குறள் இனிது: மெத்தப் படித்தும் பேசத் தெரியாதவர்...

By சோம.வீரப்பன்

இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது

உணர விரித்துரையா தார் (குறள்: 650)

கடக ரேகை, மகர ரேகை என்றால் என்னவென்று தெரியுமா? பூமத்திய ரேகையிலிருந்து 23.5 டிகிரியில் இருப்பவை அவை என்று படித்தது ஞாபகம் இருக்கிறதா?

பூமியின் மேற்பரப்பில் இடைவெளியை அளக்கும் பொழுது அதை கிலோ மீட்டரில் சொல்லாமல் கோணத்தை அளக்கும் டிகிரியில் ஏன் சொல்கிறார்கள்? காரணம் பள்ளியில் படிக்கும் பொழுதே தெரிந்ததா அல்லது இன்று வரை புரியவில்லையா?

இக்கேள்வியை அதிகப் பட்டங்கள் வாங்கியிருந்த பள்ளி முதல்வரிடம் கேட்டபொழுது ‘அதெல்லாம் அப்படித்தான்’ என்றார் ஓங்கிய பிரம்புடன்!

ஒருவாரம் கழித்துப் பட்டம் எதுவும் வாங்காத ஒரு ஐந்தாம் வகுப்பு நல்லாசிரியரைக் கேட்ட பொழுது, ஒரு ஆரஞ்சுப் பழத்தைக் கொண்டு வரச்சொன்னார். பின்னர் ‘தம்பி, இதை உலக உருண்டையாக நினைத்துக் கொள். பழத்தின் தலைப்புறம் வடதுருவம்; நேர் கீழே தென்துருவம். மையத்திலிருந்து குறுக்காகச் செல்வது பூஜ்யம் டிகிரி கோடு. பூமியின் மையத்தில்கோணஅளவியை (protractor) வைத்தால் 23.5 டிகிரியில் இருப்பது கடக ரேகை’ என்றதும் மூளைக்குள் விளக்கு எரிந்தது!

அதைப் போலவே,வணிகவியலில் பொருளை விற்றுப் பணம் வந்தால், debit cash, credit stock என்பதை என்னால் பலகாலம் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

பணம் கைக்குக் கிடைக்கும் பொழுது அப்பணத்தையே debit செய்வதேன் என்று மற்றவர் போல நானும் குழம்பித் தவிப்பேன்!

‘அதை debit cash box / cash balance எனப் புரிந்து கொள். அதாவது பணப் பெட்டியையே ஒரு ஆளாக உருவகப்படுத்திக்கொண்டுவிடு' என்று ஒரு நல்லாசிரியர் சொன்னபின் தான் ‘debit the receiver ‘எனும் விதி இங்கும் பொருந்துகிறது என மனம் சாந்தி அடைந்தது!

‘ஒன்றைத் தெரிந்து கொண்டால் அதைச் செய்யலாம்; ஆனால் அதைப் புரிந்து கொண்டால் தான் மற்றவருக்குக் கற்பிக்க முடியும்' என்றார் கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில்!

கல்லூரிகளில் மட்டுமில்லை, நாம் இதை அலுவலகங்களிலும் பார்க்கலாம்.

மெத்தப் படித்தவர்களாய் இருந்தும், சிறப்பாக பணியாற்றுபவர்களாக இருந்தும், பலர் தாம் கற்ற வித்தையை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லத் தெரியாமல் தடுமாறுவார்கள்.

ஆசிரியர்களைப் போலவே மேலாளர்களுக்கும் மற்றவர்களுக்கு எளிதில் புரியும்படி எடுத்துப் பேசத் தெரிய வேண்டுமில்லையா? இல்லையெனில் அவர்களின் திறனை மற்றவர்கள் கற்றுக்கொள்ளமுடியாதே. ஒவ்வொரு மேலதிகாரியுனுள்ளும் ஒரு பயிற்சியாளர் இருந்தால் தானே நல்லது?

கால்பந்தோ, கிரிக்கெட்டோ உலகக்கோப்பை வேண்டுமானால் தரமான பயிற்சியாளரையும் தேடுகிறோமே!

‘நான் இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் என் தந்தை; நான் நன்றாக இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் எனது ஆசான்’ என்றார் மாவீரன் அலெக்ஸாண்டர்!

தாம் கற்ற நூற்பொருளைப் பிறர் உணருமாறு விரித்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர் என்கிறார் வள்ளுவர்!

அண்ணே, மல்லிகை, முல்லை, சம்பங்கி போன்ற வாசமுள்ள மலர்களுக்குத் தானே தனிமவுசு?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்