சவுதியின் புதிய சட்டம் புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு விடியலை தருமா?

By அ.ஜ.ஹாஜா முகைதீன்

புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் தற்போது சவுதி அரேபிய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய சட்டம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சவுதியில் பிறவகை தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு வீட்டுப் பணியாளர்களுக்கு கிடைப்பதில்லை. முறைசாரா தொழிலாளர்களாக இருப்பதால் பாதுகாப்பான வேலை சூழ்நிலைகள் அவர்களுக்கு இல்லை; அதிக வேலை, குறைவான ஆண்டு விடுமுறை நாட்கள், குறைவான சம்பளம், பாதுகாப்பின்மை என்று பல நெருக்கடிகளை புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்கள் எதிர்கொள்கின்றனர்.

இந்நிலையில் இந்தச் சூழலை மாற்றி அமைக்கும் வகையில், வீட்டுப் பணியாளர்கள் தொடர்பாக சவுதி புதிய சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. வளைகுடா நாடுகளில் வீட்டுப் பணியாளர்கள் டிரைவர், சமையல்காரர், தோட்ட வேலை செய்பவர், செவிலியர், தையல்காரர், செக்யூரிட்டிகள், குழந்தைகளை பராமரித்தல், வீட்டை சுத்தம் செய்தல், முதியவர்களுக்கு சேவை செய்தல் என பல்வேறு வகையான வீட்டுப் பணிகள் உள்ளன. வளைகுடா நாடுகளில் பணிபுரியும் மொத்த தொழிலாளர்களில் வீட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை 12.3% ஆகும். அங்கு 66 லட்சம் வீட்டுப் பணியாளர்கள் உள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE