Title: Simple Ways to Manage Stress
Author: Promod Batra
Publisher: Macmillan India Ltd.
இன்றைய பரபரப்பான உலகில், மன அழுத்தம் என்பது அனைவரையும் பாதிப்படையச்செய்யும் ஒரு விஷயமாகிவிட்டது. மன அழுத்தமே, பெரும்பாலான நோய்களுக்கு அடிப்படைக் காரணம் என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். எளிய வழிகளில் எவ்வாறு மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது என்று சொல்கின்றது இந்தப் புத்தகம்.
நல்ல சிந்தனை, நம்மை நம்மோடு மட்டுமே ஒப்பீடு செய்தல், பணத்தைப் போல நேரத்தை கருதுதல், நன்றி மற்றும் மன்னிப்பு போன்றவற்றின் மூலம் மன அழுத்தத்தை குறைக் கலாம் என்கிறது இந்தப் புத்தகம். மேலும், மற்றவர்களுக்கான நமது தியாகம் மற்றும் முடிந்தவரை எப்போதும் ஓய்வின்றி வேலை செய்து கொண்டிருப்பது போன்றவை மன அழுத்தத்திற்கான நல்ல தீர்வு என்கிறது இந்தப் புத்தகம்.
Title: 60 Second Stress Management
Author: Dr. Andrew Goliszek
Publisher: Magna Publishing Co. Ltd.
மன அழுத்தம் என்றால் என்ன? அதனை எவ்வாறு அறிந்துக்கொள்வது என்று சொல்லும் இந்தப் புத்தகம், பழக்கவழக்கங்களை மாற்றுவதன்மூலம் எவ்வாறு மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது என்பதைப்பற்றி விளக்குகின்றது. வெறும் அறுபது நொடிகளில் இதனை எப்படி உபயோகப்படுத்துவது என்பதற்கான விளக்கமான செயல்முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும், மனநலம், நேர மேலாண்மை போன்ற மன அழுத்தத்துடன் தொடர்புடைய பல காரணிகளைப் பற்றியும் சொல்கின்றது இந்தப் புத்தகம். ஓய்வு மற்றும் தியானம் போன்றவற்றின்மூலம் மன அழுத்தத்தை வெல்வதற்கான பயிற்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளது மேலும் சிறப்பு.
Title: Coping with Stress at Work
Author: Jacqueline M Atkinson
Publisher: Harper Collins Publishers
பணியிடத்தில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் அதற்கான தீர்வுகளைப் பற்றி சொல்கின்றது இந்தப் புத்தகம். மூன்று பகுதிகளைக்கொண்ட இதன் முதல் பகுதியில், மன அழுத்தத்தின் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தத்திற்கும் உடல் நலத்திற்கும் உள்ள தொடர்பினைப்பற்றி சொல்லப்பட்டுள்ளது.
இரண்டாவது பகுதியில், மன அழுத்தம் மற்றும் வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் பெர்சனாலிட்டி ஆகியவற்றைப்பற்றி தெளிவுபடுத்துகிறது.
மூன்றாவது பகுதியில், மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான வழிமுறைகளையும், அதற்குத் தேவையான ஆற்றலைப் பற்றியும் சொல்கின்றது. மேலும், பணியிடத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை தடுப்பது எப்படி என்பதைப்பற்றியும் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
Title: The 4-Lane Expressway to Stress Management
Author: Ajay Shukla
Publisher: Unicorn Books Pvt. Ltd.
மன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் அலசுகின்றது இந்தப் புத்தகம். மன அழுத்தத்தின் அடிப்படை, அதன் வளர்ச்சி மற்றும் தாக்கம் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. உடல், அறிவாற்றல், உணர்ச்சி மற்றும் தத்துவம் ஆகிய நான்கு வழிகளின்மூலம் மன அழுத்தத்தை குறைக்கும் முறைகளை எளிமையாகவும் எளிதில் புரிந்துக்கொள்ளும்படியும் கொடுத்துள்ளார் ஆசிரியர்.
மேலும், மன அழுத்தம், இன்றைய நவீன உலகின் சைலண்ட் கில்லர் என்று கூறும் ஆசிரியர், அதன் அறிகுறிகள் மற்றும் பாதிப்பு பற்றியும் சொல்லியிருக்கின்றார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago