சபாஷ் சாணக்கியா: தீயவர்கள் தீயவை செய்வதால்...

By சோம.வீரப்பன்

`நல்லவர்களுக்கு உதவாமல் போனாலும் பரவாயில்லை, தீயவர்களுக்கு உதவாதீர்கள்' என்கிறார் சாணக்கியர். அதாவது எந்தச் சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலும்  கெட்டவர்களுக்கு உதவியாக இருந்து விடாதீர்கள் என்கிறார்.

நான் வங்கியில் பணிபுரிந்த பொழுது சில உயர் அதிகாரிகள் இப்படித்தான். தீயவர்களை இனம் கண்டு அவர்களைத் தனிமைப்படுத்த மாட்டார்கள். அவர்களையும் மற்றவர்களைப் போல நடத்துவார்கள். இடமாற்றம், பதவி உயர்வு எல்லாம் கொடுப்பார்கள்.

எனது நண்பர் ஒருவர் ஒரு வங்கியில் கடன் கொடுக்கும் பிரிவில் அதிகாரியாக இருந்தார். அவரது கோட்ட மேலாளர் ஆள் சரியில்லை. உங்கள் ஊகம் சரிதான். அவரை  குமார் என்றே அழைப்போம்.

பதவி என்பது பணம் பண்ணுவதற்கான வாய்ப்பு என நினைப்பவர் அந்த குமார். அதிகாரம் என்பது தன் விருப்பம் போல் ஆடுவதற்கான உரிமம் எனவும்

எண்ணுபவர். காலை 10 மணிக்குத் தொடங்கும் அலுவலகத்திற்கு,  11 மணிக்குத் தான் வருவார். இத்தனைக்கும் கோட்ட அலுவலகத்தின் மாடியில்தான் அவருக்குத் தங்குவதற்கு வீடு கொடுத்திருந்தார்கள். அடிக்கடி வீட்டிலிருந்தும் வெளியிலிருந்தும், ஆப்பிள் மாதுளை எனப்பழ ரசங்களும், பாதாம் பால், லஸ்ஸி என பானங்களும் குமாரின்  அறையினுள்சென்ற வண்ணம் இருக்கும்.

காலையில் அவர் வந்தவுடன் தர்பார் தொடங்கும். அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள் மூன்று நான்கு பேர் கலந்து கொள்வார்கள். அப்படி அவர்களிடம் குமார் என்ன பெரிய ஆலோசனை செய்வார் என்கிறீர்களா? அன்று மதியம் என்ன சமையல் என்பதுதான் ! தப்பித் தவறி யாரும் உள்ளே போய் விட்டோமென்றால், என்னடா இது, எல்லாப் பிரச்சினைகளையும் விட்டு விட்டு இதைப் போய் இப்படி விவாதித்துக் கொண்டிருக்கிறார்களே என அருவருப்பாக இருக்கும்.

ஐயா, குமாரை பற்றி அவரது தலைமையகத்திற்கும் தெரிந்துதான் இருந்தது. ஆனால் அவர்கள் அதிகம் கண்டு கொள்ளவில்லை. உண்மையைச் சொல்லப் போனால், குமாரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய பொதுமேலாளர் நேர்மையானவர்தான். ஆனால்அவர் குமாரின் தவறான போக்கைக் கண்டிக்கத் தவறி விட்டார். அதனால் குமாரின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போயிற்று. ' உலகில் எந்தக் கொடூரமானவனும் ஒரே நாளில் அப்படி ஆகிவிடுவதில்லை ' என ரோமானியக் கவிஞர் ஜுவெனால் சொல்வது சிந்திக்க வேண்டியது!

குமார் எனும் தீய சக்தி தடுக்க ஆளின்றி வேகமாக வளர்ந்தது. அவரைப் போன்ற எண்ணம் கொண்டவர்கள் அவருடன்சேர்ந்து கொண்டனர். உண்மையாக நேர்மையாகஉழைப்பவர்கள் புறந்தள்ளப்பட்டனர். அந்தக்கோட்ட அலுவலகம்  தன்னைப் பேணிகளின்கூடாரம் ஆயிற்று.

தலைமையகம் விழித்துக் கொண்ட பொழுது தீர்வில்லாத தீங்குகள் பல நடந்து விட்டிருந்தன. ஆர அமர யோசித்ததில் எல்லாவற்றிற்கும் மூல காரணம்குமார் எனும் தவறான மனிதரைத் தொடக்கத்திலேயேதடுக்காமல் அவருக்கு அதிகாரம்கொடுத்தது தான் எனத் தெளிவாய்த் தெரிந்தது.

நீங்கள் அன்றாட வாழ்வில் பார்த்து இருப்பீர்கள். பல யதார்த்தவாதிகள் தாங்கள் செய்யும் காரியத்தின் பின்விளைவுகளைச் சிந்திக்காமல் தவறானவர்களுக்கு உதவி செய்து விடுவார்கள். வேறு சிலரோ, அது ஏதோ ஒரு கருணை காட்டுவது போல கெட்டவர்களுக்கும் ஒத்தாசையாக இருப்பார்கள். இதனால் அத்தீயவர்களின் பலம் அதிகரிக்கும். தீமையின் வீரியம் கூடும். அதாவது அங்கு அதீத தீமை விளைவதற்கு அந்த நல்லவர்களே காரணமாக இருப்பார்கள்!பின் விளைவுகளை சிந்திக்காமல்செயல்படுபவர்கள் தீயவர்களை விட சமானவர்களே' என்கிறார் ஆங்கிலேயக் கவிஞர் ஜான் மண்.

`தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும்' என்கிறார் நம் வள்ளுவர். உண்மை தானே? நெருப்பு வைத்த இடத்தை அது இடப்பட்ட நேரத்தில் தாக்கும், அழிக்கும். ஆனால், தீயவர்கள் செய்யும் தீய செயல்கள் தூரத்தில் இருக்கும் மற்றவர்களைக் கூட பாதிக்கும், நெடுங் காலத்திற்கு கெடுதல் விளைவிக்கும் அல்லவா?இந்தச் சீமைக் கருவேல மரங்களைப் பற்றிப் படித்திருப்பீர்கள். மழைஇல்லாமல் போனாலும், இவற்றின்வேர்கள் நிலத்தில் ஆழச் சென்று நிலத்தடி நீரை உறிஞ்சி விடுமாம். தமிழ் நாட்டில் இவை விளை நிலங்களில்  25விழுக்காடுகள் வளர்ந்து வேளாண்மையைப் பாதித்து இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இதைப் போன்றே,  வேடந்தாங்கல் ஏரியில் செழித்து வளர்ந்த வேலிக்காத்தான் மரங்கள்,பருவ காலத்தில் அந்த ஏரிக்கு வந்து நீந்த முனைந்த வெளிநாட்டுப் பறவைகள் பலவற்றைக் குத்திக் கிழித்துக் கொன்றதாகப் படித்து இருப்பீர்கள்.

ஐயா, தீங்கு விளைவிக்கும் செடிகளும் சரி, மனிதர்களும் சரி,கொஞ்சம் இடம் கொடுத்தாலும் ஊன்றிக் கொண்டு விடுவார்கள். வேகமாய் வளர்ந்து நல்லவற்றை அழித்து விடுவார்கள்.எனவே சாணக்கியர் சொல்வது போல தீயவர்களுக்கு எள் அளவும் உதவலாகாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

53 mins ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்