தொலைக்காட்சிகளில் வணிக செய்தி ஒளிபரப்பாகும்போது மற்ற சானல்களை மாற்று பவர்கள் கூட, இப்போது பங்குச்சந்தை யின் போக்கு குறித்து தீவிரமாக விவாதித்து வருகிறார்கள். கடந்த வாரம் புதன்கிழமை சென்செக்ஸ் அதிகபட்ச மாக 30184 புள்ளியை தொட்டது. அன்றைய வர்த்தகம் 30133 புள்ளியில் முடிவடைந்தது. அடுத்த நாட்களில் சந்தையில் சிறிய சரிவு ஏற்பட்டாலும், 30000 புள்ளிகளுக்கு அருகே வர்த்தகமடைந்து வருகிறது.
நடப்பாண்டில் சர்வதேச அளவில் முக்கியமான சந்தைகளில் அதிகம் உயர்ந்திருப்பது இந்தியாவின் சென்செக்ஸ் மற்றும் நிப்டிதான். சுமார் 14 சதவீதம் அளவுக்கு நடப்பாண்டில் ஏற்றம் இருந்திருக்கிறது. சந்தை சரியும் போதும் மட்டுமல்லாமல் சந்தை உயரும் போதும் முதலீட்டாளர்களுக்கு அச்சம் ஏற்படுவது இயல்பு. அதுவும் முக்கியமான மைல்கல்லை எட்டிய பிறகு அடுத்து என்ன நடக்கும், சரிவுக்கான வாய்ப்பு இருக்கிறதா எனும் கவலை இருக்கிறது.
தற்போதைய நிலையில் சந்தை உயரும் என்று கூறுபவர்களும் இருக் கிறார்கள், சரியும் என்று சொல்பவர் களும் இருக்கிறார்கள். முதலில் சரிவு மற்றும் ஏற்றத்துக்கு இவர்கள் சொல்லும் காரணங்களை பார்த்துவிட்டு என்ன செய்யலாம் என்பதை பிறகு பார்கலாம்
ஏன் சரியும்?
மும்பையை சேர்ந்த பங்குச்சந்தை நிபுணர் ஒருவரிடம் இது குறித்து கேட்ட போது சந்தை சரிவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்று கூறினார். 2015-ம் ஆண்டு சென்செக்ஸ் 30000 புள்ளிகளை தொட்டது. அப்போது பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.105 லட்சம் கோடியாக இருந்தது. இப்போதும் சந்தை உயர்ந்திருக்கிறது. ஆனால் மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.125 லட்சம் கோடியாக இருக்கிறது.
அதாவது சந்தையின் மதிப்பீடுகள் மிக அதிகமாக இருக்கிறது. குறிப்பாக மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் மிக வேகமாக உயர்ந்திருக்கின்றன. இவை சரிவதற்குதான் வாய்ப்புகள் அதிகம். சென்செக்ஸ், நிப்டி போன்ற முக்கிய குறியீடுகள் 5 முதல் 10 சதவீதம் வரைக்கும் சரியலாம். ஆனால் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் 20 சதவீதத்துக்கு மேல் சரியலாம். ஆனால் எந்த சந்தையிலும் முதலீடு செய்வதற்கு ஏற்ற பங்குகள் இருக்கின்றன, லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்வதால் நீண்ட காலத்துக்கு ஏற்றம் இருக்கும், சரிவும் குறையும் என்றார்.
ஏன் உயரும்?
பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட சமயத்தில், இனி இந்தியாவில் எதுவுமே நடக்காது, வீழ்ச்சி தொடங்குகிறது என பலரும் சொல்லி வந்தனர். ஆனால் ஆரம்ப கால அசவுகர்யங்களை தாண்டி எந்த பெரிய சரிவும் நடக்கவில்லை. அதுபோல இப்போதும் சந்தை சரியும் என்னும் கருத்து உலா வருகிறது. சந்தை ஒரே நேர்கோட்டில் பயணிக்காது, சிறிய சிறிய சரிவுகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதே தவிர சந்தையில் வீழ்ச்சி இப்போதைக்கு வராது என பெயர் குறிப்பிட விரும்பாத வல்லுநர்கள் ஒருவர் தெரிவித்தார்.
ஒரே அளவீடுகள் சந்தைக்கு எப் போதும் பொருந்தாது. பத்து வருடங் களுக்கு முன்பு இந்திய சந்தை என்பது அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது என்று சொல்ல லாம். அவர்கள் விற்க ஆரம்பித்தால் சரிவு நிச்சயம். ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை. உள்நாட்டு மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு தொடர்ந்து முதலீடுகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த முதலீடுகள் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது என்பதால் அந்நிய முதலீடுகள் வெளியேறினாலும் அதை வாங்குவதற்கு உள்நாட்டு முதலீட்டாளர்கள் தயாராக இருப்பதால் சிறிய சரிவு வந்தாலும், வாங்கும் போக்கு இருப்பதால் சந்தை மேலே உயரும்.
சப்ளை/டிமாண்ட் தியரியை பார்க்கவேண்டும். இந்தியாவில் தரமான பங்குகளாக சில நூறு பங்குகளை எண்ணிவிடலாம். மியூச்சுவல் பண்ட்களில் தொடர்ந்து முதலீடு வரும் போது, அந்த முதலீட்டை அந்த சில பங்குகளில்தான் முதலீடு செய்ய முடியும். ஒரு பங்கினை வாங்குபவர்கள் இருக்கும் போது சரிவு எப்படி வரும் என்று கேளிவியெழுப்பினார்.
அவர் குறிப்பிடுவதை போல கடந்த நிதி ஆண்டில் 6.26 லட்சம் புதிய மியூச்சுவல் பண்ட் கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. கடந்த நிதி ஆண்டில் மட்டும் 43,921 கோடி ரூபாய் முதலீடு சந்தைக்கு வந்திருக்கிறது. சராசரியாக ஒருவர் மாதம் 3,200 ரூபாயை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்கிறார். இந்த முதலீடு தொடர்ந்து மாதாமாதம் வந்துகொண்டுதான் இருக்கும். தவிர அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த முதலீடு இரட்டிப்பாகும் என கணிக்கப்பட் டிருக்கும் நிலையில் இந்த அனைத்து முதலீடுகளும் சந்தையிலேயே முதலீடு செய்யப்படும்.
புணேயைச் சேர்ந்த முதலீட்டாளர் ஜிதேன் பார்மர் இதனை வேறுவடிவில் கூறுகிறார். தங்கம், ரியல் எஸ்டேட், டெபாசிட் போன்றவை பங்குச்சந்தையை விட குறைவாகவே வருமானத்தை கொடுக்கும். அதனால் முதலீடு செய்வதற்கு வேறு வழியில்லை. அதனால் பங்குச்சந்தைக்கு முதலீடு அதிகமாக வருகிறது. அதனால் சந்தை மதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளுக்கு அதிகமாகவே இருக்கும் என்று தன்னுடைய வலை பதிவில் கூறி இருக்கிறார்.
ஐடிபிஐ கேபிடலை சேர்ந்த ஏ.கே.பிரபாகரும் நம்மிடம் இதே கருத்தை தெரிவித்தார். தொடர்ந்து சந்தை உயர்வதற்கான வாய்ப்புகளே அதிகம். ஏறும் சந்தையில் 8 முதல் 10 சதவீதம் வரை சரிவு இருக்கலாம். ஆனால் அந்த சரிவினை முதலீட்டுக்கான வாய்ப்பாக பார்க்கவேண்டும். நடப்பு நிதி ஆண்டு முடிவில் (2018 மார்ச்) நிப்டி 12000 புள்ளிகளையும், சென்செக்ஸ் 37000 புள்ளிகளை தொடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. தவிர இந்த ஏற்றத்தில் உரம், மின்சாரம், ஐடி, பொதுத்துறை வங்கி பங்குகள் ஆகியவை உயரவில்லை. இந்த பிரிவில் உள்ள முக்கிய பங்குகள் உயரலாம் என பிரபாகர் தெரிவித்தார்.
பங்குச்சந்தையை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு 2014-ம் ஆண்டு மே மாதம் தேர்தல் முடிவுகள் நினைவில் இருக்கலாம். அப்போதிருந்து பங்குச்சந்தையில் ஏற்றம் இருந்தது. மும்பையில் செயல்பட்டு வரும் சில பிஎம்எஸ் (portfolio management services) நிறுவனங்கள் இப்போது முதலீடு செய்யுங்கள் 2019-ல் அறுவடை செய்யுங்கள் என்பது அவர்களது மார்க்கெடிங் உத்தியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது முக்கியமான இரு மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியை பிடித்திருக்கிறது. மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வரும்போது சீர்திருத்தங்கள் தொடரும், சந்தை உயரும் என்பது அவர்களின் கணிப்பாக இருக்கிறது.
என்ன செய்யலாம்?
முக்கிய குறியீடுகளை அடிப்படை யாக வைத்து சந்தையை அணுகாமல் குறிப்பிட்ட பங்குகளின் அடிப்படையில் சந்தையை அணுகுவதே சரியானதாக இருக்கும். முதலீட்டுக்கு ஏற்ற வாய்ப்புகள் எப்போதும் சந்தையில் இருக்கின்றன. சரியான பங்குகளை கவனித்து, அந்த பங்குகள் சரியும் போது வாங்குவதே அனைத்து காலத்துக்கும் ஏற்ற தீர்வாக இருக்கும்.
- karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago