சில்லரை வணிகத்தின் அடுத்த அவதாரம் e-commerce?

By இராம.சீனுவாசன்

e commerce எனப்படும் இணையத்தள சில்லறை வியாபாரம் இந்தியாவில் மிக வேகமாகப் பெருகிவருகிறது. ஒரு வியாபார நிறுவனத்தின் இணையத்தளத்தில் உள்ள பொருட்களின் விலைகள், அமசங்களை ஒப்பிட்டு ஒரு பொருளை வாங்க முடியும். நாம் கேட்கும் பொருளை நமது வீட்டிற்கே கொண்டுவந்து கொடுப்பதால், கடைத் தெருவுக்கு சென்று பல கடைகளை ஏறி இறங்கவேண்டிய அவசியம் இல்லை, அதற்கான நேரமும் செலவும் மிச்சம் என்பதால் e-commerce சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. e-commerce நிறுவனங்கள் அதிக அளவில் விலைக் கழிவு (discount) கொடுப்பதால் தான் இதனை நோக்கி மக்கள் செல்வதாக கூறுகின்றனர்.

e-commerceயின் வளர்ச்சி

இந்தியாவில் 2013 மட்டும் 2 பில்லியன் டாலருக்கு e-commerce வியாபாரம் நடந்ததாக தெரிகிறது. கடந்த நான்கு வருடங்களில் வருடம் தோறும் 59% இந்தத் துறை வளர்ந்துள்ளது. மொத்த சில்லறை வியாபாரத்தில் இது 1%விட குறைவுதான் என்றாலும், இதன் வளர்ச்சியும் முக்கியத்துவமும் பெருகி வருகிறது. மற்ற நாடுகளில் e-commerce வேகமாக வளர்வதை பார்க்க முடிகிறது. சீனாவில் e commerce இந்தியாவைவிட 12 மடங்கு அதிகம்.

அமெரிக்காவில் உள்ள அமேசான் என்ற e commerce நிறுவனம், WALMART, BEST BUY போன்ற சில்லறை வியாபார நிறுவனங்களை விட வேகமாக வளர்கிறது.

கூகிள் மற்றும் Forrester Consulting நிறுவனங்கள் இணைந்து செய்த ஆராய்ச்சியில் அடுத்த இரண்டு வருடத்தில் இந்தியாவின் e -commerce நிறுவனங்களின் வியாபாரம் 15 பில்லியன் டாலரை தொடும் என்று கூறுகிறது. இதில் 1௦௦ பில்லியன் வாடிக்கையாளர்கள் இருப்பார்கள் என்றும், அதில் 40 பில்லியன் பெண் வாடிக்கையாளர்கள் இருப்பார்கள் என்றும் இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. பெருநகரங்களில் உள்ள நுகர்வோர் தற்சமயம் இத்தனை பெரிதும் பயன்படுத்தினாலும், சிறு நகரங்களுக்கும் e-commerce வேகமாக பரவி வருவதாக இந்த அறிக்கை கூறுகிறது.

பல ஆய்வுகளில், e-commerce வாடிக்கையாளர்கள் இந்த முறையில் உள்ள வசதிகளை நன்கு புரிந்து வைத்துள்ளதாக தெரிகிறது. பிரபலமான நிறுவனங்களின் பொருட்களை வாங்குவதும் விற்பனைக்கு பின் உள்ள சேவைகளை கவனித்து வாங்குவதும் பெருகிவருகிறது.

பல நிறுவனங்களின் பொருட்களின் தரத்தையும், விலைகளையும் ஒப்பிட்டு வாங்க e-commerce உதவுதாக தெரிகிறது. பொருளை வீட்டிற்கே வந்து கொடுப்பதும், பொருளை பெற்றவுடன் அதன் விலையை கொடுக்கலாம் என்பதும், குறைபாடுள்ள பொருளை மாற்றும் வசதி அல்லது பணத்தை திரும்ப பெரும் வசதி என பல அம்சங்கள் நுகர்வோரை e-commerce பக்கம் இழுக்கிறது.

மொபைல் போன் வழியாக வியாபாரம் செய்ய நுகர்வோரை e-commerce நிறுவனங்கள் தூண்டு கின்றன. இதில் எப்போது வேண்டு மானாலும் எங்கிருந்தும் பொருட்களை பெறமுடியும் என்பதால் வியாபாரம் பெருகும் என்பது இந்நிறுவனங்களின் கணக்கு. electronics பொருட்கள், குறிப்பாக மொபைல் போன் e-commerce மூலம் அதிகம் விற்பனையாகும் பொருள். பெண்கள் அழகுசாதப் பொருட்களை வாங்குவதும் பெருகிவருகிறது. புத்தகங்கள், குறிப்பாக ஆங்கில புத்தகங்கள் மிக குறைந்த விலையில் வாங்க முடிகிறது.

ஆடைகள், காலணிகள், கம்ப்யூட்டர், மொபைல் போன் பாகங்கள் ஆகிய வையும் e-commerceசில் அதிகமாக விற்பனையாகும் பொருட்கள்.

e-commerce என்னும் சந்தை இடம்

இந்தியாவில் 5௦க்கும் அதிகமான e-commerce நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றில் மிகபிரபலமானவை ப்லிப்கார்ட் (flipkart), அமேசான் (Amazon) மற்றும் சனப்டீல் (snapdeal) இவை எல்லாமே அதிக அளவில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கொண்டவை.

சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை இந்தியா அனுமதிக்காதால், இந்நிறுவனங்கள் “சந்தை இடம்” (market place) e-commerce நிறுவனங்களாக உள்ளன. இந்த e-commerce நிறுவனங்கள் நேரடியாக தங்கள் பொருட்களை விற்பதில்லை. மாறாக, இவை விற்பனையாளருக்கும், வாங்குபவருக்கும் ஓர் இணைப்பு பாலமாக உள்ளனர். எனவே இவர்களின் இணையத்தளங்கள் ஒரு சந்தை இடத்தை போல் இருக்கின்றன. இதில் உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நுகர்வோருக்கு நேரடியாக விற்கலாம். அதற்கான விலைகளையும், விலைக் கழிவுகளையும் விற்பனையாளரே நிர்ணயிக்கலாம்.

பெருகி வரும் e-commerce முதலீடுகள்

இந்திய சில்லறை வியாபாரத்தில் e-commerce மிக முக்கிய பங்குவகிக்கப் போகிறது என்பது, இத்துரையில் ஏற்படும் முதலீடுகளின் போக்கு தெரிவிக்கிறது. கடந்த வருடம் பிலிப்கார்ட் 1.25 பில்லியன் டாலரும், சனப்டீல் 233 மில்லியன் டாலர் முதலீடுகளை திரட்டியுள்ளன.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமேசான் 2 பில்லியன் டாலர் இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. ராடன் டாட்டா சனப்டீல் பங்குகளை வாங்கியுள்ளார். பிர்லா நிறுவனமும் e-commerce முதலீடைப் பற்றி யோசித்துவருகிறது. இதுவரை e-commerce நிறுவனங்களை எதிர்த்து வந்த பிக் பசார் (Big Bazar) தலைவர் கிஷோர் பியானி (Kishor Biyani) அமேசானுடன் இணைந்து e-commerceல் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.

இன்போசிஸ் முன்னால் தலைவர் நாராயண மூர்த்தியின் Catamaran Ventures என்ற நிறுவனமும் e-commerce முதலீடுகளை செய்துள்ளது.

வளர்ச்சியுடன் பலச் சிக்கல்களையும் e-commerce நிறுவனங்கள் சந்திக் கின்றன. வியாபாரத்தை விரிவுபடுத்த, மற்ற போட்டியாளர்களை சந்தை யிலிருந்து துரத்தும் நோக்கத்தோடு e-commerce நிறுவனங்கள் அதிக விலைக் கழிவு கொடுப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றன.

இவை வியாபார வரி ஏய்யிப்பு செய்வதாக சில மாநிலங்கள் கூற துவங்கியுள்ளன. நுகர்வோரும் குற்றம் சாட்ட துவங்கியுள்ளனர். இவற்றைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

- இராம.சீனுவாசன்
seenu242@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்