சீறிப்பாயும் பிஎம்டபிள்யு அட்வெஞ்சர்

பிஎம்டபிள்யு மோட்டாராடிலிருந்து புதிதாக எஃப் 850 ஜிஎஸ் அட்வெஞ்சர் என்ற பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை ரூ.15.40 லட்சம் ஆகும். இந்த விலை  முந்தைய எஃப் 850 ஜிஎஸ் ஸ்டேண்டர்ட் மாடலின் விலையை விட ரூ.2.45 லட்சம் அதிகம்.

ஸ்டேண்டர்ட் மாடலைவிட ரூ.2.45 லட்சம் அதிகம் என்றால், அதில் இல்லாத என்னென்ன புதிய அம்சங்கள் அட்வெஞ்சரில் உள்ளது? அட்வெஞ்சர் டூரிங்செல்ல விரும்புபவர்களுக்கு ஏற்றதாக இந்த எப் 850ஜிஎஸ் அட்வெஞ்சர் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் பெட்ரோல் டேங்க்கொள்ளளவு 23 லிட்டர்.  எஃப் 850 ஜிஎஸ் ஸ்டேண்டர்ட் மாடலின் பெட்ரோல் டேங்க் கொள்ளளவை விட 8 லிட்டர் அதிகம்.பெட்ரோல் டேங்க் பெரிதாக இருப்பதாலும், கிராஷ் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாலும் இதன் எடை 244 கிலோவாக அதிகரித்துள்ளது. ஸ்டேண்டர்ட் மாடலின் எடை 229 கிலோ மட்டுமே.

மேலும், பின்சக்கர பிரேக், கியர் லீவர்,விண்ட் ஸ்கிரீன் போன்றவை தேவைக்கு ஏற்றார் போல் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் சீட் உயரம் ஸ்டேண்டர்ட் மாடலை விட 15 மில்லி மீட்டர் அதிகம்.

சீட்டின் உயரம் அதிகரிக்கப்பட்டிருப்பதால் கூடுதல் சவுகரியகத்தை உணர முடியும். இதில் இரண்டு சிலிண்டர் 853 சிசி திறன் கொண்ட இன்ஜின் உள்ளது. இது 8,000 ஆர்பிஎம்மில் 90 ஹெச்பி உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE