வருகிறது பேட்டரி மோட்டார் சைக்கிள்!

By செய்திப்பிரிவு

சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்கிற விஷயம் இப்போது ஆட்டோ மொபைல் துறையில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுவருகிறது.

பேட்டரி ஸ்கூட்டர்கள் பெருமளவில் புழக்கத்துக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது இளைஞர்கள் பெரிதும் விரும்பும் மோட்டார் சைக்கிளும் பேட்டரியில் இயங்கும் வகையில் வெளிவர உள்ளன. இத்தகைய பேட்டரி மோட்டார் சைக்கிளை புணேவைச் சேர்ந்த டார்க் மோட்டார் சைக்கிள் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளை ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ. தூரம் எவ்வித பிரச்சினையும் இன்றி ஓடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பேட்டரி வாகனம் என் றாலே மெதுவாகச் செல்லும் என்ற நிலை இதில் முழுவதுமாக மாற்றப் பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிளில் மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.

புணேவைச் சேர்ந்த தொழில்முனை வோரான கபில் ஷெல்கே தொடங்கியுள்ள இந் நிறுவனத்துக்கு அன்கிட் மற்றும் பவேஷ் அகர்வால் ஆகியோர் முதலீடு (ஏஞ்சல் இன்வெஸ்டர்) முதலீடு செய்துள்ளனர். இதில் அகர்வால், ஓலா கேப்ஸ் நிறுவனர்களில் ஒருவராவார். இவர் இந்நிறுவனத்தில் தனது சொந்த முதலீட்டை மேற்கொண்டுள்ளார்.

பொறியியல் பட்டதாரியான கபில் ஷெல்கே இந்நிறுவனத்தை 2009-ம் ஆண்டு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனம் 5 மோட்டார் சைக்கிள் களை உருவாக்கியுள்ளது. இதில் ஐந்தாவது மாடலான டி6எக்ஸ் மாடல் விரைவில் சந்தைக்கு வர உள்ளது. இந் நிறுவன மோட்டார் சைக்கிள் ஏஆர்ஏஐ ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

லித்தியம் பேட்டரி மட்டுமே இந்த மோட்டார் சைக்கிளுக்கென இறக்கு மதி செய்யப்பட்டுள்ளது. மற்றபடி வடிவமைப்பு உருவாக்கம் அனைத்துமே உள்நாட்டில் தயாரானது என்று ஷெல்கே குறிப்பிட்டுள்ளார்.

புணேயில் உள்ள சக்கன் ஆலை ஆண்டுக்கு 50 ஆயிரம் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் திறன் கொண்டதாகத் திகழ்கிறது. இருப்பினும் முதல் ஆண்டில் 10 ஆயிரம் மோட்டார் சைக்கிளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறுகிறார் ஷெல்கே.

மோட்டார் சைக்கிள் சார்ஜ் ஏற்ற வசதியாக சார்ஜிங் மையங்களை புணேவில் ஒன்றும் லோனா வாலாவில் ஒன்றும் தொடக்கத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும் ஒரு நகரில் குறைந்தது 100 சார்ஜிங் நிலையத்தை அமைக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக புணே, பெங்களூருவில் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளது. அடுத்து மும்பை, ஹைதராபாதில் இரண்டாம் கட்டமாக அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிள் மாதிரி வெள்ளோட்டம் விடப்பட்டது.கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு போட்டிகளில் இந்த பேட்டரி மோட்டார் சைக்கிள் பங்கேற்றதாக ஷெல்கே குறிப்பிட்டார்.

இந்த பேட்டரி மோட்டார் சைக்கிள் நிச்சயம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் உள்ள இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்