வேலை செய்வதே வாழ்க்கை லட்சியம், அதுவும் வாழ்க்கை முழுவதும் ஒரே வேலை என்னும் மனநிலை இருந்த இந்தியாவில், ஸ்டார்ட்அப் அலை தொடங்கி 10 வருடங் கள் ஆகி இருக்கும். முன்பெல்லாம் தொழில் தொடங்கும் போது நமக்கு இருக்கும் தொகையை மட்டும் வைத்து தொழில் தொடங்கினோம். ஆனால் இப்போது ஐடியாவை அடிப்படையாக வைத்து அதற்காக முதலீடு செய்ய தயாராக இருக்கும் வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களிடம் நிதி திரட்டி, நிறுவனத்தை வேகமாக வளர்க்கும் நடவடிக்கைகளை எடுத்து வந்தோம். ஆனால் சைக்கிள் ஓட்டத் தொடங்கும் சிறுவர்கள் தடுக்கி விழுவது போல, ஒவ்வொரு நிறுவனத்திலும் பல சிக்கல்கள் உருவாகின்றன. இந்தியாவின் முக்கியமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.
பிளிப்கார்ட்
இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங் களின் அடையாளமாக சொல்லப்படுவது பிளிப்கார்ட். நிறுவனர் சச்சின் பன்சால் தலைமை பொறுப்பில் இருந்தார். அவரைத் தொடர்ந்து இணை நிறுவனர் பின்னி பன்சால் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். அதன் பிறகு பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான டைகர் குளோபல் நிறுவனத்தில் பணிபுரிந்த கல்யாண் கிருஷ்ணமூர்த்தி இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். தலைமை மாற்றத்துக்கு நிறுவனர்களின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லை என காரணம் சொல்லப்படுகிறது.
பிளிப்கார்ட் நிறுவனத்தில் பல நிறு வனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. இதில் அமெரிக்காவை சேர்ந்த மார்கன் ஸ்டான்லி நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பை தொடர்ந்து ஆறாவது முறையாக குறைத்திருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் பிளிப்கார்டின் சந்தை மதிப்பு 1,520 கோடி டாலராக இருந்தது. சமீபத்தில் 550 கோடி டாலராக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக புதிய நிதி திரட்டலில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. டென்சென்ட் மற்றும் இபே நிறுவனங்களில் 150 கோடி டாலர் திரட்டுவதாக செய்திகள் வெளியானாலும் இவை உறுதி செய்யப்படவில்லை.
ஸ்நாப்டீல்
2010-ம் ஆண்டு கூப்பன் நிறுவன மாக தொடங்கப்பட்டு, இடெய்ல் நிறுவனமாக மாறியது. அதனை தொடர்ந்து பிரீசார்ஜ், ஷாபோ உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தியது. ஆனால் நிதி சிக்கல் காரணமாக ஷாபோ மூடப்பட்டது. வருமானத்தை விட இரு மடங்குக்கு நஷ்டம் இருக்கிறது. 2016-ம் நிதி ஆண்டில் வருமானம் ரூ.1,506 கோடி. ஆனால் நஷ்டம் ரூ.3,315 கோடி. பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் 1,000 கோடி அளவுக்கு அதிகரித்தது. அதனால் 600-க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. சிக்கல் முடியும் வரை இரு நிறுவனர்களும் தங்களுக்கான சம்பளத்தை எடுத்துக்கொள்ளப் போவதில்லை என அறிவித்திருக்கின்றனர்
ஷாப்குளுஸ்
பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நிதி உள்ளிட்ட விஷயங்கள் பிரச்சினை என்றால் ஷாப்குளுஸ் நிறுவனத்தில் நிறுவனர்களுக்கு இடையே பிரச்சினை. 2011-ம் ஆண்டு சந்தீப் அகர்வால், ராதிகா மற்றும் சஞ்சய் சேத்தி ஆகிய மூவரும் சேர்ந்து ஷாப்குளுஸ் நிறுவனத்தை தொடங்கினார்கள். இத்தனைக்கும் சந்தீப்பும் ராதிகாவும் கணவன் மனைவி. 2013-ம் ஆண்டு உள்பேர விவகாரத்தில் சந்திப் அகர்வால் அமெரிக்க எப்பிஐ-யால் கைது செய்யப்பட்டார். அதனால் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.
இருந்தாலும் அவர் வசம் 12% பங்குகள் இருப்பதாகவும், ஆனால் நிறுவனத்தில் ஓட்டுரிமை மறுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். இதைவிட மனைவிக்கும் மற்றொரு நிறுவனர் சேத்திக்கும் மறைமுக உறவு இருப்பதாகவும் தன்னுடைய வலைபதிவில் தெரிவித்து இந்த பிரச்சினையை மேலும் பெரிதாக்கினார். ஆனால் இயக்குநர் குழு ராதிகா மற்றும் சேத்திக்கு ஆதரவாக இருக்கிறது. இவர்கள் தலைமையில் நிறுவனம் 30 மடங்கு வளர்ந்திருக்கிறது என கூறியிருக்கிறது.
ஸ்டேஸில்லா
ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் ஒவ்வொரு வகையில் பிரச்சினை இருந்துவரும் நிலையில், ஓட்டல் முன்பதிவு துறையில் செயல்பட்டு வந்த ஸ்டேஸில்லா நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும் அதன் நிறுவனர் யோகேந்திர வசுபாலை பிரச்சினை விடாமல் துரத்தி வருகிறது.
சென்னையில் செயல்பட்டு வந்த ஜிக்சா என்னும் விளம்பர நிறுவனத்துக்கு ரூ.1.7 கோடி தர வேண்டி இருப்பதால், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பெயரில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் மற்றொரு நிறுவனர் வீட்டுக்கு பில்லி சூனிய பொம்மையுடன் அவரது குழந்தையின் புகைப்படம் நெற்றியில் ஆணி அடித்தபடி பார்சலில் அனுப்பப்பட்டிருக்கிறது.
வசுபாலின் கைதுக்கு தொழில்துறை மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக் கிறது. அவரை விடுவிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இதனால் தமிழக ஸ்டார்ட் அப் சூழல் பாதிக்கப்படும் என `டை சென்னை’ தெரிவித்திருக்கிறது. மேலும் இது ஒரு சிவில் வழக்கு. இதனை கிரிமினல் வழக்காக விசாரிக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பது உள்ள பல கேள்விகள் இருக்கின்றன. கர்நாடக ஐடி துறை அமைச்சர், தமிழக அமைச்சரிடம் இது குறித்து பேசிதாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
ஸ்டேஸில்லா நிறுவனர் வசுபால், நிறுவனத்தின் வசம் இருக்கும் தொகையை முறைகேடாக தன்னுடைய சொந்த வங்கி கணக்குக்கு மாற்றி இருப்பதாக குற்றம் சாட்டி இருக்கிறார் ஜிக்சா சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆதித்யா. மேலும் வென்ச்சர் கேபிடல் நிதி இல்லாமல் செயல்படும் எங்களை போன்ற நிறுவனங்கள் தோல்வி அடைந்தால் சரியா, எங்களுக்கு எந்தவிதமான வாய்ப்பும் இல்லை என்பதால் வழக்கு பதிவு செய்தோம் என்கிறார் இவர்.
இதுபோல ஒவ்வொரு ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் ஒவ்வொரு சிக்கலில் இருக்கின்றன. ஓலா நிறுவனம் டிரைவர்கள் பிரச்சினை, சந்தை மதிப்பு குறைவது உள்ளிட்ட சிக்கலில் இருக்கிறது. ஜொமோட்டோ நிறுவனம் அதிக பணியாளர்களை குறைத்தது. பேடிஎம் நிறுவனத்தின் பிஸினஸ் மாடல் குறித்து அனலிஸ்ட்கள் சந்தேகத்தை எழுப்புகிறார்கள். மொத்தமாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இதுவரை லாபம் ஈட்டவில்லை.
இதில் கவனிக்கப்படாத விஷயம் பணியாளர்களின் மனநிலை. ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சம்பளம் அதிகமாக இருந்தாலும், பணி உத்தரவாத சூழல் இல்லை. வெளியே அனுப்பப்படும் பணியாளர்கள் மீது திறமையின்மை என்பது போன்ற பிம்பம் உருவாகும்.
அமெரிக்காவில் தோல்விகள் சகஜ மாகவும் அவை படிக்கட்டுகளாகவும் பார்க்கப்படும். மேலும் தோல்வியை கொண்டாடும் மனநிலையும் அங்கு இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தோல்வி என்பது குற்றமாக பார்க்கப் படுகிறது. ஸ்நாப்டீல் நிறுவனத்தின் நிறுவனர் குணால் பஹல் எழுதிய கடிதத்தில் ஆப்பிள், அமேசான், நெட்பிளிக்ஸ், டெஸ்லா, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட நிறுவனங்கள் கடினமான காலத்தில் இருந்து மீண்டு வந்திருப்பதாக கூறி இருந்தார். அதுபோல இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இந்த தற்காலிக தடையில் இருந்து மீண்டு வரும் என நம்புவோம். பணியாளர்கள், முதலீட்டாளர்கள், இந்திய பொருளா தாரத்துக்காவது இந்த நிறுவனங்கள் மீண்டு வரவேண்டும்.
- வாசு கார்த்தி
karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago