட்டது.
இந்த கணக்கு மூலம் ஒருவர் எத்தனை நிறுவனங்களுக்கு வேலை மாறினாலும் அவரது பி.எப். கணக்கை மாற்றிக் கொள்ள வேண்டாம். தொடர்ந்து அதே எண்ணிலேயே பி.எப்.தொகையை செலுத்தலாம்
புதிய கட்டுப்பாடு
சமீபத்தில் பிஎப் கணக்கில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப் பட்டுள்ளது. இதன் படி புதிய தொழி லாளர்கள் தங்களது பி.எப் பணத்தை முதிர்வு காலத்திற்கு முன்னரே எடுப்பது குறையும். அதாவது ஒரு தொழிலாளர் 50 வயதுக்குப் முன்னர் முழு தொகையையும் எடுக்க முடியாது.
10 சதவீத தொகை கணக்கில் இருப்பு வைக்கப்படும். 50 வயதுக்கு பிறகு பி.எப் கணக்கில் உள்ள முழு தொகையையும் திரும்ப பெறலாம். அதாவது கணக்கில் உள்ள 90 சதவீத தொகையை மட்டுமே திரும்ப எடுக்கலாம். மீதமுள்ள, 10 சதவீத தொகை அவர்கள் கணக்கிலேயே இருக்கும். 50 வயதுக்கு பின்னர்தான் அந்த தொகையை பெற முடியும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago