பெரிய நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள் என்ற வரிசையில் ஒருவர் தொடங்கி அவரே செயல்படுத்தும் ஒரு நபர் நிறுவனங்களும் இப்போது சாத்தியமாகி வருகிறது. சாதாரண பெட்டிக்கடைக்கு ஒருவரே முதலாளி இருப்பதைப் போல, ஒரு சிறிய நிறுவனத்தைத் தொடங்கி ஒரு நபர் உரிமையாளராக திகழமுடியும். அதற்கு அரசு அளிக்கும் சலுகைகள், பாதுகாப்பையும் பெற முடியும்.
அங்கீகாரம்
உரிமையாளர் என்கிற அடையாளம் தருகிற மதிப்பை விட நிறுவன இயக்குநர் என்கிற அடையாளம் தருகிற மதிப்பும், வாய்ப்புகளும் அதிகம். நிறுவனம் என்கிற அடையாளம் தொழில் முனைவரின் கடன் வாங்கும் மதிப்பை உயர்த்தும்.
மூலதனம்
குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் தொழிலையும் நிறுவனமாகப் பதிவு செய்து கொள்ள முடியும். உரிமையாளர் நிறுவனமாக இருந்து முதலீடு திரட்டுவதைவிடவும் ஒருநபர் நிறுவனமாக இருந்து முதலீடு திரட்டுவது எளிது. ஒருநபர் நிறுவனத்தின் முடிவு எடுப்பது ஒரு இயக்குநர் என்பதால் முடிவுகள் விரைந்து எட்டப்படும்.
சொத்துகளை இழக்க வேண்டாம்
தனிநபரை உரிமையாளராக கொண்ட நிறுவனத்தின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால் தொழிலுக்கு என்று வாங்கிய கடன்களுக்காக அவர் சொந்த சொத்துகளையும் இழக்க வேண்டியிருக்கும். ஆனால் நிறுவனமாகப் பதிவு செய்து கொண்டால் தொழிலில் ஏற்படும் நஷ்டங்களுக்கு தொழில்முனைவர் தனது சொந்த சொத்துகளை இழக்க வேண்டியதில்லை.
கணக்குத் தணிக்கை
நிறுவனமாக பதிவு செய்துகொண்டால் நிதி ஆண்டின் ஆறு மாதத்துக்குள் தொழிலின் வரவு செலவு / லாப நஷ்ட விவரங்களை தணிக்கையாளர் கொண்டு தணிக்கை செய்ய வேண்டும். இந்த தணிக்கை அறிக்கையை நிறுவனங்கள் பதிவாளரிடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தனிநபரை உரிமையாளராகக் கொண்டு இயங்கும்போது, நிறுவன கணக்கு மற்றும் வரவு செலவுகளை தணிக்கை செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை. வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கு ஏற்ப வரவு செலவுகளைப் பார்த்தால் போதும்.
இயக்குநர் கூட்டம்
தனி உரிமையாளர் அவரது போக்கிற்கு தொழிலை நடத்தலாம். கூட்டம் நடத்த தேவையில்லை. ஆனால் நிறுவனங்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இயக்குநர் கூட்டம் நடத்தி, கூட்ட அறிக்கை பதிவு கொள்ள வேண்டும். ஆனால் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடத்த தேவையில்லை.
வாரிசு நியமனம்
உரிமையாளருக்கு பிறகு அவரது குடும்ப வாரிசு அல்லது அவர் விரும்பும் நபர்களோ தொழிலை தொடர்ந்து நடத்த முடியும். ஆனால் நிறுவனமாக பதிவு செய்து கொண்டால் நாமினி நியமிக்க வேண்டும். இயக்குநருக்கு பிறகு அவரால் நியமிக்கப்பட்ட நாமினி மட்டுமே தொழிலை தொடர்ந்து நடத்த முடியும்.
வரி
ஒரு நபர் நிறுவனத்தின் லாபத்திலிருந்து 30 சதவீத வரி செலுத்த வேண்டும். நிறுவனம் எவ்வளவு அதிகமாக வருமானம் ஈட்டினாலும் 30 சதவிகிதம் வரி செலுத்தினால் போதும். ஆனால் உரிமையாளர் நிறுவனமாக இருந்தால் தனிநபர் உச்ச வரம்பு அடிப்படையில் வருமான வரி செலுத்த வேண்டும்.
உரிமையாளராக இருந்து நிறுவனத்தை நடத்துவதை விடவும் இயக்குநராக இருந்து நடத்துவது பாதுகாப்பும், தொழிலை மேலும் வளர்க்க கிடைத்த வாய்ப்பாகவும் தொழில் முனைவோர்கள் இந்த சட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். நிறுவனங்கள் பதிவாளரிடம் ஒரு நபர் நிறுவனங்களை பதிவு செய்யலாம். சென்னையில் சாஸ்திரி பவனில் இதற்கென உள்ள அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago