கனடாவிலிருந்து வளை கரம் நீட்டும் ஷியோ!

By செய்திப்பிரிவு

பெப்ஸிகோ நிறுவன தலைமைச் செயல் அதிகாரி இந்திரா நூயி, பயோகான் நிறுவன தலைவர் கிரண் மஜூம்தார், கைனடிக் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சுலாஜா பிரோடியா மோத்வானி. இவர்கள் எல்லாம் தொழிற்துறையில் பல்வேறு உயரங்களை தொட்டு பல சாதனைகளை புரிந்த சில பெண்கள். ஆனால் பொதுவாக பார்க்கும் பொழுது சாதாரண நிலையில் பெண்கள் ஒரு தொழிலை தொடங்கி அதில் வெற்றி காண்பது என்பது இன்றைய சூழலில் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. அதற்கு சமூக பொருளாதார காரணங்கள் நிறைய இருக்கலாம். இந்த காரணங்களை எல்லாம் களைந்துவிட்டு பெண்கள் தொழில்முனைவை ஊக்குவிக்க வேண்டிய தருணத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். இதற்கு அரசாங்கம் பல முன் முயற்சிகளை செய்து கொண்டே வருகிறது. இதேபோல் பெண்கள் தொழில் முனைவை ஊக்குவிக்கும் விதமாக ஷியோ (sheEO) என்ற நிறுவனம் இந்தியாவிற்கு வருகிறது.

கனடாவின் டொரோண்டாவை மையமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனம் ஷியோ. பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக குறைந்த வட்டியில் கடன் வழங்குவது, ஸ்டார்ட்அப் நிறுவனங் களில் முதலீடு செய்வது என பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது இந் நிறுவனம் இந்தியாவிற்கு வருகிறது. இந்தியாவில் பெண் தொழில்முனைவோர்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய இருக்கிறது.

ஒரு நகரத்தில் 1,000 பெண்களை தேர்ந்தெடுத்து அதை நூறு குழுக்களாக பிரித்து, குழு ஒன்றுக்கு 67,000 ரூபாய் வீதம் குறைந்த வட்டியில் கடனாக வழங்க இருப்பதாக ஷியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு முறை கடன் வாங்கி செலுத்திய பின்பு அடுத்த முறை தொகையை அதிகமாக வழங்கவும் ஷியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண் தொழில்முனைவோர்களுக்கு கடன் வழங்கி வருகிறது. ஆனால் அவர்கள் வங்கிகளில் அவ்வளவு எளிதாக கடன் பெற முடியாதது இந்த திட்டத்திற்கு பின்னடைவாக இருந்து வருகிறது. கிட்டத்தட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் போன்றதொரு செயல்முறையைதான் ஷியோ நிறுவனம் கொண்டு வர இருக்கிறது. ஆனால் அவர்களே நேரடியாக தொழில் முனைவோர்களை தேர்ந்தெடுத்து கடன் வழங்குவது என்பது வரவேற்கப்பட வேண்டியது.

கிரவுட்பண்டிங் மூலம் திரட்டப்பட்ட நிதியைத்தான் இந்த திட்டத்தில் பயன்படுத்த இருக்கிறோம். மேலும் தற்போது வருமானத்தில் உள்ள நிறுவனங்கள் மீதே ஷியோ நிறுவனம் முதலீடு செய்ய இருக்கிறது. மைக்ரோபைனான்ஸ் வட்டி விகிதத்தி லேயே கடன் வழங்க இருக்கிறோம். பெண்களுக்கு என்று பிரத்யேகமாக தொடங்குவதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இதே திட்டத்தை ஆண்களுக்கும் தொடங்க இருக்கிறோம் என்று சமீபத்தில் மும்பை வந்திருந்த ஷியோ நிறுவனத்தின் நிறுவனர் விக்கி சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பெண்களை ஒரு குழுவாக ஒருங்கிணைக்க முடியும். ஒரு குழுவாக செயல்படும் போது அவர்களால் தொழிலை எளிதாக மேலே கொண்டு வர முடியும் என்று ஷியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதன் முதலில் 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் சோதனை முயற்சியாக கனடாவில் 100 குழுக்களில் முதலீடு செய்தது. அது வெற்றியடையவே இந்த வருடம் அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சலீஸ், கொலாரடோ ஆகிய மூன்று நகரங்களிலும் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. 2020-ம் ஆண்டிற்குள் 1,000 நகரங்களில் இந்த திட்டத்தை கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறது.

பெண்கள் முன்னேற்றத்தில் மிகவும் பின் தங்கியுள்ள இந்தியா போன்ற நாடுகளில் இது போன்ற திட்டங்களை நிறைய நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும். ஷியோ நிறுவனத்திற்கு இந்திய பெண்கள் சிவப்பு கம்பள வரவேற்போடு காத்திருக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்