“சுமார் 770 பில்லியன் டாலர் கறுப்புப் பணம் இந்தியாவிற்குள் 2005 2014 ஆண்டுகளுக்கிடையே வந்தது 165 பில்லியன் டாலர் கறுப்புப் பணம் இந்தியாவை விட்டு வெளியேறியதாக” - அமெரிக்காவை சார்ந்த உலக நிதி ஒருங்கிணைப்பு அமைப்பு சமீபத்தில் அறிவித்தது. வளரும் நாடுகளிடையே வந்து செல்லும் சட்டவிரோத நிதி ஓட்டம் (Illicit fund flow) பற்றி ஆராயும் இந்த அமைப்பு வளர்ந்த நாடுகளில் இருந்து வளரும் நாடுகளுக்கு இத்தகைய பணம் செல்கிறது என்கிறது. வளரும் நாடுகளில் அதிக வட்டி கிடைப்பதும் இத்தகைய நிதி ஓட்டத்திற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
முறையற்ற பணப் பரிமாற்றம் செய்த நாடுகளில், சீனா, ரஷ்யா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு அடுத்தபடியாக உலக அளவில் இந்தியா 4-ஆவது இடத்தில் உள்ளது.
2014 தேர்தலின் போது அனைத்து கட்சிகளும் கறுப்புப் பணத்தை குறிப்பாக வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டு வருவதாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
கறுப்புப் பணம் மற்றும் சிவப்புப் பணம்
கறுப்புப் பணம் என்பது வரி கட்டாமல் வரி ஏய்ப்புக்கு உண்டாகும் பணம். இது வருமான வரிச் சட்டத்தில் குற்றமாகக் கருதப்படுகிறது. வரி ஏய்ப் புக்கு உள்ளாகும் கறுப்புப் பணம் உரு வாவதற்கு பல காரணங்கள் உள்ளன. வருமானத்தைக் குறைப்பதற்காக விற்பனையின் பகுதியை மறைத்தல் அல்லது செலவுகளை அதிகரித்தல் போன்ற வகைகளில் லாபத்தைக் குறைத்து சிறிய வரியை மட்டும் கட்டு வதால் கறுப்பு பணம் வியாபாரத்தில் உருவாகிறது.
இயந்திரங்கள், மூலப் பொருட்கள் கொள்முதலில் கமிஷன் பெறுவது, செயற்கை செலவுகளுக்கு ரசீது (Bill) தயாரிப்பது போன்ற பல வகைகளில் கறுப்புப்பணம் உற்பத்தி ஆகிறது.
தவிர லஞ்சப்பணம், ஊழல் பணம் ஆகியவையும் வரிக்கு உட்படாமல் கறுப்பு பணம் ஆகிறது. முதல் வகை “கறுப்புப் பணம்” என்றும் இரண்டாம் வகை “சிவப்பு பணம்” (Red Money) என்றும் அழைக்கப்படுகிறது. “சிவப்பு பணம்” என்பது ஊழல் மற்றும் சட்டத் திற்கு புறம்பாக சம்பாதிக்கப்பட்ட பணம். இது குறைந்தபட்சமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குற்றங் களுக்கு உட்பட்டது. கறுப்புப் பணத்திற்கு வரி மட்டும்தான் கட்டப்படுவதில்லை. ஆனால் சிவப்பு பணம் என்பது பல குற்றங்களை உள்ளடக்கியது.
கறுப்புப் பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது, தங்கம் வைரம் போன்றவற்றில் முதலீடு செய்வது, பினாமி பெயரில் முதலீடு செய்வது, ஆடம்பரப்பொருட்கள் வாங்குவது போன்றவற்றிக்கு உபயோகப்படுத்தப் படுகிறது.
வெளிநாட்டிற்குச் சென்று ஹவாலா முறையில் இந்தியாவிற்குள் வரும் பணத்தைத்தான் “சுழற்சி முறை” (Round Tripping) என்று சினிமாவில் பார்த்திருக்கிறோம். ஏற்றுமதி செய் பவர்கள் குறைந்த விலைக்கு அனுப்பி மீதமுள்ள தொகையை வெளிநாட் டில் வாங்கிக்கொள்வது, இறக்குமதி செய்பவர்கள் அதிகவிலை குறிப்பிட்டு மீதித்தொகையை வெளிநாட்டில் பெற் றுக்கொள்வது போன்ற முறைகளில் கறுப்புபணத்தை வெளிநாட்டில் தக்க வைத்து மீண்டும் நண்பர்கள் உறவினர் கள் பெயரில் இந்தியாவிற்குள் பணத்தை முதலீடு செய்யும் முறையையும் கேள்விப்பட்டுள்ளோம். தவிர ஊழல் லஞ்சப்பணத்தை ஹவாலா முறையில் வெளிநாட்டிற்கு அனுப்பி மீண்டும் இந்தியாவிற்குள் கொண்டு வரும் முறையையும் கேள்விபட்டுள்ளோம். இது பல ஹவாலா ஏஜெண்டுகள் மூலம் செய்யப்படுகிறது.
ஹவாலா முறை என்றால் என்ன?
உதாரணமாக டெல்லியில் ஒருவ ருக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று வைத்து கொண்டால் அந்த தொகையை சென்னையில் உள்ள ஹாவாலா ஏஜென்ட் ஒருவரிடம் தொகையைக் கொடுத்தால், அவர் தனது தொடர்பில் உள்ள டெல்லியில் உள்ளவர் மூலம் சம்பந்தப்பட்டவருக்கு பணத்தை கொடுப்பார். இதற்கு அடையாளமாக சில சங்கேத வார்த்தைகள் இருக்கும். இந்த பரிமாற்றத்தில் இந்த சங்கேத குறியீடு பயன்படுத்தினால் சரியான நபர்கள் என்று அர்த்தம். இங்கிருந்து டெல்லியில் உள்ளவருக்கு எந்த வங்கி நடவடிக்கையும் இல்லாமல் பணத்தைக் கொடுப்பதுதான் ஹவாலா முறை. இதற்காக இந்த ஏஜென்ட்கள் கமிஷன் அடிப்படையில் இயங்குவதாக செய்திகள் கூறுகின்றன.
இதுபோல வெளிநாடுகளில் இந்த பணத்தை கொடுப்பது வெளிநாட்டு ஹவாலா முறை எனக் கூறப்படுகிறது. உதாரணமாக மும்பையில் உள்ள ஒருவர் தங்களது கறுப்புப் பணத்தை கொடுக்கும் பட்சத்தில் அந்த பணத்தை துபாயில் அவருடைய ஏஜென்ட் மூலம் பெற்றுக் கொண்டு அங்கே செலுத்துவது வெளிநாட்டு ஹவாலா முறையாகும்.
இவ்வாறு வெளிநாட்டில் செலுத்தப் பட்ட ஹவாலா பணத்தை, அந்நிய நிறு வன முதலீடு (Foreign Institutional Investor) என்னும் முறையில் இந்தியாவில் கொண்டுவந்து இந்திய பங்குகளில் முதலீடு செய்யும் முறைதான் சுழற்சி முறை. இதை வரிச் சொர்க்க நாடுகள் என்று சொல்லப்படும் மொரீசியஸ், கேமன் ஐலண்ட், சிப்ரஸ் போன்ற நாடுகளில் கம்பெனிகளை நிறுவி அந்த கம்பெனிகளில் எச்.ஃபண்டு (H-Fund) என்கிற திட்டத்தின் கீழ் பணத்தை செலுத்தி இந்தியாவிற்குள் அந்நிய நிறுவன முதலீடு மூலம் இங்கே மூலதனமாக திரும்பி விடும்.
தற்போது இந்த மூலதனத்தின் உரிமை யாளர் யார் என்பதுதான் கேள்வி. வெளிநாட்டில் உள்ள எச்.ஃபண்டின் உரிமையாளர்தான் இதன் உரிமையாளர் ஆவார். இது மந்திரவாதியின் உயிர் கிளியின் கண்களில் உள்ளது என்று சிறு வயதில் படித்ததைப் போலத்தான்.
இந்த வகையில் இந்தியாவிலிருந்து வெளியே சென்று மீண்டும் இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்ட பணத்தை தான் அமெரிக்கா நிதி ஆராய்ச்சி நிறுவனம் சுமார் 770 பில்லியன் டாலர் என்று கூறியுள்ளது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதில் முதலாவதாக வெளிநாட்டில் உள்ள தங்களது சொத்து அல்லது வரு மான விவரங்களை தங்களது வருமான வரிக் கணக்கில் குறிப்பிட வேண்டும் என்று நடைமுறைப் படுத்தப்பட்டுள் ளது. அதை சரியான முறையில் தாக் கல் செய்யாதவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனையாக 4 ஆண்டு சிறை தண்டனை என்று அரசு அமல்படுத்தி யுள்ளது. மேலும் வெளிநாடுகளில் உள்ள சொத்தையோ வருமானத்தையோ காண்பிக்காதவர்கள் 2015 ஆம் ஆண்டு தங்களது விவரங்களை “தாமாக முன் வந்து அறிவிக்கும் திட்டத்தின்” கீழ் காண்பித்து வரிசெலுத்தி கணக்குகளை சரி செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்தது. பின்னர் உள்நாட்டில் உள்ள கறுப்புப்பணத்தை வரி மற்றும் அபராதம் செலுத்தி சரி செய்யவும் அரசு வாய்ப்பளித்தது. இதற்கு பின் பணமதிப்பு நீக்கம் வந்ததும் வருமான வரித்துறையினரின் தொடர்ந்த நடவடிக்கைகளும் அனைவரும் அறிந்ததே.
அதில் மற்ற நாடுகளில் உள்ள வருமானங்களை அறிவிப்பது, இரட்டை ஒப்பந்தங்கள், வெளிநாட்டு கணக்கு வரி இணங்குதல் சட்டத்தின் (FATCA) ஒரு நபரின் வெளிநாட்டு கணக்கு விவரங் களை அந்தந்த நாடுகளிடம் இருந்து பெற்று கொண்டு நடவடிக்கை எடுப்பது போன்றவை அடங்கும். இந்த நடவடிக் கைகளை பார்க்கும்போது இந்திய அரசு மிகக் குறுகிய காலத்தில் நிச்சயமாக வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தையும் ஹவாலா முறையில் ஏற்படும் பண சுழற்சியை யும் கட்டுப்படுத்தும் என்று எதிர்ப் பார்க்கலாம்.
இது தவிர பி-நோட் (Particimpatory) notes குறித்தும் நடவடிக்கை எடுக்கும் என்று விரைவில் எதிர் பார்க்கலாம்.
- karthikeyan.auditor@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago