போயிங் 100

By செய்திப்பிரிவு

ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகளைக் கடப்பது என்பது மிக எளிதானது அல்ல. ஆனால் போயிங் விமான நிறுவனம் அதை சாத்தியப்படுத்தியுள்ளது. ஆம்! போயிங் விமான நிறுவனம் ஆரம்பித்து வெற்றிகரமாக 100 ஆண்டுகளைக் கடந்துள்ளது. 1916-ம் ஆண்டு இந்நிறுவனம் அமெரிக்காவில் மிகச் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது இந்நிறுவனத்தின் விமானங்கள் இல்லாத நாடுகளே இல்லை எனும் அளவுக்கு மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் புதுமைகளைப் புகுத்தி விமானப் போக்குவரத்தில் மிகப் பெரிய விமானங்களை தயாரித்து பல்வேறு விமான நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது. போக்குவரத்து விமானங்கள் மட்டுமல்லாமல் செயற்கைகோள்கள் தயாரிப்பது, போர் விமானங்கள் தயாரிப்பது என பல துறைகளில் முன்னிலை வகிக்கிறது. நூறாண்டுகளைக் கடந்த போயிங் நிறுவனத்தை பற்றிய சில தகவல்கள்….

இரண்டு விமானங்களோடு வில்லியம் போயிங் என்ற நபர் 1916ம் ஆண்டு போயிங் நிறுவனத்தை தொடங்கினார். இது தொடங்கப்பட்ட இடம் கப்பல் நிறுத்தும் இடமாகும்.

முதல் உலகப் போரின் தொடக்கத்தில் அதிகமாக கப்பலிலிருந்து புறப்படும் விமானங்கள் தேவைப்பட்டதால் புதிய மாடல்களை போயிங் நிறுவனம் தயாரித்தது.

1938ம் ஆண்டு 90 பயணிகள் பயணிக்கக் கூடிய போயிங் 314 என்ற விமானத்தை வடிவமைத்தது. மொத்தம் இதுவரை 17 மாடல்களில் விமானங்களை போயிங் நிறுவனம் தயாரித்துள்ளது.

1919-ம் ஆண்டு போயிங்-பி1 என்ற முதல் பயணிகள் விமானத்தை தயாரித்தது. இதில் இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும்.

2015-ம் ஆண்டு படி இந்நிறுவனத்தின் வருமானம் 9,611.40 கோடி டாலர்.

2015-ம் ஆண்டு படி நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 9440.80 கோடி டாலர்.

நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 1,59,496

நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் 50,000

நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் 83,000

2015-ம் ஆண்டின் படி வருவாய் 30 பில்லியன் டாலர்

1941-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் போயிங் நிறுவனம் இயங்கி வருகிறது. ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட் போன்ற நிறுவனங்கள் போயிங் நிறுவனத்திடமிருந்து விமானங்களை வாங்கி வருகின்றன.

போர் விமானங்களான டிசி-3 உட்பட பல விமானங்களை இந்திய விமானத்துறை போயிங் நிறுவனத்திடமிருந்து வாங்கி வருகிறது.

2015-ம் ஆண்டின் படி வருவாய் 6,000 கோடி டாலர்

போயிங் நிறுவனத்தின் போக்குவரத்து பயன்பாட்டிற்கு மட்டும் கிட்டத்தட்ட 10,000 விமானங்கள் உள்ளன.

2015-ம் ஆண்டு போயிங் நிறுவனம் நன்கொடையாக வழங்கிய தொகை 19 கோடி டாலர்

அமெரிக்காவிற்கு வெளியே உள்ள சேவைகள் மூலம் வரும் வருமானம்

உலகிலேயே அதிக ராணுவ விமானங்களை போயிங் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

150 நாடுகளுக்கு தனது விமான சேவைகள் மற்றும் தயாரிப்புகளை வழங்கி வருகிறது.

இதுவரை போயிங் நிறுவனம் தயாரித்துள்ள செயற்கை கோள்களின் எண்ணிக்கை 502

போயிங் தயாரித்த விமானங்களிலேயே மிகப் பெரியது போயிங் 747-8ஐ

இதில் 467 பயணிகள் பயணம் செய்ய முடியும்.

இந்த விமானத்தின் விலை 35.70 கோடி டாலர்

இந்த விமானத்தின் நீளம் 76 மீட்டர்



போயிங் 737,747, 787 ஆகியவை அதிக அளவு விற்பனையான விமானங்கள்.

போயிங் நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள்

போயிங் இந்தியா

போயிங் பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனம்

போயிங் கேபிடல்

போயிங் கமர்ஷியல் ஏர்பிளேன்ஸ்

முதன் முதலில் போயிங் நிறுவனத்திடம் விமானத்தை வாங்கிய நாடு நியூசிலாந்து. மெயில் சர்வீசஸ் மற்றும் பைலட் பயிற்சிக்காக விமானத்தை வாங்கியது.

போயிங் நிறுவனத்திற்கு முன்னணி வாடிக்கையாளர்கள் இந்தோனேசியா லயன் ஏர் மற்றும் அமெரிக்கா சவுத்வெஸ்ட் எர்லைன்ஸ்

இரண்டாம் உலகப் போரின் போது ஒரு மாதத்திற்கு 350 விமானங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்தது.

70% ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானம் பி-29. இந்த விமானத்தை போயிங் நிறுவனம்தான் தயாரித்தது.

அமெரிக்க அதிபர் பயணிக்க கூடிய விமானத்தை (ஏர்ஃபோர்ஸ் 1) போயிங் நிறுவனம்தான் தயாரித்து வழங்குகிறது. இதற்காக போயிங் 747-200 பி என்ற விமானத்தை பிரத்யேகமாக தயாரித்து வழங்கியுள்ளது.

கிராஃபிக்ஸ்: தே.ராஜவேல்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்