வெற்றி மொழி - ஹென்றி டேவிட் தொரேயு

By செய்திப்பிரிவு

1817 முதல் 1862 வரையிலும் வாழ்ந்த ஒரு அமெரிக்க தத்துவ ஞானி. அவருடைய படைப்புகளில் சுற்றுச்சூழல்தனை அனுசரித்து வாழும் எளிமையான வாழ்க்கை முறையைச் சொல்லும் ’வால்டென்’ என்ற புத்தகம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்தப் புத்தகத்தில் பகவத்கீதையையும், கங்கை நதியின் புனிதம் பற்றியும் சொல்லியதன் மூலம் இந்திய கலாச்சாரத்தின் மீது அவர் வைத்திருந்த மதிப்பு தெரியவருகின்றது. தருமங்களை பின்பற்றாமல் செயல்படும் அரசுக்கு எதிரான மக்களின் ஒத்துழையாமை என்ற உத்தியை முதன்முதலில் கொண்டுவந்தவர் இவர். வாழ்வின் பெரும்பகுதியை மக்களை அடிமைத்தளையில் இருந்து விடுவிக்கும் முயற்சியில் பேச்சு மற்றும் எழுத்தில் செலவிட்டவர்.

பல சமயம் இவரை கிளர்ச்சிக்காரர் என்று ஆள்பவர்கள் சொன்னபோதிலும் "அரசாங்கம் என்ற ஒன்றே வேண்டாம் என நான் சொல்லவில்லை, நல்ல அரசாங்கம் ஒன்று வேண்டும் என்றுதான் சொல்கின்றேன்’’ என முழங்கியவர்.

# உங்கள் நம்பிக்கையை வைத்து முழுமையாக வாழுங்கள். உலகத்தையே உங்களால் புரட்டிப்போட முடியும்.

# ஒரே ஒரு முறை நடந்தால் அது தடமாக மாறாது. அதே போல் ஒரு விஷயத்தை ஒரே ஒரு முறை சிந்திப்பதன் மூலம் நமக்கு சரியான யோசனை கிடைக்காது.

# ஒரு போதும் பின்னோக்கிப் பார்க்காதீர்கள். நீங்களாக அந்தத் திசையில் போக நினைக்காதவரை.

# குறைந்த செலவுதனைக் கொண்ட ஆசைகளைக் கொண்டவனும் பணக்காரனே.

# நாம் நல்லவர்களாக இருந்தால் மட்டுமே போதாது. எதற்காவது உதவுபவர்களாகவும் இருக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்