இணையவழியில் இன்று அதிகமாக விற்பனையாவது ஸ்மார்ட்போன்கள்தான். இதனால், வாடிக்கையாளர்களின் கைகளில் யார் முதலில் போனை கொண்டுபோய் சேர்ப்பது என்ற போட்டி இப்போது தீவிரமாகியுள்ளது.
குயிக் காமர்ஸ் எனப்படும் விரைவு வணிக நிறுவனங்கள் இதற்காக பிரத்யேகமாக மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் போக்கு இன்று வெகுவாக அதிகரித்துள்ளது. வால்மார்ட்டுக்கு சொந்தமான பிளிப்கார்ட்டின் குயிக் காம் பிரிவான பிளிப்கார்ட் மினிட்ஸ் போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அல்காடெல்லுடன் இணைந்து அதன் புதிய வகை ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்களுக்கு 10 நிமிடத்தில் டெலிவரி செய்து வருகிறது.
உலக தரத்திலான சேவையை இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்க பிளிப்கார்ட் மினிட்ஸ் மூலமாக நல்ல வாய்ப்பு கிடைத்
துள்ளதாக கூறுகிறது அல்காடெல். பிளிப்கார்ட்டை பார்த்து கடந்த ஜனவரியில் மற்றொரு குயிக் காம் நிறுனமான சொமாட்டோவின் ஒரு பிரிவான பிளிங்கிட்டும் 10 நிமிடடெலிவரி கோதாவில் குதித்துள்ளது. இதற்காக,ஷாவ்மி மற்றும் நோக்கியா நிறுவனங்களுடன் அது வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது.
பிளிங்கிட் மட்டுமல்ல அதே மாதத்தில் குயிக் காம் யுனிகார்ன் நிறுவனமானஸெப்டோவும் 10 நிமிட ஸ்மார்ட்போன் டெலிவரி அறிவிப்பை வெளியிட்டது. விவோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடல்களை இந்தியா முழுவதும் கொண்டு போய் சேர்ப்பதற்காக ஸெப்டோ ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. பிளிப்கார்ட், பிளிங்கிட், ஸெப்டோ வரிசையில் அடுத்தாக ஸ்விக்கியின் குயிக்காம் பிரிவானஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டும் 10 நிமிட டெலிவரியில் களமிறங்கியுள்ளது.
லேட்டஸ்ட் ஐபோன் 16இ, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களான சாம்சங் எம்35, ஒன் ப்ளஸ் நார்டு சிஇ, ரெட்மி 14 சி போன்ற பாப்புலர் மாடல்கள் வாடிக்கையாளர்கள் புக் செய்த 10 நிமிடங்களில் அவர்களது வீட்டு வாசலை தட்டும் என்கிறது ஸ்விக்கி. 10 நிமிட டெலிவரியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதையடுத்து குயிக் காம் நிறுவனங்கள் தங்களது கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. அதற்கு உதாரணம், பிளிப்கார்ட் நாடு முழுவதும் 14 நகரங்களில் தங்களது டார்க் ஸ்டோர்களின் எண்ணிக்கையை 200-ஆக உயர்த்தியுள்ளது. குயிக் காம் நிறுவனங்களின் இடையே ஏற்பட்டுள்ள இந்த டெலிவரி போட்டி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி, வேலை தேடுபவரிடமும் மகிழ்ச்சியை பொங்கச் செய்துள்ளது.