உன்னால் முடியும்: கழிவுப் பொருட்களில் உருவான வருமானம்

By நீரை மகேந்திரன்

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ஜான் கிருபாகரன், சென்னை ஐஐடியில் உயர்கல்வி முடித்தவர். ஆனால் தனது ஆய்வுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத, ஆனால் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்பிருக்கும் என தேர்ந்தெடுத்த தொழில் தேங்காய் நார் கழிவிலிருந்து பித்து என்கிற தேங்காய் நார் பஞ்சு தயாரிப்பது. தற்போது இதை பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வரும் இவரது அனுபவம் இந்த வாரம் ``வணிக வீதி’’-யில் இடம் பெறுகிறது.

ஐஐடியில் ரசாயன பொறியியல் துறையில் தேங்காய் சிரட்டையிலிருந்து ஆக்டிவேட் கார்பன் உற்பத்தி செய்வது குறித்து ஆய்வு மாணவராக உயர்கல்வி முடித்தேன். அதற்கு பிறகு எனக்கு பல நிறுவனங்களிலிருந்து வேலை வாய்ப்புகள் வந்தன. ஆனால் அதே காலகட்டத்தில்தான் தேங்காய் நார் கழிவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பித்து தயாரிப்பது குறித்து ஆராய்ச்சிகளும் நடக்கத் தொடங்கின. தேங்காய் மட்டைகளிலிருந்து கயிறு பிரித்தெடுத்த பிறகு கிடைக்கும் குப்பைதான் இதற்கான மூலப்பொருள். அதை அப்படியே விட்டால் மக்கி குப்பையாகிவிடும்.

அதுவரை எந்த பயன்பாட்டுக்கும் இல்லாத பொருளாகவே இது இருந்து வந்தது. இதை உலரவைத்து பதப்படுத்தி சிறு சிறு கேக்குகளாக உருமாற்றினால் இதில் செடிகளை வளர்க்க முடியும் என கண்டுபிடித்தார்கள். இந்த கேக்குகள் அதன் எடையிலிருந்து எட்டு மடங்குவரை தண்ணீரை உறிஞ்சி வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது.

இந்த பித்து என்கிற தேங்காய் நார் கழிவு கேக்குகளில் எல்லா வகையான செடிகளையும் வளர்க்க முடியும். குறைந்த அளவு தண்ணீர் விட்டால் போதும். இந்த பித்துகளின் நீர் உறிஞ்சும் தன்மையால் நீரினை அப்படியே ஈர்த்து பல நாட்களுக்கு வைத்துக் கொள்ளும். வெளிநாடுகளில் இந்த பொருளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. வெளிநாடுகளில் பசுமை வீடுகள் கான்செப்ட் பரவலாக உருவானதால் இதற்கான தேவையும் அதிகரித்தது. இதனால் நான் இதையே தொழிலாக எடுத்து செய்ய முடிவெடுத்தேன்.

இதற்கான இடத்தேவை அதிகம் என்பதால் நான் எனது சொந்த ஊரிலேயே இதைத் தொடங்கினேன். தவிர இதற்கான மூலப்பொருளான தேங்காய் நார் வேஸ்ட் கொள்முதல் செய்வதற்கு ஏற்ற இடமாகவும் அமைந்தது. நாகர்கோவில், தென்காசி போன்ற ஊர்களிலிருந்து இவற்றை கொள்முதல் செய்தேன். 25 லோடு கழிவு கிடைத்தால்தான் ஒரு கண்டெய்னர் பித்து உற்பத்தி செய்ய முடியும்.

தவிர வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறபோது பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. நாம் அனுப்புகிற பித்துகள் மூலம் ஏதாவது தொற்றுக்கள் பரவும் என்று தெரிந்தால் மொத்த ஆர்டரையும் ரத்து செய்து விடுவார்கள். இதனால் தேங்காய் நார் கழிவைக் காய வைக்கும்போது மிகுந்த கவனமாகவும் இருக்க வேண்டும்.

தவிர இதை சூரிய ஒளி மூலம் காய வைப்பதுதான் சிக்கனமான வழி, இதனால் வருடத்தில் நான்கு மாதங்களுக்கு காயவைக்கும் வேலைகளைச் செய்ய முடியாது. இதனால் இந்த மாதங்களில் இதர வேலைகளை செய்ய ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

தவிர மூலப்பொருளான கழிவின் விலை நிலையானதும் கிடையாது. தேங்காய் நாருக்கு நல்ல விலை கிடைக்கவில்லை என்றால், இந்த கழிவுக்கு அதிக விலை சொல்வார்கள். இதனால் விலையில் ஏற்ற இறக்கங்களையும் சந்திக்க வேண்டி யிருக்கும்.

ஒவ்வொரு ஆண்டுக்கும் தேவையான மூலப்பொருள், தயாரிப்பு, ஆர்டர், போக்குவரத்து ஏற்பாடுகள் என ஜனவரி மாதத்திலேயே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். இந்த அனுபவங்கள் எல்லாம் கிடைக்க கிட்டத்தட்ட எனக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆனது.

இது தவிர வீடுகளில் மாடித்தோட்டம் அமைப்பவர்களுக்கு பயன்படும் சிறிய அளவிலான தேங்காய் பித்து கொண்டு செய்யப்படும் பொருட்களுக்கான சந்தை யும் மிகப் பெரியது. வடமாநிலங்களில் இதற்கான தேவை அதிகம். இவற்றை சிறிய உற்பத்தியாளர்களிடம் ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொள்கிறேன்.

படித்துவிட்டு நல்ல வேலைக்கு போவான் என்று எதிர்பார்த்த குடும்பத்தினருக்கு ஆரம்பத்தில் ஏமாற்றமாக இருந்திருக்கலாம், ஆனால் பக்கபலமாக இருந்தார்கள். என்னுடைய நிலைமைகள் சில ஆண்டுகளில் மாறியதோடு, தற்போது 100 பேருக்கு மேல் வேலை வாய்ப்பு அளித்து வருகிறேன் என்பதும் அவர்களுக்கு பெருமையான விஷயம்.

நான் வேலைக்கு சென்றிருந்தால்கூட எனக்கு இவ்வளவு மகிழ்ச்சி இருந்திருக்காது. காரணம் சுற்றுச்சூழலுக்கு பொருத்தமானதை தயாரிக்கிறேன் என்கிற உணர்வுதான் என்றார். அது வருமானத்தையும் கொடுக்கிறது என்பதால் இந்த உழைப்பு உன்னதமானதுதான்.

maheswaran.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்