பழமொழி சொன்னால் அனுபவிக் கனும் ஆராயக் கூடாது என்னும் திரைப்பட வசனம் மிகப் பிரபலம். அதேபோல சொகுசான பிராண்டுகள் குறித்து பக்கம் பக்கமாக எழுதினாலும் அதனை அனுபவித்தால் மட்டுமே உணர முடியும். அதுபோன்ற அனுபவம் புணேவில் உள்ள மெர்சிடஸ் பென்ஸ் ஆலைக்கு சென்றபோது கிடைத்தது.
100 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலையில் அமைந்துள்ளது. ஆண்டுக்கு 20,000 கார்கள் தயாரிக்கும் திறன் உடைய ஆலை இருந்தாலும், வாடிக்கை யாளர்கள் விரும்பினால் நேரடியாக தொழிற்சாலைக்கு வந்து தங்களுக்கு தேவையான கார்களை தேர்ந்தெடுத்து வாங்கிக்கொள்வதற்கான வசதியும் இருக்கிறது. வாடிக்கையாளர்களை கையாளுவதற்கென பிரத்யேக மையம் இருக்கிறது. தொழிற்சாலையில் கார் களை ஓட்டிப்பார்த்து தேர்வு செய்ய முடியும். வாடிக்கையாளர்களுக்கு தகுந் தது போல உள் அலங்காரங்களை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். இந்த ஆலை யில் ஹெலிபேட் இருக்கிறது. தேவைப் படும் வாடிக்கையாளர்கள் அதனை பயன்படுத்திக்கொள்ள முடியும்
தவிர மலை பாதை மற்றும் கரடுமுர டான சாலையில் எஸ்யூவி கார் எப்படி செயல்படுகிறது என்பதை பிரத்யேக ஓட்டுனர் உதவியுடன் செயல்பாடுகளை புரிந்துகொள்ள முடிந்தது. இதற்கென அமைக்கப்பட்ட பிரத்யேக பாதையில் 47 டிகிரி செங்குத்தான பாதையில்/பள்ளத்தில் பாதுகாப்பாக ஏறி இறங்க முடியும். இதுபோன்ற பாதையில் செல் லும் போது ஏற்படும் பிரச்சினை வாக னத்தை சரியாக நிறுத்த (பிரேக்) முடி யாது. ஆனால் மெர்சிடஸ் எஸ்யூவியில் துல்லியமாக பிரேக் பிடிக்க முடியும். அதே போல 30 டிகிரி பக்கவாட்டு பாதையில் பாதுகாப்பாக செல்ல முடிந்தது.
சந்தை நிலவரம்
சொகுசு கார் சந்தையில் விற்பனை யாகும் கார்களின் எண்ணிக்கை குறைவு என்பதால், தொடர்ந்து செயல்பட்டால் மட்டுமே சந்தையில் நிலைக்க முடியும். கடந்த 2014-ம் ஆண்டு சில நூறு எண்ணிக்கையில் முதல் இடத்தை இழந்தது மெர்சிடஸ் பென்ஸ். ஆனால் 2015-ம் ஆண்டு 13,502 கார்களை இந்த நிறுவனம் விற்றுள்ளது. நடப்பாண்டின் முதல் பாதியில் 6,597 கார்களை விற்றுள்ளது.
சொகுசு கார் சந்தையில் இருக்கும் மற்ற நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே விற்பனை தகவல்களை வெளியிடுவதால் இந்த ஆண்டு முதல் இடத்தை பிடிக்குமா என்பது ஆண்டின் இறுதியில்தான் தெரியவரும். ஆனால் முதல் இடத்தை தக்கவைத்து கொள்வதற்கான நடவடிக்கையில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. உதாரணத்துக்கு புதுடெல்லியில் 2,000 சிசிக்கும் மேலான டீசல் கார்களை விற்பதற்கு நீதிமன்றம் தடைவிதித்தது. இந்த தடையால் பாதிக்கப்பட்ட சில நிறுவனங்களில் மெர்சிடஸ் பென்ஸும் ஒன்று. மொத்தம் விற்பனையாகும் கார்களில் 80% டீசல் கார்கள்தான்.
இந்த நிறுவனத்தின் பெரும்பாலான கார்கள் டீசல் மாடல்களே. ஒரு சில மாடல்கள் மட்டுமே பெட்ரோலில் இயங்குபவை. அதனால் பல மாநிலங்களில் இருந்தும் பெட்ரோல் மாடல் கார்களை டெல்லி வரவழைத்து விற்பனை செய்துள்ளது. இப்போது டெல்லியில் விற்பனையாகும் 2,000 சிசிக்கு அதிகமான டீசல் கார்களுக்கு ஒரு சதவீத பசுமை வரி செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. இதனால் நிலைமை சற்று மேம்பட்டாலும், தங்களது அனைத்து மாடல்களிலும் பெட்ரோலில் இயங்கும் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரோலண்ட் போல்கர் தெரிவித்தார்.
தவிர இந்தியா முழுவதும் 40 விற்பனையகங்கள் இருக்கின்றன. இந்த ஆண்டு திறக்க திட்டமிட்ட 10 விற்பனையகங்களில் நாக்பூர், புணே, விஜயவாடா ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன. இந்த மாத இறுதியில் அகமதாபாதில் ஒரு விற்பனையகம் திறக்க உள்ளது. ஆண்டு இறுதியில் ஆறு விற்பனையகங்களைத் திறக்க பென்ஸ் திட்டமிட்டுள்ளது.
தொழிற்சாலையை சுற்றிப்பார்க்கும் போது நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரோலண்ட் போல்கரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நமக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் இருந்து…
இந்திய பிரிவின் நிர்வாக இயக்குநராக நீங்கள் பொறுப்பேற்று ஒரு வருடம் முடியப்போகிறது. சொகுசு கார் பிரிவில் சர்வதேச அளவில் மற்ற சந்தைகளுக்கும் இந்தியாவுக்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?
இந்தியா எங்களுக்கு முக்கியமான சந்தை. எந்த அளவுகோல்களின் படி பார்த்தாலும் இந்தியா வளரும் சந்தை. ஆனாலும் இன்னும் சில விஷயங்கள் மாற வேண்டி இருக்கிறது. இந்தியாவின் சாலைகள், கட்டுமானம் உள்ளிட்டவை மேம்பட வேண்டும். உதாரணத்துக்கு சொகுசு கார்களை இன்னும் பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மற்ற வளர்ந்த நாடுகளில் சொகுசு பிரிவு என்பது மொத்த விற்பனையில் 5 முதல் 7% வரை இருக்கிறது. ஆனால் இந்தியாவில் 1.3 சதவீதம் மட்டுமே இருக்கிறது. அதனால் சொகுசு கார் பிரிவில் வளர்ச்சிக்கு வாய்ப்பு நிறைய இருக்கிறது.
சொகுசு கார் பிரிவில் நிறைய போட்டி இருக்கிறது. இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?
போட்டி நல்லது. போட்டி இருந்தால் மட்டுமே சந்தை சிறப்பாக இருக்கும்.
உங்களுடைய மொத்த உற்பத்தி திறன் 20,000 கார்கள். ஆனால் 2015-ம் ஆண்டு 13,502 கார்கள் மட்டுமே விற்றிருக்கிறீர்கள். மொத்த திறனையும் எப்போது பயன்படுத்துவீர்கள். ஏதேனும் திட்டம் இருக்கிறதா?
இதற்கு கால அவகாசம் ஏதும் நிர்ணயம் செய்யவில்லை. எங்களது விநியோகத் தொடர்புகளை விரிவுபடுத்தி இருக்கிறோம். தேவை உயரும் போது உற்பத்தியையும் அதிகப்படுத்துவோம். தேவைப்பட்டால் 20,000 கார்களுக்கு மேலே கூட உற்பத்தி செய்ய முடியும். உற்பத்தி பிரச்சினை இல்லை. சந்தை இன்னும் தயாராகவில்லை.
40 விநியோகஸ்தர்கள் இருந்தாலும் வட கிழக்கு மாநிலங்களில் விற்பனை விரிவுபடுத்தப்படவில்லையே... வடகிழக்கு பற்றி உங்களுடைய திட்டம் என்ன?
தற்போது தென் இந்திய சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. வட கிழக்கு மாநிலங்களுக்கு என்று தனியாக திட்டம் ஏதும் வகுக்கவில்லை. வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்துதான் விநியோக தொடர்புகளை அமைக்க முடியும். விநியோகஸ்தர்கள் முதலீடு செய்ய முன்வர வேண்டும். அதன் பிறகுதான் இது குறித்து யோசிக்க முடியும்.
விற்பனைக்குப் பிறகான சேவை சொகுசு கார்களில் முக்கியம். அதிக எண்ணிக்கையிலான கார்களை அறிமுகம் செய்யும் பட்சத்தில் இதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லையா?
இது எங்களுக்கு சவால்தான். ஆனால் வாடிக்கையாளர்கள் எங்களிடமிருந்து நிறைய எதிர்பார்கிறார்கள். தொழில்நுட்ப பயற்சி உள்ளிட்ட பல விஷயங்களில் விநியோகஸ்தர்களுக்கு பயிற்சி வழங்குகிறோம்.
மத்திய அரசு ‘ஸ்கிராப்பிங்’ கொள்கையை வெளியிட இருக்கிறது. இதனால் சொகுசு கார் சந்தையில் விற்பனை உயரும் என நினைக்கிறீர்களா?
விற்பனை உயரும் என எனக்கு தோன்றவில்லை. 10 ஆண்டுகளுக்குப் பிறகும் சொகுசு கார்களின் சந்தையில் விலை பெரிய அளவில் குறையாது.
karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago