காரிலிருந்து விமானத்துக்கு...

By செய்திப்பிரிவு

விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானத்தில் செல்லலாம். இதில் என்ன புதுமை இருக்க முடியும். வழக்கமாக அனைவரும் செய்வதுதானே என்று தோன்றலாம்.

அதிலும் ஆட்டோ மொபைல் பகுதியில் இந்தத் தலைப்பு கொஞ்சம் பொருந்துமா, இல்லையா என்ற குழப்பம் ஏற்படலாம். கார்களுக் கான உதிரி பாகத்தைத் தயாரிக்கும் நிறுவனமான ``ஏகுஸ்’’ தற்போது விமான உதிரி பாகங்களைத் தயாரிக்கப் போகிறது.

ஏகுஸ் நிறுவனம் பிரிசிஷன் மெஷினிங் நிறுவனமாகும். ஷீட் மெட்டல் ஃபேப்ரிகேஷன் எனப்படும் தகடுகளை தேவையான அளவுக்கு தயாரித்து அளிக்கிறது.

ஆட்டோமொபைல் துறை மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில்துறைக்குத் தேவையான பாகங்களை அளித்து வந்த இந்நிறுவனம் விமானங்களுக்கான உதிரி பாகத் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரான் சைச் சேர்ந்த சிரா எனும் நிறுவனத்தை ஏகுஸ் நிறுவனம் வாங்கியது. இந்நிறு வனம் விமான உதிரி பாகம் தயாரிப்பு மற்றும் சோதனை மையங்களைக் கொண்டுள்ளதாகும். பிரிசிஷன் மெஷி னிங், அசெம்பிளி மற்றும் உதிரி பாக சோதனை மையங்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது.

குறிப்பாக விமானம் தரையிறங்கும்போது பயன்படுத்தப் படும் லேண்டிங் கியர் சார்ந்த உதிரி பாகங்கள் தயாரிப்பில் இந்நிறுவனம் முன்னணியில் உள்ளது. விமான தயா ரிப்பு நிறுவனங்களான டசால்ட், சாஃப் ரான், யுனைடெட் டெக்னாலஜிஸ் ஏர் கிராப்ட் சிஸ்டம்ஸ் (யுடிஏஎஸ்) ஆகியன இந்நிறுவன வாடிக்கையாளராவர்.

யுடிஏஎஸ் நிறுவனம் ஏகுஸ் நிறு வனத்தின் பிரதான வாடிக்கையாளராக மாறியுள்ளது. கடந்த ஆண்டு டெக்ஸாஸ் மாநிலத்தில் செயல்படும் டி அண்ட் கே மெஷின் நிறுவனத்தை ஏகுஸ் வாங்கியது. இதன் மூலம் வட அமெரிக்காவில் விமான உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனத்தை வாங்கிய முதலாவது இந்திய நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது ஏகுஸ்.

1997-ம் ஆண்டு குவெஸ்ட் குளோபல் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 2007-ம் ஆண்டு ஆட்டோமொபைல் உதிரி பாகங்களைத் தயாரிக்கத் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2014-ல் இந்நிறுவனம் ஏகுஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் ஆட்டோமொபைல் உதிரி பாகங்களைத் தயாரித்து வந்தாலும், நீண்ட கால இலக்கு விமான உதிரி பாகத் தயாரிப்பில் ஈடுபடுவதுதான் என்று மெலிகரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு நிறுவன வளர்ச்சிக்காக 1.60 கோடி டாலரை முதலீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்நிறுவனம் செய்த முதலீடு 1.20 கோடி டாலராகும்.

ஏர் பஸ் நிறுவனத்துக்கு ஒரு லட்சம் டைட்டானியம் பாகங்களைத் தயாரித்து அளிக்க உள்ளது ஏகுஸ். அடுத்த 7 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் இதே அளவிலான உதிரி பாகங்களை சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்நிறுவனம் நிர்ணயித் துள்ள இலக்கை அடுத்த நான்கு ஆண்டுகளில் நிச்சயம் எட்ட முடியும்.

இந்நிறுவனம் ஏர்பஸ் ஏ 320 விமானங்களில் பயன்படுத்தக் கூடிய உதிரி பாகங்களைத் தயாரிக்க உள்ளது. விமானத்துக்குத் தேவையான 200 முதல் 300 வகையான உதிரி பாகங்களைத் தயாரித்து அளிக்கும் அளவுக்கு நிறுவனம் தகுதி பெற்றுள்ளதாக மெலிகரி குறிப்பிட்டுள்ளார்.

ஏகுஸ் நிறுவனம் ரிலையன்ஸின் துணை நிறுவனமான ஆல் மெட்டல் சர்வீசஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் பிளாட்டினம், அலுமினியம் மற்றும் உருக்கு உள்ளிட்ட உலோகங்களில் விமான உதிரி பாகம் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்கள் தடையின்றி கிடைக்க வழி செய்து கொண்டுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 6 லட்சம் சதுர அடி பரப்பில் 21 தொழில் நிறுவனங்களை உள்ளடக்கியதாக ஒரு பிரிவை உருவாக்கியுள்ளது ஏகுஸ்.

இந்தியாவுக்கு அடுத்த 20 ஆண்டுகளில் 1,600 விமானங்கள் தேவைப்படும் என ஏர்பஸ் நிறுவனம் கணித்துள்ளது. வளமான எதிர்காலத்தை கணித்து ஆட்டோமொபைல் உதிரி பாகத் தயாரிப்பிலிருந்து விமான உதிரி பாகத் தயாரிப்புக்கு மாறிய ஏகுஸ் நிறுவனத்தின் இலக்கு தொட்டு விடும் தூரம்தான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்