ஆபிஸ் கிளம்பும் அவசரத் தில் பர்ஸை வீட்டிலேயே வைத்துவிட்டு, அவதிப்படு பவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். அதில்தான் பணம், கிரெடிட், டெபிட் கார்டுகள் இருக்கும். ஆனால், எதை மறந்தாலும் போனை யாரும் மறப்பதில்லை. காரணம் போன் இல்லாவிட்டால், கை ஒடிந்தது போல் உணர்வதுதான். அப்படியே வீட்டில் போனை மறந்து வைத்து விட்டு வந்தாலும் படியிறங்கும்போது நினைவுக்கு வந்துவிடும். அப்படிப் பட்ட போனிலேயே பர்ஸ் வசதியும் இருந்தால் எப்படி இருக்கும்?
பணம் வேண்டாம், கிரெடிட் கார்டோ, டெபிட் கார்டோ வேண் டாம்... போன் இருந்தால் போதும்... தேவையான ஷாப்பிங் ஒரு நொடியில் முடிந்து விடும். கார்டை தேய்க் கும் மிஷினின் அருகே சாம்சங் போனை கொண்டு சென்றாலே போதும். பணம் கைமாறிவிடும். இதுதான் சாம்சங் பே.
நம்பகமான பிராண்டுகளில் ஒன்றான சாம்சங் நிறுவனம் இந்த பேமென்ட் முறையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேக்னடிக் செக்யூர் டிரான்ஸ்மிஷன் (எம்எஸ்டி), நியர் பீல்டு கம்யூனிகேஷன் (என்எப்சி) தொழில்நுட்பம் மூலம் இது செயல்படுகிறது.
வெளிநாடுகளில் போன் மூலம் பணப் பரிமாற்றம் நடைமுறைக்கு வந்து பல ஆண்டுகளாகி விட்டது. இந்தியாவில் இப்போதுதான் அறிமுகம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்-7, கேலக்ஸி நோட் 5 உள்ளிட்ட 6 வகை போன்களில் மட்டுமே இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த போன் வைத்திருப்பவர்கள் சாம்சங் பே ஆப்-ஐ டவுன்லோடு செய்து, ஒரே ஒருமுறை கிரெடிட், டெபிட் கார்டு விவரங்களை பதிவு செய்து வைத்துக் கொண்டால் போதும், மாஸ்டர் கார்டு, விசா கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு போன்ற நிறுவனங்கள் மட்டுமின்றி, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, எஸ்பிஐ, சிட்டி பேங்க் போன்ற வங்கிகளுடனும் சாம்சங் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மேலும் பேடிஎம், யூபிஐ மூலமும் பணப் பரிமாற்றம் செய்யலாம்.
முதலில் 2015-ல் தென் கொரியா வில்தான் சாம்சங் பே அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு கிடைத்த வெற்றியை அடுத்து அமெரிக்கா, சீனா, ஸ்பெயின், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, பிரேஸில், ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது, இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பேமென்ட் சேவையை அறிமுகம் செய்த முதல் போன் நிறுவனம் சாம்சங்தான்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு டிஜிட்டல் பணப் பரிமாற்றத் துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. உலகில் எந்த அரசும் இந்த அளவுக்கு இதில் தீவிரமாக இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்தான், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக சாம்சங் பே -ஐ அறிமுகம் செய்தோம் என சாம்சங் தென்மேற்கு ஆசிய பிராந்தியத்தின் தலைவர் ஹாங் கூறியுள்ளார்.
இந்தியாவைப் பொருத்தவரை `கேஷ் இஸ் கிங்' என்பார்கள். அதாவது, பர்ஸ் நிறைய பணத்தை வைத்துக்கொண்டு,ரொக்கம் கொடுத்துத்தான் பெரும்பாலான மக்கள் பொருட்களை வாங்குவது வழக்கம். 80 சதவீதம் இப்படித்தான். கணக்கிலேயே வராது. இது கறுப்பு பணப் புழக்கத்துக்கு வழி வகுக்கிறது. இதனால், இந்தியப் பொருளாரத்தின் உண்மையான வலிமை தெரியாமலேயே போய் விடுகிறது. ஆனால் ரொக்க பணப் பரிமாற்றத்தைக் குறைக்கும் டிஜிட்டல் பேமென்ட் வழிமுறைகள் அதிகரிக்கும்போது, அரசுக்கு வரி மூலம் கிடைக்கும் வருமானமும் அதிகரிக்கும்.
மொபைல் பேமென்ட் முறையில் கிரெடிட், டெபிட் கார்டுகளில் நடப் பதுபோல் மோசடி நடக்க வாய்ப்பே இல்லை. போலி கார்டு தயாரிப்பது போல், போலியாக எதுவும் செய்ய முடியாது. மேலும், பணப் பரிமாற் றத்துக்கு உங்கள் கை விரல் ரேகை யும், போன் ஐடென்டிபிகேஷன் நம் பரும் அவசியம். எனவே போனே தொலைந்துபோனாலும், அதன் மூலம் பண மோசடி நடக்காது என அடித்துக் கூறுகிறது சாம்சங் பே.
- ravindran.s@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago