சிக்கனமான வெளிநாட்டுச் சுற்றுலா

By நீரை மகேந்திரன்

நமது வாழ்க்கை முறை எவ்வளவோ மாறி விட்டது. செலவு செய்வதன் கண்ணோட்டமும் மாறி உள்ளது. அத்தியாவசிய செலவுகள் தவிர, மகிழ்ச்சிக்காகவும் தாராளமாக செலவு செய்கிறோம். அந்த வகையிலான ஒரு செலவுதான் சுற்றுலாச் செலவு. கோடைக் காலம் தொடங்கிவிட்டால் எங்காவது ‘டூர்’ போயே தீரவேண்டும் என்கிற மனநிலைக்கும் வந்துவிட்டோம்.

தனிக்குடும்பமும், நகர வாழ்க்கை முறையும் சேர்ந்து ’’லீவு போரடிக்கும்பா’’ என்று குழந்தைகளைச் சொல்ல வைத்துவிட்டது. அதனால்தான் சுற்றுலா என்பதும் நமது வாழ்க்கை முறையில் அத்தியாவசியமாகிவிட்டது. பொருளாதார மாற்றங்களும் அதற்கான வாய்ப்பை வழங்கி உள்ளது.

சுற்றுலா செல்வது மகிழ்ச்சியாகவும், சிறந்த அனுபவமாகவும் மாற சில பொருளாதார திட்டமிடுதல்கள் அவசியம். குறிப்பாக வெளிநாட்டுச் சுற்றுலா சிறப்பாக அமைய இந்த திட்டமிடும் வேலைகளில் தெளிவாக இருக்க வேண்டும்.

உள்நாட்டு சுற்றுலா என்றால் அதிகபட்சமாக ஏடிஎம் கார்டில் பணம் இருந்தால் போதும். நினைத்த மாத்திரத்தில் கிளம்பிவிடலாம். ஆனால் வெளிநாட்டுச் சுற்றுலா அப்படி செல்ல முடியாது. வெளிநாட்டுச் சுற்றுலாவை எப்படி திட்டமிடுவது?.

நோக்கம் / பட்ஜெட்

முதலில் சுற்றுலாவுக்கான நோக்கம் என்ன என்பதில் தெளிவாகவும். பொழுதுபோக்கு, ஷாப்பிங், குழந்தைகளுக்கான சுற்றுலா, ஹனிமூன் என சுற்றுலா செல்வதில் தெளிவு இருந்தால் அதற்கான செலவு மதிப்பிட முடியும். பட்ஜெட்டை பொறுத்தும் திட்டமிடலாம்.

சீசன் மற்றும் விடுமுறைகள்

அந்தந்த நாடுகளில் சீசன் காலத்துக்கு ஏற்ப செல்ல வேண்டும். இல்லையென்றால் வெட்டிச் செலவாக உங்கள் பயணம் அமைந்துவிடும். மேலும் நமக்கு கிடைத்த விடுமுறையை மட்டும் கணக்கில் கொண்டு திட்டமிடக்கூடாது. செல்ல விரும்பும் நாட்டின் விடுமுறை தினங்களை கவனிக்க வேண்டும்.

ஒரு இடத்தை பார்க்க விரும்புகிறோம் என்றால், அந்த தேதியில் அங்கு விடுமுறை விடப்பட்டிருந்தால் சுற்றுலா சொதப்பலாகிவிடும். எனவே சுற்றுலா சீசனுக்கு ஏற்ப திட்டமிட்டால் நமது பட்ஜெட்டைக் கட்டுப்படுத்த முடியும்.

நாணய மாற்றம்

வெளிநாட்டு சுற்றுலாவில் இந்திய ரூபாய் செலவிடுவதற்கான தேவை இருக்காது. எனவே பணத்தை வங்கியில் இருப்பு வைத்துக் கொண்டு இண்டர்நேஷனல் மணி கார்டு வாங்கிக் கொள்ள வேண்டும். தேவைக்கு ஏற்ப அந்த நாட்டின் கரன்சிகளாக மாற்றி வைத்துக் கொள்ளலாம். மேலும் அந்த நாட்டின் பண மதிப்புக்கு நிகரான ரூபாயின் மதிப்பை கணக்கிட்டு வங்கி இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

விமான டிக்கெட்டுகள்

பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டால் விமானக் கட்டணச் சலுகைகளையும் பயன்படுத்தலாம். நாடுகளின் சீஸனுக்கு ஏற்பவோ அல்லது சீஸன் அல்லாத நாட்களிலோ விமான கட்டத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும். எனவே விமான டிக்கெட் புக் செய்து வைத்துக்கொண்டு திட்டமிடுவது அல்லது கட்டண சலுகை அறிவிப்புக்கு ஏற்பவோ திட்டமிடலாம்.

நாம் வெளிநாட்டுக்கு செல்வதுபோல இந்தியாவிலும் சீசன் காலம் உள்ளது. அதற்கு வெளிநாட்டுப் பயணிகளும் இங்கு வருவார்கள். அப்போது விமான கட்டணங்களில் உள்ள ஏற்ற இறக்கங்களையும் கவனிக்க வேண்டும்.

ரிட்டர்ன் டிக்கெட்

ரிட்டர்ன் டிக்கெட் எடுப்பது பாதுகாப்பு. பயணத் திட்டத்தில் எந்த மாற்றமுமில்லாமல் திரும்புவதை உறுதி செய்கிறது. சுற்றுலாவை முடித்த பிறகு அங்கிருந்தே ரிட்டர்ன் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்தான், ஆனால் சில சமயங்களில் ரிட்டர்ன் டிக்கெட்டிற்காக காத்திருக்க வேண்டியிருக்கும். தவிர இதர அத்தாட்சி ஆவணங்கள் தொலைந்து போனாலும் ரிட்டர்ன் டிக்கெட் கைவசம் இருந்தால் நிலைமைகளைச் சமாளித்துக் திரும்ப வரலாம்.

சுமைகள்

முடிந்தவரையில் சுமைகளை குறைக்கவும். அப்போதுதான் சுற்றுலா முடித்து திரும்பி வருகையில் அங்கிருந்து பொருட்களை வாங்கிவர முடியும். ஷாம்பு, பேஸ்ட், லிப்ஸ்டிக் போன்ற லிக்விட் பொருட்கள் எடுத்துச் செல்லும்போது அவை எல்லாம் சேர்த்து 1,000 மில்லி தாண்ட வேண்டாம்.

எடைக் கட்டுப்பாட்டை தாண்டி எடுத்து கொண்டு செல்லும் பொருட்கள் அல்லது எடுத்து வரும் பொருட்களை தனியாக கார்கோ மூலம்தான் கொண்டுவர வேண்டும். இதற்கு கட்டணங்கள் செலுத்த வேண்டும்.

நேரம் தவறாமை / உடல்நலம்

நேரம் தவறாமையும், உடல்நலமும் மிக முக்கியம். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடம் செல்ல வேண்டும் என்றால் அதில் தவறக்கூடாது. இல்லையென்றால் கூடுதல் செலாவாகும். தங்குமிடத்தில் செக் இன், செக் அவுட் நேரம் முக்கியம். செக் அவுட் செய்ய அரைமணி நேரம் தாமதம் ஆனாலும் ஒருநாள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கலாம்.

அதுபோல தேவையான மருந்துப் பொருட்களை இங்கிருந்தே வாங்கிச் செல்ல வேண்டும். பிரிஸ்கிரிப்சன் எடுத்துச் சென்றால் அங்கு வாங்கிக் கொள்ளலாம் என்றாலும், நமது நாட்டில் கிடைக்கும் சில மருந்துகள் வெளிநாட்டில் கிடைக்காமல் போகலாம் அல்லது அதற்கு அதிக செலவாகலாம்.

சுற்றுலா காப்பீடு

வெளிநாட்டுச் சுற்றுலாவுக்கு என்றே சுற்றுலா காப்பீடு உள்ளது. சுற்றுலா சென்ற இடத்தில் நேரும் அசம்பாவிதங்களால் இழப்புகள் ஏற்படுமாயின் இந்த காப்பீடு ஈடு செய்யும். மேலும் இதன் மூலம் வெளிநாட்டு மருத்துவமனைகளில் மருத்துவச் சேவைகளையும் பெறலாம். இந்த காப்பீடு சுற்றுலா முடிந்து திரும்பியதும் காலாவதியாகிவிடும்.

சுற்றுலா கடன்

இதர கடன்களைப் போலவே சுற்றுலா செல்வதற்கும் கடன் கிடைக்கிறது. மத்திய மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன, பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு ஏற்ப சுற்றுலாக் கடன் கிடைக்கும். பொதுத்றை மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன.

அவசியமான சில நடைமுறைகள்

வெளிநாடு சுற்றுலா செல்வதற்கு தேவையான பாஸ்போர்ட், விசா நடைமுறைகள் மற்றும் அந்தந்த நாடுகளில் தூதரக முகவரி, தொடர்பு எண்கள் போன்றவை எல்லா நாடுகளுக்கும் பின்பற்ற வேண்டிய பொதுவான நடைமுறைகள்தான். ஆனால் அந்தந்த நாடுகளின் சட்ட திட்டங்கள், மக்களின் உணர்வுகளை மீறக்கூடாது.

நமது உணவு வகை எதிர்பார்ப்புக்கு ஏற்ப கிடைக்காது என்றாலும், அந்த ஊரில் நமது உணவுகள் கிடைக்கும் இடங்களை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளலாம். நாம் செல்ல உள்ள நாட்டில் பயன்படுத்துவதற்கு ஏற்ப சிம்கார்டை இங்கே வாங்கிக் கொள்ளலாம். இங்கு பயன்படுத்தும் எண்ணை அப்படியே அங்கு சென்றும் பயன்படுத்தினால் தொலைபேசி கட்டணம் அதிகரிக்கும்.

வெளிநாட்டுச் சுற்றுலாவுக்கு நாம் மட்டுமே திட்டமிடுவதைவிட இந்த விவரங்கள் அடிப்படையில் அனுபவம் வாய்ந்த ஒரு சுற்றுலா ஏற்பாட்டாளரிடம் சேர்ந்து மேற்கொள்ள வேண்டும். விருப்பம் மற்றும் பட்ஜெட்டை பொறுத்து அவர்களே இந்த ஏற்பாடுகளையும் செய்ய வாய்ப்பு உள்ளது. சுற்றுலா ஏற்பாட்டாளர் மூலமாகச் செல்லும்போது சில சலுகைகளும் கிடைக்கலாம். 20 சதவிகிதம் வரை செலவு குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

சிறப்பான வெளிநாட்டுச் சுற்றுலாவை முன்கூட்டியே திட்டமிட்டால் சிக்கனமாகவும் அமையும்.

maheswaran.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்