Title: A Practical Guide to Mentoring
Author: David Kay and Roger Hinds
Publisher: Macmillan Publishers
ஊக்கமும் வழிகாட்டுதலும் ஒவ்வொருவருக்கும் அவரவரின் வாழ்க்கை நிலைகளுக்கேற்ப தேவையான ஒன்று. ஒருவரை ஊக்கப்படுத்தி அவரின் செயல்களுக்கு வழிகாட்டும்போது (மென்டாரிங் என்பது இதுதான்), அது அவரை வெற்றியை நோக்கியே கொண்டுசெல்லும்.
வழிகாட்டுபவருக்கும், வழிகாட்டப்படுபவருக்குமான அம்சங்களைக் கொண்டுள்ள புத்தகம் இது. மென்டாரிங் பற்றிய புதிய புரிதலுக்கும், ஏற்கெனவே அந்த ரோலில் பயணிப்பவருக்குமான ஏராளமான தகவல்களைக் கொடுத்துள்ளனர் புத்தகத்தின் ஆசிரியர்கள்.
Title: Mentoring in Action
Author: David Megginson
Publisher: Kogan Page Limited
மென்டாரிங், மனிதவள மேம்படுத்தலில் ஒரு குறிப்பிடத்தக்க உத்தி என்று சொல்லும் இந்த புத்தகம், அதனை எவ்வாறு திட்டமிட்டு, கட்டமைப்பது என்பதை தெளிவுபடுத்துகின்றது. ஒரு நிறுவனத்தின் கலாசாரம், எவ்வாறு இந்தக் கட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைச் சொல்வதோடு, அதனை நடைமுறைப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்துவது பற்றியும் விலாவாரியாக விவரிக்கின்றது.
கல்வி, மேலாண்மை மற்றும் மனிதவள துறைகளைச் சார்ந்தவர்களுக்கான மென்டாரிங் பற்றிய குறிப்புகளைக் கொண்டு இருப்பது கூடுதல் சிறப்பு.
Title: Mentoring
Author: Sunil Unny Guptan
Publisher: Response Books
ஒருவரது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துபவரே ஒரு சிறந்த மென்டாராவார் என்றும், அவரேதான் சாதாரண நிலையிலிருக்கும் ஒருவரை, உயர்ந்த நிலைக்கு வழிநடத்திச் செல்பவர் என்கிறார் இந்த புத்தகத்தின் ஆசிரியர் சுனில் உன்னி குப்தன்.
ஒரு நல்ல மென்டாருக்கான திறமை, குணம் மற்றும் தகுதிகள் என்ன என்பதைப்பற்றியும், அவரது மனதின் செயல்பாடு, முடிவெடுக்கும் திறன் போன்றவற்றைப்பற்றியும் தெளிவாக அலசுகின்றது இந்த புத்தகம்.
Title: Mentoring Entrepreneurs
Author: Brian Doyle and N Vincent O’Neill
Publisher: Prentice-Hall of India
மென்டாரிங் என்ற வார்த்தை அறிவுரை, யோசனை, ஆலோசனை போன்றவற்றையெல்லாம் தாண்டி பரந்து விரிந்த அர்த்தத்தினைக் கொண்டது. இந்தப் புத்தகம் மென்டார் மற்றும் அவரால் வழிநடத்தப்படுபவர் ஆகியோருக்கிடையேயான உறவின் புரிதலின் அவசியத்தை விரிவாகச் சொல்கின்றது.
இவர்களுக்கிடையே உள்ள பரஸ்பர நம்பிக்கையின் மூலமே, மென்டாரிங் என்ற பயணத்தில் அதன் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை சென்றடைய முடியும் என்கிறார்கள் இந்த புத்தகத்தின் ஆசிரியர்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago