Title: The Truth about Leadership | Author: James M Kouzes and Barry Z Posner
Publisher: Jossey-Bass
எந்த மாதிரியான தலைவர் வெற்றி பெறுகிறார், எந்த மாதிரியான தலைவர்கள் இன்றைய உலகிற்குத் தேவைப்படுகிறார்கள் என்பதைச் சொல்லும் புத்தகம் இது. ஒரு சிறந்த தலைவரை உருவாக்கத் தேவைப்படும் தகுதிகளையும், அதற்கான செயல்களையும் அளித்திருக்கிறார்கள் இந்த புத்தகத்தின் ஆசிரியர்கள். நம்பகத்தன்மையே (Trust) தலைமைக்கான அடிநாதம் என்று சொல்லும் இந்த புத்தகத்தை ஒவ்வொருவரும் தன் தலைமைப் பயணத்தில் கட்டாயம் படிக்க வேண்டியது அவசியம்.
Title: The Key to Great Leadership | Author: Peter Burwash |
Publisher: Jaico Publishing House
இன்றைய சூழ்நிலையில் தொழில் ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கைக்கோ தலைவருக்கான தகுதிகள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. இவற்றைப் பெறுவது எப்படி? என்பதைப்பற்றி சொல்லும் புத்தகம் இது. அணுகுமுறை, நேரத்தை திட்டமிடல், தொலைநோக்குப்பார்வை, சுய ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சி போன்ற இருபத்தைந்து தகுதிகளைப் பற்றி தெளிவாக தந்திருக்கிறார் ஆசிரியர். தலைவருக்கான தகுதிகளை விரும்பும் அனைவருக்குமான சிறந்த புத்தகம்.
Title: Reality-Based Leadership | Author: Cy Wakeman
Publisher: Jossey-Bass
தலைவர்களுக்கான இன்றைய தேவை என்ன என்பதைப் பற்றி துல்லியமாக சொல்லும் புத்தகம் இது. திட்டமிடலிலிருந்து வெற்றி வரைக்குமான அனைத்து நிலைகளைப் பற்றியும் எளிமையாக சொல்லியிருப்பது இந்த புத்தகத்தின் சிறப்பு. பணியிடத்தில் செயல்திறன் மற்றும் வெற்றியை நோக்கி குழுவை வழிநடத்தல் போன்றவற்றைப் பற்றி தனித்தனி பாகங்களாக இந்த புத்தகத்தில் சொல்லியிருக்கின்றார் ஆசிரியர். இதில் கூறப்பட்டுள்ள கருத்துகள் சவாலை எதிர்கொள்வதற்கு பேருதவியாக இருக்கும்.
Title: The Quality of Leadership | Author: Michael Hansbury
Publisher: Epitome Books
தனது குழுவினரை தொடர்ந்து ஊக்குவித்து, இலக்கினை நோக்கி அழைத்துச் செல்பவரே உண்மையான தலைவராக இருக்க முடியும். அப்படிப்பட்ட தலைவருக்கான தகுதிகள் அனைத்தும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்து இருக்கின்றது என்று சொல்லும் இந்த புத்தகம், அதை தட்டி எழுப்பி செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான வழிமுறைகளை தெளிவாகவும் எளிமையாகவும் தெரிவிக்கின்றது. பயத்தினை வெல்லும் திறன், தவறுகளிலிருந்து கிடைக்கும் பயன்கள்களை விலாவாரியாக தெரிவிக்கின்றது இந்த புத்தகம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago