க
டந்த மூன்று ஆண்டுகளாக மூத்த குடிமக்கள் மாதாந்திர அளவில் சீரான வருமானம் மற்றும் வரிச்சலுகை இருக்கும் திட்டங்களைத் தேடிக்கொண்டிருந்தனர். இதற்கான வாய்ப்பு குறைவாக இருந்ததால் பலர் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்தனர். இந்த முதலீட்டு திட்டங்களில் ரிஸ்க் இருக்கிறது என்பதை அறிந்தாலும் அவர்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை. ஆனால் இப்போது அவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. மூன்று ஆண்டுகளாக குறைந்திருந்த வட்டி விகிதங்கள் தற்போது உயரத் தொடங்கி இருக்கின்றன. பணவீக்கம் உயரத் தொடங்கி இருப்பதை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வட்டி விகிதத்தை குறைப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தி இருக்கிறது. மேலும் உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. கடன் சார்ந்த திட்டங்களில் இது எதிரொலிக்க தொடங்கிவிட்டது.
பங்குச்சந்தையை அளவிடுவதற்கு சென்செக்ஸ் குறியீடு இருப்பது போல, 10 ஆண்டு அரசு பத்திரங்களின் வருமானம் மூலம் கடன் சந்தையை மதிப்பிடலாம். கடந்த ஒரு ஆண்டில் கடன் சந்தை வருமானம் 1.30 சதவீதம் அளவுக்கு உயர்ந்து 7.5 சதவீதமாக இருக்கிறது. அரசு கடன் பத்திரங்களின் மதிப்பு உயரும் பட்சத்தில் இதர கடன் சார்ந்த திட்டங்களின் வருமானம் உயரும். அதனால் வரும் மாதங்களில் அனைத்து கடன் சார்ந்த திட்டங்களில் வருமானமும் உயரும். குறைந்த பட்சம் 10 ஆண்டு கடன் பத்திரங்களுக்கு இணையான வருமானம் இருக்கும்.
வருமானத்தை எப்படி உயர்த்தலாம்?
கடன் சார்ந்த திட்டங்களுக்கு வட்டி அதிகமாக கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் இப்போதைக்கு கடன் சார்ந்த திட்டங்களை அணுக வேண்டாம். பெரும்பாலான வங்கிகள் ஓர் ஆண்டு அல்லது அதற்கும் சற்று அதிகமான காலத்துக்கு அதிக வட்டி வழங்குகிறார்கள். ஆனால் நீண்டகால அடிப்படையில் குறைந்த வட்டியே வழங்குகிறார்கள். அதனால் ஆறு மாதம் முதல் ஓர் ஆண்டு வரையிலான காலத்துக்கு தற்போது பிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்வது நல்லது.
பட்ஜெட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு டெபாசிட் மூலமாக கிடைக்கும் வருமானம் 50,000 ரூபாய்க்குள் இருந்தால் டிடிஎஸ் (பிரிவு 80 டிடிபி) பிடிக்க தேவையில்லை என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைக்கு ஓர் ஆண்டு அஞ்சலக டெபாசிட்டுக்கு 6.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. எஸ்பிஐ வங்கி மூத்த குடிமக்களுக்கு 6.75 சதவீத வட்டி வழங்குகிறது. ஆனால் கோடக் மஹிந்திரா வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஐடிஎப்சி வங்கி உள்ளிட்ட வங்கிகள் கூடுதல் வட்டியை வழங்குகின்றன. உதாரணத்துக்கு ஐடிஎப்சி வங்கி 366 நாள் டெபாசிட்டுக்கு 7.5% வட்டி வழங்குகின்றது. கோடக் மஹிந்திரா வங்கி 390 நாள் டெபாசிட்டுக்கு 7.35 சதவீத வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்கள் 7.25% வட்டியில் அதிகபட்சம் 7 லட்சம் வரையில் டெபாசிட் செய்யலாம். இதன் மூலம் ஆண்டுக்கு 50,000 ரூபாய் அளவுக்கு வட்டி கிடைக்கும். கிடைக்கும் வட்டிக்கு வரிப்பிடித்தம் (டிடிஎஸ்) செய்யப்படமாட்டாது.
மூத்த குடிமக்கள் திட்டம்
பெரும்பாலான நிரந்தர திட்டங்களில் வட்டி குறைவாக இருக்கும் பட்சத்தில் மூத்த குடிமக்களுக்கான இந்திய அஞ்சலக சேமிப்பு திட்டம் கூடுதல் வருமானத்தை வழங்குகிறது. சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைக்கப்பட்ட போதிலும் மூத்த குடிமக்களுக்கான வட்டி 8.3 சதவீத அளவிலேயே இருக்கிறது. ஆனால் முன்கூட்டியே இந்த திட்டங்களில் இருந்து வெளியேறும் பட்சத்தில் 1.5% அளவுக்கு அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால் நீண்ட காலம் முதலீடு செய்யும் பட்சத்தில் மட்டும் இந்த திட்டத்தை பரிசீலனை செய்யலாம். இந்த திட்டத்தில் ஒரு முதலீட்டாளர் ரூ.15 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம்.
வேறு வாய்ப்புகள் என்ன?
மேலே இருக்கும் இரு திட்டங்களிலும் முதலீடு செய்த பிறகும், மேலும் முதலீடு செய்வதற்கு தொகை இருக்கும் பட்சத்திலும் சந்தையில் வாய்ப்புகள் இருக்கின்றன. அவர்கள் ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் புதிய கடன் பத்திரங்கள் (7.75%) அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் / நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது குறித்து பரிசீலனை செய்யலாம்.
முன்னதாக 8% கடன் பத்திரங்கள் இருந்தன. ஆனால் தற்போது அந்த வட்டி விகிதம் 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த பத்திரங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானது. ஆனால் இந்த வட்டிக்கு வருமான வரி செலுத்த வேண்டும். மூத்த குடிமக்கள் மட்டுமல்லாமல் அனைவரும் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ரூ1,000 முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு கிடையாது. எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்யலாம். ஆனால் முதலீட்டு காலம் 7 ஆண்டுகள். ரிஸ்க் எடுக்க நினைக்கும் முதலீட்டாளர்கள் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை பரிசீலனை செய்யலாம். ஏஏஏ மதிப்பீடு இருக்கும் கடன் பத்திரங்களில் மற்றும் ஒர் ஆண்டு மட்டுமே முதலீடு செய்யலாம்.
-aarati.k@thehindu.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago