வினைக்குஉரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்(குறள்: 518)
தற்பொழுது இந்தியாவில் உள்ள மென்பொருள் நிறுவனங்களை வரிசைப் படுத்துங்கள் பார்ப்போம். இது தெரியாதா, டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ என்கின்றீர்களா?
அண்ணே அது பழைய கதை! இப்ப காக்னிசன்ட் இரண்டாவது இடத்தைப் பிடிச்சாச்சு! அப்படியா, அதன் பங்குகளை வாங்கலாமே என எண்ண வேண்டாம்! அதற்கு நியூயார்க் பங்குச் சந்தைக்கு போகணும்!
சிடிஎஸ் எனச் செல்லமாக அழைக்கப்படும் இந்த நிறுவனத்தின் முதன்மை அதிகாரியாக இருப்பவர் பிரான்சிஸ் டி’ சௌசா எனும் இந்தியர். மென்பொருள் நிறுவனங்களின் தலைவர்களில் இவருக்குத்தான் வயது குறைவாம்! ஆனால் சம்பளங்களை ஒப்பிட்டால் இவருக்குத் தான் அதிகமாம்! 48 வயதில் ஆண்டுக்குச் சுமார் 80 கோடி ரூபாய்! வெற்றியின் இரகசியம்?
விக்கிப்பீடியாவைப் பாருங்கள், சிஃபியை-ஐயும் படியுங்கள். பணியாளர்களுக்குரிய சுதந்திரமும், முக்கியத்துவமும் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதுதான் எனப் புரியும்!
இவர் தலைமையில், கடந்த பத்து ஆண்டுகளில் பணியாளர்களின் எண்ணிக்கை 55,000-லிருந்து 2,55,000 ஆகி உள்ளது. 50 நாடுகளில் இவர்கள் வியாபித்துள்ளார்கள். நம்ம டி’ சௌசா என்ன செய்தாரென்றால், தனது திறமைமிக்க மூன்று சகாக்களான கோர்டன், சந்திரசேகரன், மேத்தா ஆகியோரைக் கூப்பிட்டு தனது பொறுப்பிலிருந்த பணிகளில் 95%க்கு அவர்களையே தலைவராக்கி விட்டாராம்! அதாவது தனது நிறுவனத்திற்குள்ளேயே 3 வென்ச்சர் கேபிடலிஸ்ட்களை உருவாக்கி விட்டார்!
அப்ப அவர் சும்மாவா உட்கார்ந்திருந்தார் என்கின்றீர்களா? இல்லைங்க. புதிது புதியதாய்த் தோன்றும் வர்த்தக வாய்ப்புகளில் (Emerging Business Accelerators) தன் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார்! மைக்ரோசாப்டின் பில் கேட்சும் ஒரு நிலையில் இதேபோல் ஸ்டீவ் பால்மரிடம் தம் பொறுப்புக்களைக் கொடுத்தாரில்லையா?
நீங்கள் பணிகளை ஒப்படைக்கும் பொழுது உங்களைப் பின்பற்றுபவர்களை உருவாக்குகின்றீர்கள். ஆனால் அதிகாரத்தையும் ஒப்படைத்தால் தான் தலைவர்களை உருவாக்கலாமென கிரெக் க்ரோச்சல் சொல்வது உண்மை தானே? இதற்கு நேர்மாறாக நடந்து கொள்பவர்களையும் பார்த்திருப்பீர்கள்! நம்ம குமார் போன்றவர்கள் தம்கீழ் பணியாற்றுபவர்களுக்குப் பதவியைக் கொடுத்த பின்னரும் கூட, அவர் முடிவெடுக்கத் தேவைப்படும் அதிகாரத்தைக்
கொடுக்க மாட்டார்கள்! அவரை தனது விருப்பப்படி முடிவெடுக்க விடமாட்டார்கள். ஏதாவது குறையோ, யோசனையோ சொல்லி நச்சரித்துக் கொண்டே இருப்பார்கள். மொத்தத்தில் நீங்கள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது வேறொருவர் ரிமோட்டை வைத்து விளையாடுவது போல!
இதைவிட மோசமானது மற்றவர் முன்னிலையில் அவரை மதிக்காமல் அவமானப் படுத்துவார்கள். வங்கியில் குமார் நடத்தும் ஆய்வுக்கூட்டங்களில் பலர் முன்னிலையில், தான் பெரிய அதிகாரி எனக் காட்டிக் கொள்வார். அதற்காகவே அவர் தனக்கும் மற்ற பணியாளர்களுக்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள அதிகாரிகளை கடிந்து கொள்வார், எள்ளி நகையாடுவார்! பின்னர் அவ்வதிகாரி சொல்வதை எந்தப் பணியாளராவது மதிப்பாரா?
ஒரு தகுதியானவனிடம் செயலை ஒப்படைத்த பின்பு, அவனை அச்செயலுக்குரிய மதிப்பிற்கும், அதிகாரத்திற்கும் உரியனாக (empower) ஆக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்!
- somaiah.veerappan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago