சமீப காலத்தில் நிதிச்சேவை துறையில் கொண்டு வரப்பட்ட முக்கியமான புதுமை எஸ்.ஐ.பி. (systematic investment plan) முறை. இதற்கு முதலீட்டாளர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. புதிதாக வரும் முதலீட்டாளர்கள் எஸ்ஐபி என் பது ஒரு முதலீடு முறை என்பதை தாண்டி அதுவே முதலீடு என்று நினைக்க கூடிய அளவுக்கு முதலீட் டாளர்களிடம் பிரபலமாகி இருக்கிறது.
எஸ்ஐபி முறையில் முதலீடு செய் வது சிறந்ததும் கூட. சீரான முறையில் சேமிக்க முடியும். சம்பளம் வங்கிக்கு வந்தவுடன் செலவு செய்வதற்கு முன் பாக சேமிக்க முடியும் என பல நன்மை கள் இருக்கிறது. இருந்தாலும் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வதனால் மட்டுமே அது சர்வரோக நிவாரணி யாக அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் என சொல்ல முடியாது. எஸ்ஐபி முறை யில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. அதனையும் முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மொத்த முதலீடு vs எஸ்ஐபி
எஸ்ஐபி முறையில் சிறுக சிறுக முதலீடு செய்தால் கூட 20 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய முதலீடு கிடைக்கும். தவிர சந்தையின் ஏற்றம் மற்றும் இறக்கம் பற்றிய கவலை இல்லாமல் முதலீடு செய்யலாம். ஆனால் சரியான பண்ட்களில் முதலீடு செய்யும் போதுதான் எஸ்ஐபியின் பலன் முதலீட்டாளர்களுக்கு முழுமையாகக் கிடைக்கும். தவறான பண்ட்களில் முதலீடு செய்யும் பட்சத்தில் மிகப்பெரிய வாய்ப்புகளை இழக்க நேரிடும்.
உதாரணத்துக்கு லார்ஜ் கேப் பிரிவில் சிறப்பாக செயல்பட்டு வரும் குவாண்டம் லாங்டெர்ம் பண்டில் மாதம் 10,000 ரூபாயை கடந்த பத்து ஆண்டுகளில் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக்கொண்டால், நீங்கள் முதலீடு செய்திருக்கும் தொகை ரூ.12 லட்சம். ஆனால் உங்களுக்கு ரூ.27.80 லட்சம் கிடைக்கும். ஆனால் லார்ஜ்கேப் பிரிவில் மோசமாக செயல்பட்டுவரும் ஜே.எம் ஈக்விட்டி பண்டில் இதே தொகையை கடந்த பத்தாண்டுகளில் மாதம் ரூ.10,000 முதலீடு செய்திருந்தால், உங்களது ரூ.12 லட்சம், ரூ.18.5 லட்சமாக மட்டுமே உயர்ந்திருக்கும்.
சதவீத அடிப்படையில் பார்க்கும் போது குவாண்டம் லாங்க் டேர்ம் ஈக்விட்டி பண்ட் ஆண்டுக்கு 16 சதவீதம் வழங்கி இருக்கிறது. ஆனால் ஜேஎம் ஈக்விட்டி ஆண்டுக்கு 8.5 சதவீதம் மட்டுமே வருமானத்தை கொடுத்திருக்கிறது. இந்த இரு பண்ட்களிலும் மொத்த முதலீட்டின் மீதான வித்தியாசம் மிகவும் அதிகமாக இருக்கும். இருந்தாலும் மொத்தமாக 12 லட்ச ரூபாயை மோசமாக செயல்படும் பண்டில் முதலீடு செய்ய கூடாது.
அதனால் எஸ்ஐபியில் முதலீடு செய்வது தவறு என்னும் முடிவுக்கு வருவதைவிட, முதலீடு செய்திருக்கும் பண்டின் செயல்பாட்டினை ஓர் ஆண் டுக்கு ஒருமுறை மதிப்பீடு செய்வது நல்லது. இது அசவுகர்யமானது என்றாலும் பாதுகாப்பானது.
பங்குச் சந்தைக்கு அல்ல
மியூச்சுவல் பண்ட்களில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் இந்த முறையை பங்குச் சந்தைக்கு எடுத்துச்செல்வது நல்லதல்ல. பல புரோக்கரேஜ் நிறுவனங்கள் பங்கு முதலீட்டுக்கு எஸ்ஐபி முறையை பரிந்துரை செய்கின்றன. ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கொள்வது நல்லது. தனிப்பட்ட பங்குகளில் தொடர்ந்து ஒரே பங்கினை வாங்கும் பட்சத்தில் போர்ட்போலியோவின் ரிஸ்க் அதிகமாகும். நீங்கள் முதலீடு செய்யும் பங்கின் விலையில், சந்தையின் சூழ்நிலை மற்றும் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப ஏற்ற இறக்கங்கள் இருக்கும். எவ்வளவு நல்ல பங்காக இருந்தாலும் அதிக விலைக்கு வாங்குவது சரியான ஆலோசனை கிடையாது. அதனால் பங்குகளில் எஸ்ஐபி முறையை பின்பற்றுவது மிகப்பெரிய ரிஸ்க்காக அமையும்.
அதேபோல திமேட்டிக் பண்ட்களில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வதையும் தவிர்க்கலாம். உதாரணத்துக்கு வங்கித்துறை பண்ட்கள், பார்மா பண்ட்கள் என பல துறை சார்ந்த பண்ட்கள் இருக்கின்றன. இதுபோன்ற பண்ட்கள் சுழற்சி அடிப்படையில் செயல்படுபவை. அதனால் குறிப்பிட்ட காலத்தில் சிறப்பாகவும், குறிப்பிட்ட காலத்தில் மோசமாகவும் செயல்படும். இந்த வகையான பண்ட்களில் முதலீடு செய்யும் காலம் மற்றும் வெளியே எடுக்கும் காலம் முக்கியம்.
எஸ்ஐபி முறையில் முதலீடு செய் வதே சந்தையின் ஏற்ற இறக்கங்களைப் பற்றி அச்சமில்லாமல் முதலீடு செய்வதற்காக உருவாக்கப்பட்டவை. ஆனால் இந்த முறையில் காலத்தைப் கணிக்க வேண்டிய திமேட்டிக் பண்ட் களில் முதலீடு செய்வதற்கு முயற்சிக் கக்கூடாது. முதலீடு செய்வதற்கு கூடு தல் தொகை இருந்தாலும் சிறப்பாக செயல்படும் டைவர்சிபைடு மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யலாம்.
எப்போது எஸ்ஐபி?
அனைத்து வகையான சந்தை சூழ் நிலைகளில் எஸ்ஐபி முறை நல்ல வருமானத்தைத் கொடுக்காது. உதாரணத்துக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வதை விட மொத்தமாக முதலீடு செய்திருப்பதன் மூலம் நல்ல ஏற்றம் கிடைத்திருக்கும். மொத்தமாக முதலீடு செய்வதன் மூலம் ஆண்டுக்கு 19.5 சதவீத வளர்ச்சியும். எஸ்ஐபி முறை யில் 14.5 சதவீத வளர்ச்சி மட்டுமே கிடைத்திருக்கும். எப்போது மொத்தமாக முதலீடு செய்வது, எப்போது எஸ்ஐபி முறையில் தொடர்வது என்பதை எளிதாக கண்டுபிடிக்கலாம். இந்திய பங்குச் சந்தையின் பிஇ விகிதம் 15-க்கு கீழ் இருந்தால் மொத்தமாக முதலீடு செய்யலாம். 22-க்கு மேல் இருந்தால் எஸ்ஐபியில் தொடரலாம்.
- aarati.k@thehindu.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago