புத்தக அலமாரி - 19.01.2015

By செய்திப்பிரிவு

Title: 31 Mantras for Personality Development

Author: Abhishek Thakore

Publisher: Pustak Mahal

ஒவ்வொரு விநாடியையும், ஒவ்வொரு மணிநேரத்தையும் மற்றும் ஒவ்வொரு நாளையும் எப்படி முழுமையானதாக வாழ்வது என்பதை, 31 நடைமுறை டிப்ஸ்களின் மூலம் கற்றுக்கொடுக்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

மாதத்தின் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு பயிற்சி என்ற ரீதியில் இவற்றைச் செயல்படுத்திப் பார்க்கும்போது, நமக்கும் வெற்றிக்குமான இடைவெளி படிப்படியாக குறைந்து கொண்டேவருவதை உணர முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.



Title: Personality Plus

Author: Florence Littauer

Publisher: Manjul Publishing House

நாம் நம்மை புரிந்துகொள்வதன்மூலம் எப்படி மற்றவர்களைப் புரிந்துகொள்வது என்பதைபற்றிச் சொல்கின்றது “பெர்சனாலிட்டி பிளஸ்” என்னும் இந்த புத்தகம். நம்மிடையே சிறந்தது எது என்று கண்டறிந்து, அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை தெரிந்துகொண்டோமானால், அடுத்து நடக்கும் அனைத்தும் வெற்றியே என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

மேலும், திறமைகளை பெருக்கிக்கொள்ளும் வழிமுறைகள் மட்டுமின்றி, தவறுகளைத் திருத்திக்கொள்வதற்கான கருத்துகளும் இடம்பெற்றிருப்பது இந்தப் புத்தகத்தின் தனிச்சிறப்பு.



Title: The Dynamics of Personality Development and Projection

Author: J. R. Bhatti

Publisher: Pearson Education

ஒருவரின் பெர்சனாலிட்டியைப் பொருத்தே, அவரின் செயல்திறன், முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சி போன்றவை அமைந்திருக்கின்றன. பெர்சனாலிட்டி மேம்பாட்டில் குடும்பத்தின் பங்கு என்ன என்பதைபற்றியும் தெளிவாக சொல்கின்றது முதல் பாகம்.

இதன் 2-வது பாகத்தில், கற்றுக்கொண்ட பெர்சனாலிட்டியை எப்படி செயல்படுத்துவது என்பதைபற்றியும், அவற்றை நேர்காணல், கலந்துரையாடல்கள் மற்றும் தேர்வுகளில் எவ்வாறு உபயோகிப்பது என்பதைபற்றியும் கூறியுள்ளார் ஆசிரியர்.



Title: Youngsters’ Guide for Personality Development

Author: S. P. Sharma

Publisher: Pustak Mahal

முழுக்க முழுக்க இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான பெர்சனாலிட்டியைப் பற்றிய புத்தகம் இது. அவர்களுக்கான பல பயனுள்ள தகவல்களையும், அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வழிமுறைகளையும் கொண்டுள்ளது இந்தப் புத்தகம்.

குறிக்கோள், கற்றல், பழக்கவழக்கம், சுய பரிசோதனை, விருப்பு வெறுப்புகள், பயிற்சி, சிந்தனை மற்றும் எளிமை போன்ற இளைய தலைமுறையினருக்கான ஏராளமான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புத்தகம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்