புத்தக அலமாரி: 09.02.2015

By செய்திப்பிரிவு

Title: The New Boss

Author: Peter Fischer

Publisher: Kogan Page

புதிதாக வேலையில் சேர்ந்த ஒரு மேலாளர், தன்னை எவ்வாறு அதில் நிலைநிறுத்திக்கொள்வது என்பதைப்பற்றி சொல்கின்றது “தி நியூ பாஸ்” என்ற இந்த புத்தகம். முதல் நூறு நாட்கள், அந்த புதிய பொறுப்பில் ஒரு மேலாளர் சர்வைவ் செய்துகொள்வதற்கான சுய மதிப்பீட்டு உத்திகள் மற்றும் அதற்கான ஆய்வுகளின் மாதிரிகளைக் கொடுத்துள்ளார் ஆசிரியர்.

ஆரம்ப நாட்களில் புதிய மேலாளர் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள், நிறுவனம் பற்றிய புரிதல், எதிர்பார்ப்பு மற்றும் பணியாளர்களுடனான உறவு ஆகியவை தகுந்த விளக்கங்களுடன் சொல்லப்பட்டுள்ளது.

Title: How to Manage Your Boss

Author: Roger Fritz

Publisher: Jaico Publishing House

ஒரு பணியாளருடைய உயர்வு மற்றும் முன்னேற்றங்களை தீர்மானிப்பவராக இருப்பவர் அவரின் மேலாளரே. மேலாளருடனான உறவை பயனுள்ள வகையில் அமைத்து, அதன்மூலம் பணியில் சிறப்பான நிலையை அடைவது எப்படி என்பதற்கான புத்தகம் இது.

பணியாளரின் ஒவ்வொரு செயலுக்குமான ஆதரவு மேலாளரிடமிருந்து கிடைக்கும்போது மட்டுமே உண்மையான உயர்வைப் பெறமுடியும் என்று சொல்லும் ஆசிரியர், அதற்கான செயல்களை தெளிவாக கொடுத்துள்ளார்.

Title: We Need to Talk Tough Conversations with Your Boss

Author: Lynne Eisaguirre

Publisher: Adams Media

மேலாளருடனான உரையாடல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப்பற்றி தகுந்த விளக்கங்களுடன் சொல்கின்றது இந்த புத்தகம். நிறுவனத்தின் செயல்பாடு, பணியில் தொய்வு, பணியாளர்களின் பிரச்சினைகள், பதவி உயர்வு மற்றும் விடுமுறைக்கான கோரிக்கைகள் ஆகியவற்றைப்பற்றி எவ்வாறு பேசுவது என்று கற்றுக்கொடுக்கிறார் ஆசிரியர். மேலாளரிடம் எதைச் சொல்லலாம், எதைச் சொல்லக்கூடாது, பணியாட்கள் அல்லது பணி தொடர்பான புகார்கள் பற்றி எவ்வாறு ஆலோசனை செய்வது என்பதைபற்றியும் சொல்கிறது.

Title: You Can’t Win a Fight with Your Boss

Author: Tom Markert

Publisher: Harper Collins

நிறுவனத்தின் வெற்றிக்கும், தனிப்பட்ட உயர்வுக்கும் தேவையான 56 நடைமுறை விதிகளைப்பற்றிய புத்தகம் இது. ஊக்கம், மேலாளரை அறிந்துகொள்ளுதல், வேலையில் நிபுணத்துவம், நமக்கான வழிகாட்டி, தேவையான மாற்றங்கள், குழுவிற்கான பயிற்சி, பணியாளர் நலன், வெற்றிக்கான திட்டமிடல், உணர்வுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பணியில் புத்தி கூர்மை போன்றவற்றை உள்ளடக்கிய விதிகளை சொல்கிறது இந்தப் புத்தகம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்