நீர்வழி பாதைகள்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் ஏற்றுமதியில் துறைமுகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் உள்நாட்டு போக்குவரத்தில் நீர்வழிப்பாதைகளின் பங்களிப்பு மிகவும் குறைவு. இப்போது மத்திய அரசு நீர்வழிப்பாதை போக்குவரத்தில் கவனம் செலுத்துகிறது. வருங்காலத்தில் நீர்வழிப்போக்குவரத்து பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார். நீர்வழிப் போக்குவரத்து குறித்த தகவல்கள் இதோ!

# தேசிய நீர்வழிப்பாதைகள் மசோதா கடந்த ஆண்டு மக்களவையில் நிறைவேறியது. கடந்த பிப்ரவரியில் மாநிலங்களவையில் நிறைவேறியது.

# 5 - ஏற்கனவே உள்ள தேசிய நீர்வழிப் பாதைகளின் எண்ணிக்கை

# 106 - புதிய மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ள நீர்வழிப்பாதைகளின் எண்ணிக்கை

# 1986-ம் ஆண்டு தேசிய நீர் பாதை 1 அறிவிக்கப்பட்டது.

# கங்கை ஆற்றில் அலாகாபாத்தில் இருந்து வாரணாசி வழியாக ஹால்தியா வரை இந்த பாதை செல்கிறது.

# இந்தப் பாதையின் மொத்த நீளம் (கி.மீ.) 1,620

# 2013-ம் ஆண்டுதான் இந்த நீர்வழிப்பாதை வழியாக ஜார்க்கண்ட் மாநிலம் பராக்காவில் இருந்து கொல்கத்தாவுக்கு நிலக்கரி எடுத்துச்செல்லப்பட்டது.

# கடந்த ஆகஸ்ட் மாதம் மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ, செலரியோ உள்ளிட்ட 200 கார்களை வாரணாசியில் இருந்து கொல்கத்தாவுக்கு அனுப்பியது. ஒரு காருக்கு ரூ.2,000 மீதமாகும்.

# இந்த ஆண்டு தொடக்கத்தில் கடல் வழியாக சென்னையில் இருந்து குஜராத் பிபாவவ் துறைமுகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டன ஹூண்டாய் கார்களின் எண்ணிக்கை 800.

# நாடுகள் நீர்வழிப் போக்குவரத்தின் பங்கு

சீனா - 47%, ஜப்பான் - 44%, கொரியா - 40%, ஐரோப்பிய நாடுகள் - 40%

# 3.6% - மொத்த சரக்கு போக்குவரத்தில் நீர்வழிப்பாதை சரக்கு போக்குவரத்தின் பங்கு

# 7% - மத்திய அரசு 2018-ம் ஆண்டுக்குள் உயர்த்த திட்டமிட்டுள்ள அளவு

# ஒரு டன் பொருளை, ஒரு கிலோமீட்டர் எடுத்துச்செல்ல எடுத்துச் செல்ல ஆகும் செலவு

> கப்பல் - 25 பைசா முதல் 50 பைசா

> ரயில் - ரூ.1.50

> தரை வழி - ரூ.2.50

# 20,000 கிலோமீட்டர் நீர்வழிப்பாதைகள் அமைப்பதற்கு ஆகும் செலவு ரூ.80,000 கோடி கப்பல் துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகையே ரூ.1,800 கோடிதான். பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் வரி மூலம் கிடைக்கும் தொகையில் 5 சதவீதத்தை நீர்வழிப்பாதைகளை மேம்படுத்த ஒதுக்க வேண்டும் என கட்கரி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

# குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களிடையே 850 கிலோமீட்டர் நீர்வழிப்பாதை அமைப்பதன் மூலம் இரு மாநிலங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று கட்கரி கூறியிருக்கிறார்.

# தற்போது உள்ள 5 தேசிய நீர்வழிப்பாதைகளின் நீளம் 4,434 கிலோமீட்டர்.

# இந்த நீர்வழிப்பாதை மூலமாக வருடத்திற்கு கையாளப்படும் சரக்குகள் அளவு 30 லட்சம் டன்

# இந்தியாவில் நீர்வழிப் போக்குவரத்திற்கான லாஜிஸ்டிக்ஸ் கட்டணம் 17% முதல் 18%. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனாவில் லாஜிஸ்டிக்ஸ் கட்டணம் 8% முதல் 12%

# நீர் வழிப்பாதைகள் மூலம் நிலக்கரி எடுத்து செல்லும் போது ஒரு டன்னுக்கு 1,200 ரூபாய் குறையும். இதனால் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை 75 பைசா குறையும்.

# உள்நாட்டு நீர்வழிப்பாதைகளின் நீளம் (கிலோமீட்டரில்)

> சீனா - 1.40 லட்சம், அமெரிக்கா - 40 ஆயிரம்

# அதிக தூரம் நீர்வழிப்பாதைகள் உள்ள மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் உத்தர பிரதேசம். அதனை தொடர்ந்து மேற்கு வங்கம், ஆந்திரா, அஸ்ஸாம் மற்றும் கேரளா மாநிலங்களில் நீர் வழிப்பாதைகள் உள்ளன.



பலன்கள்

> மற்ற போக்குவரத்தை விட குறைந்த செலவில் அதிக பொருட்களை எடுத்துச் செல்ல முடியும்.

> நீர் பாதைகள் அதிகப்படுத்தும்போது போக்குவரத்து நெரிசல் குறைந்து, கரியமில வாயு வெளியேறுவது குறையும். சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படும்.

> சாலை, தண்டவாளங்கள் போல பராமரிப்பு செலவு இல்லை.

- கிராஃபிக்ஸ்: தே.ராஜவேல்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்