Title: How to be Better at … Creativity
Author: Geoffrey Petty
Publisher: Kogan Page India Private Limited
படைப்பாற்றல் என்பது நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கவேண்டிய மற்றும் இருக்கக்கூடிய ஒரு அம்சமாகும். இதுவே, புதிய சிந்தனைகளையும், அவற்றைச் செயல்படுத்தக்கூடிய வழிமுறைகளையும் குறிக்கின்றது.
ஆக்கப்பூர்வமான சிந்தனை மற்றும் செயல்பாடு என்பது அனைவருக்கும் தேவையான ஒன்று என்று சொல்லும் இந்த புத்தகம், இந்த திறன் ஒரு சிலருக்கு இயற்கையாகவே இருக்கின்றது என்றும் புதிய நுட்பங்களை கற்றுக்கொள்ளுதல் போன்றவற்றைப் பற்றியும் தெளிவாகக் கொடுத்துள்ளார் புத்தகத்தின் ஆசிரியர்.
Title: Creativity@Work
Author: Ramachander S
Publisher: Response Books
படைப்பாற்றல் திறன் கலையுணர்வு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, சூழ்நிலைக்கேற்ப படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தி, அதன்மூலம் நமது தினசரி வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தினைக் கொண்டுவருவது எப்படி என்று சொல்கின்றார் இந்த புத்தகத்தின் ஆசிரியர்.
ஒரு செயலின் மீதான பார்வையை வெவ்வேறு கோணத்தில் செலுத்தி, மாறுபட்ட சிந்தனையின் மூலம் ஒரு புதிய தொடர்பினை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்வது என்பதைப் பற்றியும் சொல்கின்றது இந்த புத்தகம்.
Title: Unleash Your Creativity
Author: Rob Bevan and Tim Wright
Publisher: Pearson Power
ஒருவருக்குள் இருக்கும் படைப்பாற்றல் திறனைப்பற்றி பேசுகின்றது இந்த புத்தகம். இதில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள், நமது சிந்திக்கும் திறன் எவ்வாறு படைப்பாற்றல் மிக்கதாக மாறுகின்றது என்பதைச் சொல்வதோடு மட்டுமல்லாமல், அதற்கான செயல்பாட்டு முறைகளையும் விளக்குவதாக அமைந்திருக்கின்றது.
மேலும், பணியிடத்தில் படைப்பாற்றல், படைப்பாற்றலுக்கான சூழ்நிலை, அதற்கான சிந்தனை போன்ற 52 ஐடியாக்களை கொடுத்துள்ளனர் புத்தகத்தின் ஆசிரியர்கள்.
Title: Creativity for Managers
Author: Alan Barker
Publisher: Excel Books
ஒரு செயலின் தரம், படைப்பாற்றல் இல்லாமல் அர்த்தமுள்ளதாக மாறாது என்கின்றார் ஆசிரியர் ஆலன் பார்கர். இன்றைய மேலாண்மை துறையில் படைப்பாற்றல் என்பது ஒரு நேர்த்தியான திறனாக பார்க்கப்படுகின்றது என்று சொல்லும் ஆசிரியர், அதனை எவ்வாறு மேம்படுத்தி, தினசரி நடைமுறைகளில் தக்கவைத்துக்கொள்வது என்பதையும் கொடுத்திருக்கின்றார்.
3 பகுதிகளைக்கொண்ட இந்த புத்தகத்தில், படைப்பாற்றலுக்கான பயிற்சி, புதுமையான கருத்துகள் மற்றும் தீர்வுகள் பற்றிய நுணுக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago