சர்வதேச முதலீட்டாளர்கள் குஜராத்தில் குவிவது ஏன்?

By செய்திப்பிரிவு

2 வருடங்களுக்கு ஒரு முறை குஜராத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இதில் சில லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் குவிகின்றன. 2013-ம் ஆண்டு நடந்த மாநாட்டில் 17,700 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. சமீபத்தில் முடிந்த மாநாட்டில் 22,000 விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன.

சர்வதேச முதலீட்டாளர்கள் குஜராத்தில் குவிவது ஏன்?

# சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் அகமதாபாத் மற்றும் சூரத் ஆகிய நகரங்கள் இருக்கின்றன.

# 7517 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்திய கடற்கரையில் குஜராத்தில் மட்டும் 1600 கி.மீ அளவுக்கு கடற்கரை இருக்கிறது.

# குஜராத்தில் அதிக விமானநிலையங்கள் இருக்கின்றன.

# 16 உள்நாட்டு விமான நிலையங்களும் 1 சர்வதேச விமான நிலையமும் இருக்கின்றது.

# ஜோதிராம் யோஜனாவின் கீழ் குஜராத்தில் இருக்கும் அனைத்து கிராமங்களுக்கும் 24 மணிநேரமும் மின் வசதி செய்யப்பட்டிருக்கிறது.

# ஆசியாவில் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையம் குஜராத்தின் சரங்கா என்னும் இடத்தில் இருக்கிறது. இது 600 மெகாவாட் உற்பத்தி திறனுடையது.

# இந்தியாவின் முதல் தனியார் துறைமுகம் குஜராத்தில் (பிபாவவ்) இருக்கிறது. முந்த்ரா துறைமுகம் முழுவதும் எந்திர மயமாக்கப்பட்டது.

# நிர்வாகவியல் கல்லூரியான ஐஐஎம் அகமதாபாத்தில் இருக்கிறது. இது ஆசியாவின் 4 வது இடத்தில் இருக்கிறது.

# இந்தியாவின் பல நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் ஐஐஎம் அகமதாபாத்தில் படித்தவர்கள். ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன், தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன், ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் கேவி காமத், மறைந்த சி.கே பிரகலாத் உள்ளிட்டோர் முன்னாள் மாணவர்கள்.

# இந்தியாவில் அதிக மக்கள் பேசும் மொழிபட்டியலில் குஜராத்தி மொழி 7-வது இடத்தில் இருக்கிறது. 5.46 கோடி நபர்கள் குஜராத்தி பேசுகிறார்கள்.

# குஜராத்தில் வாழும் 43% மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்கிறார்கள்.

# இந்தியாவின் முக்கியமான பங்குச்சந்தையான பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் குஜராத்தியர்களால் உருவாக்கப்பட்டது.

# குஜராத் மாநிலத்தில் இருக்கும் 27 நதிகள் இணைக்கப் பட்டிருக்கின்றன. 98.86% குஜராத் கிராமங்கள் சாலை மூலம் இணைக்கப் பட்டிருக்கின்றன.

# பருத்தி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியாவில் முதலிடத்தில் குஜராத் இருக்கின்றது.

# இந்திய ஜிடிபியில் குஜராத்தின் பங்கு 7.14%

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்