இந்திய பொருளாதார வளர்ச்சியை காலநிலை மாற்றம் எப்படி பாதிக்கும்..

By சோம வள்ளியப்பன்

எல்லோரும் எல்லாமும் பெற  பொருளாதார வளர்ச்சி அவசியம். அதற்கு, அவ்வப்போது இரட்டை கோபுரத் தாக்குதல், அமெரிக்க சப்-பிரைம் பிரச்சினை, கோவிட் 19, அதனால் ஊரடங்கு போன்ற சர்வதேச  அளவிலான தடைகள் வருகின்றன. இப்படி எப்போதாவது எதிர்பாராமல் வரும், முன்கூட்டியே கணிக்க இயலாத, ஓரிரு ஆண்டுகளுக்கு தாக்கம் கொடுக்கிற  ‘பிளாக் ஸ்வான்’ நிகழ்வுகள் தவிர, பல ஆண்டுகளுக்கு வளர்ச்சியைக் கெடுக்கும், பொருளாதார பெருமந்தம் போன்ற வேறு சிலவும் சில பல தசமங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் வந்து பொருளாதார வளர்ச்சியை மட்டுப்படுத்துகின்றன.

அவைகூட பரவாயில்லை என்று சொல்லும் அளளவுக்கு மொத்த பூமிப்பந்தையும் நிரந்தரமாக பாதிக்க இருக்கும் ஒரு பெருஞ் சிக்கல் உருவாகி வளர்ந்து வருகிறது. அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பொருளாதார வளர்ச்சி, ஒட்டுமொத்த மனித இனத்தை மட்டுமல்ல, பல்லுயிர்களையும் பாதிக்கும் அளவு கோரமானது. அதன் பெயர், காலநிலை மாற்றம் (Climate Change). கடந்த ஓரிரு நூற்றாண்டுகளில், குறிப்பாக தொழில் புரட்சிக்குப் பிறகு காலநிலை மாற்றம் பெரும் வேகத்தில்  நடந்து வருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE