நம் வாழ்வில் டீம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். வீடு, அலுவலகம், விளையாட்டு என எங்கே போனாலும் டீம் என்பதை எதிர்கொண்டேயாக வேண்டும். குண்டூசி செய்வதானாலும், ஏரோப்ளேன் செய்வதானாலும், வீடு கட்டுவதானாலும், அட ஏன் அவ்வளவு தூரம், இந்த செய்தித்தாளை உங்கள் வீட்டுக்கு கொண்டுவந்து சேர்ப்பதிலும் கூட டீம் வொர்க் இருக்கத்தானே செய்கின்றது. டீமின் தலைவர்களுக்கும், டீமின் அங்கத்தினர்களுக்கும் எவ்வாறு செயல்படுவது என்பதை சிறப்பாகச் சொல்லும் புத்தகம் இது.
Title: Creating Effective Teams: A Guide for Members and Leaders
Author: Susan A Wheelan
Publisher: Sage Publications
ஆறாயிரம் டீம் மெம்பர்களிடம் ஆராய்ச்சி செய்து எந்த மாதிரியான டீம் ஜெயிக்கும் என ஒவ்வொருவரிடமும் கேட்டு எழுதியுள்ள புத்தகம் இது. டீம் வெற்றிபெற அதில் இருப்பவர்களிடம் என்னென்ன குணாதிசயம் இருக்கவேண்டும் என ஒவ்வொருவரின் பார்வையிலும் தெரியும் விஷயங்கள், ஓற்றுமையாய் வேலை செய்ய முயலும் போது வரும் இடைஞ்சல்கள், பலங்கள், பலவீனங்களை நாமே நேரடியாகக் கேட்டுத்தெரிந்துகொண்ட அனுபவத்தை நமக்குத் தருகின்றது இந்தப் புத்தகம்.
Title : When Teams Work Best: 6000 Team Members and Leaders
Tell What It Takes To Succeed
Author : Frank Lafasto and Carl Larson
Publisher : SAGE Publications India Pvt Ltd
டீம் வொர்க்கின் மகத்துவத்தைச் சொல்லி அதை எப்படி மெம்பர்களுக்கு சொல்லித்தருவது என்பதை ஆழமாகச் சொல்லும் புத்தகம் இது. எப்படி உங்களுடைய மெம்பர்களை உற்சாகப்படுத்தி மோட்டிவேட் செய்வது, அவர்களுக்கு எப்படி நிஜத்தை சொல்லி கனவுலகில் வாழாமல் இருக்கச் செய்வது, நல்ல டீம் மெம்பரை மேலும் வளர்த்து பெரிய ஆளாகும் வகையில் டீமில் இருந்து எப்படி பிரித்து அனுப்புவது போன்றவற்றை அழகாகச் சொல்லியுள்ளனர் ஆசிரியர்கள்.
Title : Teach Your Team to Fish
Author : Laurie Beth Jones
Publisher : Crown Publishing Group
எல்ேலாரும் டீமில் இருக்கின்றோம், டீம் லீடராக இருக்கின்றோம் என்று சொல்லித் திரிகிறோம். ஆனால் டீமில் இருப்பவர்களின் அறிவு, அனுபவம், புத்திசாலித்தனம், உற்சாகம் போன்றவற்றை எப்படி அனைவருக்கும் பயன்படும் வகையில் செயல்படுத்தவேண்டும் என்று நம்மில் யாருக்காவது தெரியுமா? அனேகம் பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு வொர்க்-புக் போல் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் சாதாரண டீமை சூப்பர் டீமாக மாற்ற உதவும் எனலாம்.
Title : Go Team!: Take Your Team to the Next Level
Author : Ken Blanchard, Alan Randolph, Peter Grazier
Publisher : Berrett-Koehler Publishers
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago