தொழில்நுட்ப காலணி

By செய்திப்பிரிவு

தொழில்நுட்பங்களை இணைத்து இந்த காலணி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை புளுடூத் வழியாக ஸ்மார்ட் போனுடன் இணைத்துக் கொள்ளலாம்.

எத்தனை அடிகள் ஒரு நாளைக்கு எடுத்து வைக்கிறோம், அதன் மூலம் எவ்வளவு கலோரிகள் உடலிலிருந்து வெளியேறுகிறது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

மேலும் கால்களின் உள்ளே எவ்வளவு வெப்பம் இருக்க வேண்டும் என்பதையும் இதில் முடிவு செய்யலாம். இதற்கு லேஸ் கிடையாது தானாகவே இறுகி கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிகச் சிறிய வயலின்

சிறிய ரேடாரை மையப்படுத்தி இந்த வயலின் வடிவமைக்கப்பட்டுள்ளது. நம் கைகளை அசைத்தால் மட்டும் போதும் அதற்கேற்ப ஒலி எழுப்புகிறது.

கை அசைவுகளுக்கு எப்படி ஒலி எழுப்ப வேண்டும் என்பது ஏற்கெனவே இந்த கருவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. நம் கை அசைவுகள் கட்டளைகளாக மாற்றப்பட்டு அதற்கேற்ப வயலின் இசை நம் காதுகளுக்கு கேட்கிறது.

நாம் இசைப்பதை ரெக்கார்டிங் செய்து கொள்ளக்கூடிய வசதியும் இதில் இருக்கிறது. ஒலியின் அளவையும் கை அசைவிலேயே குறைத்துக் கொள்ள முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்