அச்சம் உடையார்க்கு அரண்இல்லை; ஆங்கில்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு (குறள்: 534)
சமீபத்தில் வெளியான ‘அப்பா' திரைப்படம் பார்த்தீர்களா? மகனின் உண்மையான மன மற்றும் உடல் வளர்ச்சிக்காகப் பாடுபடும் சமுத்திரக்கனி, தன் மகனை அதிக மதிப்பெண்கள் பின்னால் ஓட வைக்கும் தம்பி இராமையா, இவர்களுடன் ஒரு மூன்றாவது வகை அப்பாவைக் காட்டுவார்கள்.
அவர் தன் மகனுக்கு அடிக்கடி சொல்லும் அறிவுரை `இருக்கிற இடம் தெரியாமல் இருந்து விட்டுப் போகணும்டா’ என்பது.
அதாவது ஒரு வம்புக்கும் போகக்கூடாது. நல்லது கெட்டதைக் கண்டுக்கக் கூடாது. ஜடம் மாதிரி எதற்கும் அலட்டிக் கொள்ளக்கூடாது.
இம்மாதிரி மனிதர்களை நாம் அலுவலகங்களிலும் பார்க்கலாம். அவர்கள் நிறுவனத்தின் மேலதிகாரிகளாக இருந்துவிட்டால் முடிந்தது கதை!
இவர்கள் உருப்படியாக எதுவும் செய்யாமல் சும்மா காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பார்கள். மேஜை மேலிருக்கும் பேப்பர் வெயிட்டை பம்பரம் மாதிரி விடாமல் சுற்றிச் சுற்றி வேடிக்கை பார்ப்பார்கள்!
எனது வங்கியில் கிளை மேலாளர் ஒருவர் அப்படித்தான். அவர் பெயர் குமார் என்று சொல்லவா வேண்டும்?
அவரிடம் ஒரு நாள் விடுப்புகூட வாங்கிவிட முடியாது. விண்ணப்பம் கொடுத்து நாளாகி விட்டதே என்று கேட்கப் போனால் நம்மை உட்கார வைத்து தேவையில்லாத விஷயங்களைப் பேசி அவராகவே சிரித்துக் கொள்வார்!
வேதனை என்னவென்றால் 45 நிமிட போராட்டத்திற்குப் பின்னரும் விடுப்பில் செல்லும் முந்தைய நாள் மீண்டும் அனுமதிக்காகத் தொடர்பு கொள்ளச் சொல்வார்!
நம்ம குமாரிடம் ஒரு கார் கடன் கொடுப்பதற்கு விண்ணப்பம் கொடுத்தால், ‘கோப்பை வைத்துவிட்டுப் போங்கள்' என்பார். மறுநாள் ஞாபகப்படுத்தினால் எனக்குத் தெரியாதா என்பார்.
இரண்டு நாள் கழித்துக் கேட்டால், புதிய விபரங்களைக் கொண்டுவரச் சொல்வார்!
அவருக்குக் கீழ் வேலை செய்தவர்கள் நல்ல அனுபவசாலிகள்; திறமைசாலிகள்.
மனுதாரரை சல்லடைபோட்டுச் சலித்துவிடக் கூடியவர் கள். யாரும் உடனே நம்பிக்கையுடன் ஒப்புதல் கையெழுத்துப் போடலாம்.
ஆனால் நம்ம குமாரோ எதற்கு ரிஸ்க் என்று அஞ்சி எதிலும் கையெழுத்துப் போடுவதில்லை. வாடிக்கையாளர் விட்டுப் போய் விடுவாரே என்று அலட்டிக் கொள்ளவும் மாட்டார்.
‘முடிவெடுக்காமல் இருப்பது தான் ஒருவர் எடுக்கக்கூடிய மிகத் தவறான முடிவு' என ஜான் பீஸ் சொன்னது சரி தானே?
உத்தியோகம் புருஷ லட்சணம் என்பார்கள். உத்தியோகத்தில் மேலாளருக்கு, நிர்வாகிக்கு லட்சணம் எது? தீர ஆராய்ந்து,தயங்காது முடிவெடுப்பதுதானே! ‘தைரியமும் தன்னம்பிக்கையும் தான் முடிவெடுப்பதன் ஆதாரங்கள்' என்பார் மைக் கிரிய்வெஸ்கி!
பணியில் குமார் காட்டிய அலட்சியம் காரணமாக அவருக்கு வங்கி வழங்கியிருந்த கடன் அளிக்கும் அதிகாரங்கள் பயனற்றுப் போயின.
அவரிடம் பணியிலிருந்தவர்களின் திறமைகள் வீணாயின. நாட்டில் பெரிய நல்ல வங்கியாயிருந்தும் அவரால் அக்கிளையை முன்னேற்ற முடியவில்லை!
உள்ளத்தில் அச்சம் உள்ளவர்களுக்கு அவர்களைச் சுற்றிப் பெரிய கோட்டை இருந்தாலும் பயனில்லை. அதுபோல அலட்சியமாய் இருப்பவர் களுக்கு எல்லாச் செல்வங்களும் இருந்தும் பயனில்லை என்கிறது குறள்.
somaiah.veerappan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago