சபாஷ் சாணக்கியா: அசத்தணும்... வீழ்த்தணும்... பிடிக்கணும்...!

By சோம.வீரப்பன்

இடது கையினால் பந்து வீசும் கிரிக்கெட் வீரர்களின் ஆட்டத்தை ரசித்திருப்பீர்கள். ஆனால் இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன தெரியுமா?

மும்பையில் ஸ்வேதா சிங் எனும் பெண்மணியின் 4 1/2 வயது மகளுக்கு இடது கைப் பழக்கமாம். கடையில் வாங்கிய பென்சில் ஷார்ப்னர் வலது கைப் பழக்கம் உள்ளவர்களுக்காக தயாரிக்கப்பட்டது என்பதால் பென்சில் சீவ மிகவும் சிரமப்பட்டு அழுது இருக்கிறாள்.

இதைப் பார்த்து வருத்தப்பட்ட அந்த அம்மா, எழுது பொருட்கள் தயாரிக்கும் ஹிந்துஸ்தான் பென்சில்ஸ் நிறுவனத்திற்கு இதைத் தெரிவித்து இருக்கிறார். அவர்களும் ஒரே வாரத்தில் இடது கையினால் சௌகரியமாகப் பென்சில் சீவுவதற்கு ஏற்றபடி பிரத்யே கமாக வடிவமைக்கப்பட்ட 5 ஷார்ப்னர் களை அந்தப் பள்ளிச் சிறுமியின் வீட்டிற்கு ஒரு கடிதத்துடன் அனுப்பி வைத்தார்களாம்.

அந்தக் கடிதத்தில் தாங்கள் வலது கையினால் சீவக் கூடிய ஷார்ப்னர்களை மட்டுமே இதுவரை தயாரித்து வந்தாலும், அந்தச் சிறுமிக்காக இந்தப் புது வகை ஷார்ப்னர்களைச் செய்ததாக வும், இனி இவ்வகை ஷார்ப்னர்களை யும் உற்பத்தி செய்து சந்தைப் படுத்தப் போவதாகவும் தெரிவித்திருந் தார்களாம். இதை அந்தப் பெண் மணி தனது முகநூலில் பதிவிட்டவுடன் அச்செய்தியை பகிர்ந்து கொண்டவர்கள் 4000, விரும்பியவர்களோ 11,000!

ஐயா, வாடிக்கையாளர் சேவை என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. இன்று நாம் இருப்பது போட்டி மிகுந்த உலகில். தொலைக்காட்சியில் நொடிப்பொழுதில் சானல் மாற்றுவது போல, நுகர்வோர் தாங்கள் வாங்கும் பிராண்ட்களை மாற்றக்கூடிய, மாற்றிவிடும் காலம் இது!

வாடிக்கையாளர் சேவை என் பது வாடிக்கையாளர் திருப்தி, வாடிக் கையாளர் மகிழ்ச்சி, வாடிக்கையாளர் குதூகலம் என்பதையெல்லாம் தாண்டி இன்னும் மேலே போய்க் கொண்டிருக் கிறது!

நிறுவனங்கள் வாடிக்கையாளர் களை ஈர்த்தால் போதாது எனும் நிலை! வாடிக்கையாளர்களின் நல்லெண் ணத்தை, நம்பிக்கையை, நேசத்தை, விசுவாசத்தை சம்பாதிக்க வேண்டியதுள்ளது.

சில நிறுவனங்கள் வாடிக்கையாளர் களை மகிழ்விக்க என்ன வேண்டுமானா லும் செய்யத் தயாராக உள்ளன! இதன் மூலம் வாடிக்கையாளர்களை வேறு எங்கும் போய்விடாமல் தங்களிடமே தக்கவைத்துக் கொள்கின்றன.

தம்பி, மற்றவர்களை மகிழ்விப் பது என்பது ஒரு தனிக் கலை. எனது உறவினர் ஒருவர் திருப்பூர் வங்கிக் கிளை ஒன்றில் மேலாளராக இருந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண் டார். பல ஆண்டுகளுக்கு முன்பு வங்கியில் வைப்பு நிதியாகப் பல கோடி ரூபாய் வைத்திருந்த வாடிக் கையாளர் ஒருவர் கிளைக்கு வந்திருக்கிறார். வழக்கம் போல் அவரை வெகுவாக உபசரித்த நண்பர் என்ன சேவை செய்ய வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்.

வாடிக்கையாளரோ தான் புதிதாக வீடு வாங்கப் போவதாகவும் அதற்கு வங்கியில் வைத்திருந்த நிதியின் பெரும் பகுதியை எடுக்க வேண்டும் என்றும் கூறினாராம். நம்ம நண்பரும் வருத் தப் பட்டாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல், ‘நல்ல காரியத்திற்காக பணத்தை எடுக்கின்றீர்கள், மகிழ்ச்சி' என்று சொல்லிவிட்டு, அதற்கான ஆயத் தங்களைச் செய்து கொடுத்தாராம்.

இந்த மாதிரி கூட ஒரு வங்கி மேலாளர் நடந்து கொள்கிறாரே என வியந்து போன, மகிழ்ந்து போன வாடிக்கையாளர், அன்று எடுத்த தொகையைப் போல இரு மடங்கு தொகையை வேறு ஒரு சொத்து விற்று வந்தவுடன் அந்த வங்கியில் போட்டு வைத்ததை இன்று வரை பெருமகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார் என் நண்பர்.

பிராண்ட்24 எனும் மென் பொருள் நிறுவனம் தம் வாடிக்கையாளர்களுக்காக வெவ்வேறு நிறுவனங்கள் என்னவெல்லாம் செய்கின்றன என்பதைப் பட்டியலிட்டு உள்ளார் கள். சில வேடிக்கையானவை, மனதைத் தொடுபவை.

ரிட்ஜ் கார்ல்டன் ஓட்டலில் ஓர் அம்மணி தனது இரு சிறு மகன்களுடன் தங்கி இருக்கிறார்.ஊர் திரும்பிய பின் சின்னவனின் ஒட்டகச் சிவிங்கிப் பொம்மையை அங்கு மறந்துவிட்டு வந்து விட்டது தெரிய வந்திருக்கிறது. அடம் பிடித்து அழுத சிறுவனிடம், அந்தத் தாய், ஒட்டகச்சிவிங்கி மேலும் சில நாட்கள் அந்த விடுதி யிலேயே ஜாலியாகத் தங்கி விட்டதாகச் சொல்லி சமாளித்திருக்கிறார்.

ஓட்டல்காரர்களிடம் இதைச் சொல்லி பொம்மையை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அவர்கள் அந்தப் பொம்மையை விடுதி யின் வரவேற்பு ஹால், நீச்சல் குளம், பூங்கா எனப் பல்வேறு இடங்களில் வைத்து வெவ்வேறு போஸ்களில் புகைப்படங்கள் எடுத்து அப்பொம் மையுடன் அனுப்பி வைத்துள்ளனர்! அவ்வாறு அம்மாவின் கட்டுக்கதையை உண்மையாக்கி, அச்சிறுவனையும் அந்த அன்னையையும் மகிழ்வித்த அந்த ஓட்டலை விட்டு அவர்கள் வேறு எங்கும் செல்வதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்களே?

‘வேடன் பறவையை, அதன் குரலைப் போலவே ஒலி எழுப்பி அருகில் வரச்செய்து பிடிப்பான். நாம் யாரை வசப்படுத்த விரும்புகிறோமோ அவருக்குப் பிடித்ததைச் செய்து அவரை வசப்படுத்த வேண்டும்' எனும் சாணக்கியர் கூற்று, வாடிக்கையாளர்களை வசப்படுத்த நினைப்பவர்களுக்குப் பொருந்துகிறதல்லவா?.

- somaiah.veerappan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்