வர்த்தகம் பெருக்கும் வலைதளங்கள்

By நீரை மகேந்திரன்

தொழில்நுட்பங்களை சரியாக பயன் படுத்துபவர்களே கால மாற்றத்தில் தாக்கு பிடிக்கிறார்கள். தனிநபர்களுக்கு மட்டுமல்ல, சிறு தொழில்களுக்கும் நிறுவனங் களுக்கும் இதுதான் அடிப்படை விதி. அந்த வகையில் நவீன வசதிகளை தொழிலுக்கு பயன் படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிவது நிறுவனத்தின் நோக்கமாகவும் இருக்க வேண்டும். கணினி பயன்பாட்டினால் நிறுவனத்தின் பணிகள் துரிதமாகவும், ஆக்கபூர்வமாகவும் நடைபெறும் என்றால் அதற்கு உடனே மாறினோம். அதுபோல தற்போது ஆன்லைன் வர்த்தக யுகத்தில் இணையத்தை பொழுது போக்கிற்கு மட்டும் பயன்படுத்தாமல் நமது தொழிலுக்கு, வருமானத்துக்கு ஏற்ப அவற்றை பயன்படுத்தும் நோக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் அனுபவசாலிகள்.

சமூக வலைதளங்களைத் தாண்டியும் தொழில் முனைவோர்கள் தங்களது தொழிலை மேம் படுத்திக் கொள்வதற்காக வாய்ப்புகளை வழங்கும் பல வலைதளங்களும் இயங்குகின்றன. பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக தளங்களை பயன்படுத்திக் கொள்வதுடன், இந்தியா மார்ட், சுலேகா போன்ற வர்த்தக பயன்பாடு இணையதளங்களிலும், ஷாப்குளூஸ், அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் போன்ற ஆன்லைன் ஸ்டோர்களிலும் கூட தங்களது தயாரிப்பு களை வர்த்தகம் செய்ய முடியும்.

உலக அளவிலான மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இணையத்தை பயன் படுத்தி வருகின்றனர். சுமார் 320 கோடி மக்கள் இணைய தொடர்பில் உள்ளனர். அதில் 200 கோடி நபர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் வர்த்தக தளங்களில் தீவிரமாக இயங்குகின்றனர். அதாவது சுமார் 64 சதவீதத்தினர் தொடர்ந்து இணைய தொடர்பில் இருந்து கொண்டே இருக் கின்றனர். அதனால்தான் ஆன்லைன் வர்த்தகம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதிலும் குறிப்பாக ஒவ்வொரு வலைதளமும் தனக்கான நிரந்தர பார்வையாளர்களையும், வாடிக்கை யாளர்களையும் வைத்துள்ளன.

ஷாப் குளூஸ் போன்ற இணையதளம் சிறு தொழில்முனைவோர்களை ஒருங்கிணைத்து தொடங்கப்பட்டதுதான். இன்று 12,400 பிரிவுகளில் 1 கோடி தயாரிப்புகளை சந்தைப் படுத்தியுள்ளது. 9 கோடி மாதாந்திர பார்வையாளர்களை வைத் துள்ளது. ஒவ்வொரு மாதமும் 25 லட்சம் ஆர்டர் களை கையாளுகிறது. உற்பத்தியாளர்கள் நேரடி யாக பொருட்களை இந்த தளத்தில் விற்பனை செய்கின்றனர். ஆன்லைன் வாடிக்கையாள ரிடமிருந்து ஆர்டர்கள் நேரடியாக வரும், அதை நேரடியாகவே வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

சிறு உற்பத்தியாளர்களுக்கு ஏற்ற இணையதளமாக இது வளர்ந்து வருகிறது. இணையதளத்தில் விற்பனையாளர்கள் குறித்த விவரங்கள் இடம்பெறுகின்றன. முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான், ஸ்நாப்டீல், பிளிப்கார்ட் போன்ற நுகர்வோர் இணையதளங்களிலும் விற்பனையாளர் கள் பதிவு செய்து பயன்படுத்துகின்றனர். இதில் பிளிக்கார்ட் நிறுவனம் 10 கோடி வாடிக்கை யாளர்களை கொண்டுள்ளது. 1 லட்சம் தொழில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தியா மார்ட்

இந்த இணையதளத்தில் நேரடி விற்பனை கிடையாது. பிசினஸ் டூ பிசினஸ் என்கிற வகையைச் சேர்ந்தது. இந்தியா முழுவதும், விற்பனையாளர்களையும், உற்பத்தியாளர்களை யும் தளத்தில் ஒருங்கிணைக்கிறது. மாதாந்திர அளவில் 1 கோடி விசாரணைகள் இந்த தளத்தின் மூலம் விற்பனையாளர்களுக்குச் செல்கின்றன. 22 லட்சம் தொழில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 2.6 கோடி வாடிக்கையாளர்கள் சராசரியாக இந்த இணைய தள பார்வையாளர்களாக இருக்கின்றனர் என்கிறது இந்த நிறுவனம்.

ஒவ்வொரு விற்பனையாளருக்கும் தனி பக்கம் என்கிற அளவில் ஒதுக்குகின்றன. உற்பத்தியாளர்கள் குறித்த விவரங்களை/ தயாரிப்புகளை வாடிக்கை யாளர்கள் தேடும்பட்சத்தில் தொலைபேசி மூலம், குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொள்கின்றனர். இங்கு பதிவு செய்ய ஆண்டுக்கட்டணம் தோராய மாக ரூ.20,000 வாங்குகின்றனர். 2020-ம் ஆண்டுக்கு இந்த நிறுவனம் மூலம் 2,000 கோடி வருமானம் என்னும் இலக்குக்கு திட்டமிட்டிருக்கிறது.

நடைமுறை

ஆன்லைன் வர்த்தக தளங்களான இவற்றில் விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் அவர்கள் கேட்கும் தரம் மற்றும் அளவுகளுக்கு ஏற்ப பொருந்தக்கூடியவர்கள் என்றால் விற்பனை யாளராக பதிவு செய்யலாம். புகைப்படத்துடன் பொருட்கள் குறித்த விவரங்களை அனுப்ப வேண்டும். அமேசான் தளத்தில் விற்பனையாளராக பதிவு செய்ய அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகளின் நேரடி உதவிகள் கிடைக்கிறது. இந்தியா மார்ட், ஷாப்குளூஸ் போன்ற எஸ்எம்இ சார்ந்த வர்த்தக தளங்கள் உறுப்பினர்களுக்கு தனிபக்கத்தை அளிக்கின்றனர்.

சொந்த வலைதளம்

வர்த்தக தளங்களில் பதிவு செய்து கொள்ளும் போது உறுப்பினர்களை நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் பணி அந்த தளத்தை நிர்வகிக்கும் நிறுவனமே செய்து விடுகிறது. அதேசமயத்தில் நுகர்வோரை நேரடியாக அணுக தொழில் முனைவோர் சொந்த வலைதளத்தை கொண்டி ருப்பதும் வர்த்தகத்தை அதிகரிக்க உதவும். அந்த தளத்தில் நமது விருப்பத்துக்கு ஏற்ப காட்சிபடுத்தலாம். சொந்த வலைதள முகவரி உருவாக்கிக் கொள்வதன் மூலம் நுகர்வோருக்கு உங்களைக் குறித்த நம்பகத்தன்மை அதிகரிக்கும்.

கட்டண விவரம்

இந்த தளங்களில் வர்த்தகம் செய்ய கட்டணம் செலுத்த வேண்டும். குறிப்பாக பொருட்களின் வகைக்கு ஏற்ப 5 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கமிஷன் அளிக்க வேண்டும். ஒரு பொருளை விற்பனை செய்தால் குறைந்தபட்சம் கட்டணம் ரூ.10 என அமேசான் கமிஷன் வாங்குகிறது. அதுபோல லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சேவைக் கட்டணம் போன்றவற்றையும் விற்பனையாளர் அளிக்க வேண்டும். கமிஷனை எடுத்துக் கொண்டு 7 முதல் 15 நாட்களுக்குள் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தி விடுகின்றன. பொருட்கள் திரும்பி வரும் என்றால் அடுத்த அடுத்த ஆர்டர் களில் தொகையை கழித்துக் கொண்டு அனுப்பு வார்கள். இந்த இணையதளங்களில் விற்பனை யாளர்கள் குறித்த விவரங்கள் இடம்பெறுவதில்லை.

ஆன்லைன் சில்லரை வர்த்தக வளர்ச்சி இந்தியாவில் ஏற்றத்தில் உள்ளது என்றாலும், ஒப்பீட்டளவில் ஆன்லைன் வர்த்தக வாய்ப்புகளை மட்டுமே நம்பிக்கொண்டிருக்க முடியாது. பாரம்பரிய வர்த்தக வாய்ப்புகளிலிருந்து ஒரு பகுதியாகத்தான் உள்ளது. ஆரம்ப கட்டத்தில் 20 சதவீத வர்த்தகம் ஆன்லைன் மூலம் கிடைக்கும்.

முன்னணி இணையதளங்கள் வரிசையில் ஜஸ்ட் டயல், கோ டாடி, சுலேகா, ஒஎல்எக்ஸ், குயிக்கர் போன்ற தளங்களும் உள்ளன. இவற்றிலும் முயற்சி செய்ய முடியும். தற்போதைய நிலையில் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் முதலில் ஆன்லைனில் தேடி விலையை ஒப்பிடுவதும், விற் பனையாளர் யார் என தேடுவதும் சாதாரணமான நிகழ்வாக மாறியுள்ளது. அதனால்தான் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் மிகப்பெரிய சந்தையாக உருவாகியுள்ளன இந்த இணைய தளங்கள். இதை சாதகமாக பயன்படுத்துவது தொழில்முனைவோர்களின் சாமர்த்தியம்.

- maheswaran.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்