சிதம்பரத்தைச் சேர்ந்தவர் அன்பரசன். பிரிண்டிங் தொழிலுக்கு சிறு வயதிலேயே வந்தவர்.
பிரிண்டிங் தொழில் சார்ந்து தினக்கூலி தொழிலாளியாக தொடங்கிய வாழ்க்கை இன்று சென்னை பாரிமுனையில் தனியாக தொழிலை நடத்தும் அளவுக்கு வளர்ந்துள் ளார். ‘ஆரம்பத்தில் விசிட்டிங் கார்டு பிரிண் டிங் மட்டும்தான் செய்து வந்தேன். ஆனால் அதை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தால் நீடிக்க முடியாது என ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வளர்ந்தவன் நான்’ என் கிறார். தற்போது சென்னை வடபழனியில் வசிக்கும் இவரது அனுபவம் இந்த வாரம் ‘வணிக வீதி’யில் இடம் பெறுகிறது.
சிதம்பரத்தில் வேலை செய்து கொண்டிருந்த நாட்களில் எனது சென்னை நண்பர்கள் இருவர் தனியாக தொழிலில் இறங்கலாம் என ஆர்வம் ஊட்டினர். மார்க்கெட்டிங் வேலைகளை அவர்கள் பார்த்துக் கொள்வது என்றும், பிரிண்டிங் வேலைகளை நான் பார்த்துக் கொள்வது என்றும் வேலைகளை பிரித்துக் கொண்டு இறங்க திட்டமிட்டோம். அவர்களை நம்பி சென்னை வந்தேன்.
ஆலந்தூரில் சின்னதாக பிரிண்டிங் யூனிட் தொடங்கினோம். விசிட்டிங் கார்டுகள் பிரிண்டிங்கில்தான் முதலில் கவனம் செலுத்தினோம். ஏற்கெனவே திட்டமிட்டபடி நண்பர்கள் ஆர்டர் எடுத்துவர, நான் பிரிண்டிங் செய்து வந்தேன். இந்த நிலையில் நண்பர்கள் வேறு வேலைகள் கிடைத்து தொழிலிலிருந்து விலக தனித்து விடப்பட்டேன்.
அப்போது சென்னையில் எனக்கு யாரை யும் தெரியாது. புதிய ஆர்டர்கள் வாங்க எப்படி திறமையாக பேசுவது என்பதும் கூட தெரியாது. இருந்தாலும் ஒரு தைரியத் தில் நான் ஏற்கெனவே பிரிண்டிங் செய்த விசிட்டிங் கார்டுகளை வைத்துக் கொண்டு அவர்களைத் தேடிப்போனேன். அவர்களிட மிருந்து உடனடியாக ஆர்டர்கள் கிடைக்க வில்லை என்றாலும், அது புதிய அனுபவ மாக இருந்தது.
கோயம்பேடு காய்கறி கடைக்காரர்கள்தான் அதிகமாக பிரிண் டிங் செய்திருந்தனர். அங்கு சில நாட்கள் சென்று வந்ததில் புதிய ஆர்டர்கள் கிடைத்தது. அப்படியே சில நாட்கள் செல்ல அரும்பாக்கத்தில் ஒரு இடத்தை வாடகைக்கு பிடித்து அங்கு வந்துவிட்டேன்.
ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலுக்குத் தேவையான கார்டுகள், மை, மற்றும் பிற பொருட்களை தொடர்ச்சியாக பாரிமுனையில் ஒரு கடையில் வாங்கிக்கொண்டிருந்தேன். இதனால் அங்கு நல்ல பழக்கம் கிடைத்தது. ஆனால் விசிட்டிங் கார்டு ஆர்டர்களை பொறுத்தவரையில் ஒருவர் ஒரு முறை ஆயிரம் கார்டு அடித்தால் ஆறு மாதங்களுக்கு பிறகுதான் அவர்களிடமிருந்து மீண்டும் ஆர்டர் கிடைக்கும். நூறு வாடிக்கையாளர்கள் என்றாலும் இதுதான் நிலைமை. இதனால் கூடவே திருமண அழைப்பிதழ்கள் மற்றும் இதர பிரிண்டிங்குகளிலும் கவனம் செலுத்த வேண்டுமென திட்டமிட்டேன். இப்படி தொடங்கியதுதான் ரிஸ்ட் பேண்ட் தயாரிப்பு வேலைகளும்.
நான் பாரிமுனைக்கு வேலை நிமித்தம் தொடர்ச்சியாக சென்று கொண்டிருந்த காலகட்டங்களில் எனது வேகத்தையும், தொழிலையும் தொடர்ச்சியாக கவனித்துக் கொண்டிருந்த அந்த கடைக்காரர் ஆண்டர் சன் தெருவில் ஒரு இடத்தை வாடகைக்கு பிடித்து கொடுத்தார். பாரிமுனையில் உள்ள அழைப்பிதழ் அட்டைகள் தயாரிக் கும் முக்கிய பெரிய நிறுவனம், அவர் களிடம் அழைப்பிதழ் ஆர்டர் கொடுப்பவர் களுக்கான பிரிண்டிங் வேலைகளை எனக்கு தொடர்ச்சியாக கொடுக்கத் தொடங்கினர்.
தவிர தங்க நகைக் கடைகளுக்கான விலைப் பட்டைகள், லேசர் பிரிண்டிங் லேபிள்கள், டம்பர் புரூப் லேபிள் என தொழிலில் தொடர்ச்சியாக பலவற்றையும் சேர்த்துக் கொண்டேன். இப்படியாக பலரது வழிகாட்டுதல்களோடு தொழிலின் அடுத்த அடுத்த கட்டங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்.
தற்போது மருத்துவமனைகள், பொது நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு பூங்காக்களில் கைகளில் கட்டிவிடும் இந்த ரிஸ்ட் பேண்ட் தயாரிப்புகளில் முழு கவனம் செலுத்தி வருகிறேன். சென்னையில் மிகக் குறைவான நபர்களே இந்தத் தொழிலில் உள்ளனர். நிகழ்ச்சிகளில் அடையாள அட்டைகளுக்கு பதிலாக இந்த ரிஸ்ட் பாண்ட்களை கட்டிவிட்டால் போதும். கிழிக்கவோ, கழற்றி மாட்டவோ முடியாது. மேலும் தேவைக்கு ஏற்ப வரிசை எண், நிறுவனத்தின் பெயரையும் அச்சிட்டுக் கொள்ளவும் முடியும்.
தற்போது வடபழனியில் இருந்தபடி இந்த வேலைகளை செய்து கொண்டிருக்கிறேன். அடுத்த கட்டமாக சுவர்களில் ஒட்டும் விதமாக உள் அலங்கார பிரிண்டிங் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறேன். நான்கு நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருவதுடன் தொழிலில் தற்போது என் தம்பியும் உடனிருந்து கவனித்துக் கொள்கிறார். தனித்து விடப்பட்ட சூழ்நிலையிலும் ஊருக்கு திரும்ப செல்லாமல் வாய்ப்புகளை தேடி அலைந்ததுதான் என் பயணத்தின் முதல்படி என்கிறார் இவர்.
சென்னையில் எனக்கு யாரையும் தெரியாது. புதிய ஆர்டர்கள் வாங்க எப்படி திறமையாக பேசுவது என்பதும் கூட தெரியாது. இருந்தாலும் ஒரு தைரியத்தில் நான் ஏற்கெனவே பிரிண்டிங் செய்த விசிட்டிங் கார்டுகளை வைத்துக் கொண்டு அவர்களைத் தேடிப்போனேன்.
maheswaran.p@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago