உருக்கு இறக்குமதி விவகாரம்: அமெரிக்கா மீது வழக்கு தொடரும் இந்தியா!

By செய்திப்பிரிவு

இந்தியாவின் கதவுகள் எப் போது திறக்கும்? கோழிக் கால்களை இந்தியச் சந்தைக்கு அனுப்பலாம் என காத்திருக்கிறது அமெரிக்கா. உலக வர்த்தக அமைப்பின் தீர்ப்பை ஏற்று அமெரிக்க கோழிகளை இறக்குமதி செய்ய இந்தியாவும் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த விஷயத்தில் அமெரிக்காவுக்கு வெற்றி.

இப்போது இந்தியாவின் முறை. அமெரிக்காவை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பில் (டபிள்யூடிஓ) வழக்கு தொடரப் போகிறது இந்தியா.

இந்தியாவிலிருந்து அமெரிக்கா வுக்கு ஏற்றுமதியாகும் `கார்பன் ஸ்டீல்’ எனப்படும் உருக்கு தயாரிப்புகளுக்கு அமெரிக்கா சிவிடி எனப்படும் கூடுதல் வரியை விதிக்கிறது. இது டபிள்யூடிஓ ஒப்பந்த விதிகளுக்கு எதிரானதாகும்.

இந்திய உருக்கின் மீது கூடுதல் வரி விதிப்பதன் மூலம் அமெரிக்க உற்பத்தியாளர்கள் இந்திய உருக்கை வாங்குவது குறையும். இது தொடர்பாக அமெரிக்க அரசிடம் சுட்டிக் காட்டியும் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை. இதையடுத்து இப்பிரச்சினையை டபிள்யூடிஓ கவனத்துக்குக் கொண்டு சென்றதோடு இப்பிரச்சினையைத் தீர்க்க 16 மாத கால அவகாசம் இந்தியா அளித்துள்ளது.

அதாவது டபிள்யூடிஓ ஒப்பந்த விதிகளை அமல்படுத்த ஒரு நாட்டுக்கு குறைந்தபட்சம் 16 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும் என்பது டபிள்யூடிஓ விதிகளில் ஒன்றாகும்.

இந்த கால அவகாசம் இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிந்துவிட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தை சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த மாதம் டபிள்யூடிஓ விதிகளை பூர்த்தி செய்யவில்லை என காரணம் காட்டி இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா 45 கோடி டாலர் அளவுக்கு அபராதம் விதித்தது. இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில உருக்கு தயாரிப்புகளுக்கு சிவிடி விதித்தது சரியல்ல என டபிள்யூடிஓ தீர்ப்பளித்தது. இது இந்தியாவுக்கு சாதகமான தீர்ப்பாக அமைந்தது.

டபிள்யூடிஓ ஒப்பந்த விதிகளுக்கு ஏற்ப உள்நாட்டு விதிகளை அமெரிக்க அரசு மாற்ற வேண்டும். ஆனால் அவ்விதம் மாற்றாததால் சிவிடி வரி விதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் உருக்கு தயாரிப்புகளில் 10 பொருள்களுக்கு சிவிடி விதிக்கப்படுகிறது. ஆனால் உறுதியற்ற வரி விதிப்பால் 7 தயாரிப்புகள் கடும் பாதிப்புக்கு உள்ளாவதாக இந்திய வர்த்தக அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.

முதலில் இது தொடர்பாக குறை கேட்பு மையத்திடம் முறையிட்ட பிறகு, தீர்வு காணப்படாவிடில் மட்டுமே தீர்ப்பாயத்தில் முறையிட வேண்டும் என்ற விதி உள்ளது.

இதுவரை குறைதீர்ப்பு மையம் தீர்வு காணவில்லை. தீர்ப்பாயத்தில் நியாயம் கிடைக்கும் என நம்பி முறையீடு செய்ய உள்ளது.

கோழி இறக்குமதி விவகாரம் மற்றும் சூரிய மின்னுற்பத்தி உதிரி பாக விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான தீர்ப்பு கிடைத்தது.

உருக்கு விவகாரத்தில் இந்தியா வுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என நம்பலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்