அமேசானை வளைக்க அம்பானி திட்டமா ?

By செய்திப்பிரிவு

எண்ணெய், டேட்டா ஆகியவற்றில் கொடிகட்டிப் பறக்கும் இந்தியாவின் முதல் பணக்காரர் முகேஷ் அம்பானி மெல்ல தனது ஆக்டோபஸ் கைகளை பல்வேறு துறைகளுக்கும் வீசுகிறார்.

இந்த முறை அதில் சிக்கப்போவது அமேசானும் பிளிப்கார்ட்டும் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் என்ற அச்சம் ஆன்லைன் வர்த்தகத் துறையில் எழுந்துள்ளது.

அதற்கு காரணம், சிறு சிறு இ-காமர்ஸ் நிறுவனங்களைக் கையகப்படுத்தும் முயற்சிகளைக் கடந்த சில ஆண்டுகளாக சத்தமில்லாமல் ரிலையன்ஸ் இண்டஸ் ட்ரீஸ் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது என்பதுதான்.

எப்படி திடீரென்று தொலைத்தொடர்பு துறையில் ஜியோ எனும் சாம்ராஜயத்தை உருவாக்கி, சலுகைகள், தள்ளுபடிகள் மூலம் ஒட்டுமொத்த துறையையும், சந்தை யையும் தன்பக்கம் இழுத்தாரோ அப்படியொரு முயற்சி யில் தற்போது இறங்கியிருக்கிறார்.

நிறுவனங்களைக் கையகப்படுத்துவது இன்று நேற்றல்ல காலங்காலமாக, திருபாய் அம்பானியின் காலத்திலிருந்தே ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொழில் உத்திகளில் ஒன்றாக இருந்துவந்துள்ளது.

தொலைத்தொடர்பு துறை சந்தையை முற்றிலுமாக அடைய ரிலையன்ஸ் ஜியோவில் 36 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டது. இத்தகைய மெகா முதலீட்டாலும், ஆரம்பத்தில் அளிக்கப்பட்ட சலுகைகளாலும் நாட்டில் பாதிபேர் ஜியோவின் வாடிக்கையாளர்கள் ஆயினர்.

இத னால் மிகப்பிரபலமான நிறுவனங்கள் கூட சந்தையி லிருந்து பின்வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

தொலைத்தொடர்பு துறையில் யாரும் நெருங்க முடியாத இடத்தைப் பிடித்த பிறகு, தற்போது முகேஷ் அம்பானியின் கவனம் இ-காமர்ஸ் துறைக்குத் திரும்பி யுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் இசை, ஆடைகள், கேட்ஜெட்டுகள், உணவு என அனைத்தையும் விற்க தயாராகிவருகிறது.

இதற்காக ரிலையன்ஸ் கையகப் படுத்தியுள்ள நிறுவனங்கள் மிகச் சிறு நிறுவனங்கள் என் றாலும், அதன் மூலமாக ரிலையன்ஸ் திட்டமிடும் தொழில் வாய்ப்புகள் என்பது எப்போதுமே பிரம்மாண்டமாகவே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

பொருட்கள் விற்பனை, வர்த்தகர்களோடு இணக்க மான கூட்டு, வாடிக்கையாளர் சேவை அனைத்தையும் வலுவாகத் திட்டமிட்டு வருகிறது ரிலையன்ஸ்.

ரிலை யன்ஸ் நிறுவனம் உருவாக்கிவரும் பிளாட்பார்மில் பெரிய நிறுவனங்கள் செய்யக்கூடிய அனைத்தையுமே சிறு நிறுவனங்களும் வர்த்தகர்களும் கூட செய்ய முடியும் என்கிறார் அம்பானி. ஏற்கெனவே இணைய சேவையின் குடுமி இவருடைய கையில் இருப்பதால் ஆன் லைன் வர்த்தக நிறுவனம் நடத்துவது இன்னும் எளிது.

சிறு சிறு கம்பெனிகளை வாங்குவதன் மூலம் என்ன செய்துவிட முடியும் என்று பலரும் நினைப்ப துண்டு. ஆனால், சில சிறு நிறுவனங்கள் தங்களின் பிசினஸை தக்கவைத்துக்கொள்ள ஓரளவு சிறந்த பிசி னஸ் மாடலையும், அதற்கான சந்தையையும், வாடிக்கை யாளர் சேவையையும் வைத்திருப்பார்கள்.

அத்தகைய பிசினஸ் மாடலை தேடிப் பிடித்து, அதனை அபரிமித மான முதலீட்டின் மூலம் மாபெரும் நிறுவனமாக மாற்ற முடியும். அதைத்தான் ரிலையன்ஸ் செய்கிறது.

வெளிநாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு இந்தியாவில் புதிய விதிமுறைகள் போடப்பட்டதும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு வசதியாக உள்ளது.

புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நிலையில் அமேசான், வால்மார்ட் போன்றவை அவற்றின் பொருட்களை தங்கள் தளத்திலிருந்து நீக்கியுள்ளன.

2018-ல் 30 பில்லியன் டாலர் மதிப்பில் இருந்த இ-காமர்ஸ் துறை 2028-ல் 200 பில்லியன் டாலராக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய வளர்ச்சி வாய்ப்புள்ள துறையை நாட்டின் முன்னணி தொழிலதிபர், பணக்காரர் கண்டும் காணாமல் விட்டுவிடுவாரா என்ன? அப்படி ரிலையன்ஸ் இ-காமர்ஸ் துறையிலும் அதிரடியாக இறங்கி சந்தையை வளைக்குமானால், அமேசான், பிளிப்கார்ட் போன்றவற்றின் நிலை என்ன ஆகும் என்பதுதான் கேள்விக்குறி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE