நெ
ப்போலியன் ஹில் எழுதி 1937ல் வெளிவந்த `Think and Grow Rich ' எனும் புத்தகம் இன்றையப் பல சுய முன்னேற்றப் புத்தகங்களின் முன்னோடி! 10 கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியிருக்கிறதாம்!
அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பலரும் தங்கத்தைத் தேடி அலைந்தனர். அதை `Gold Rush ' என்று குறிப்பிடுவார்கள். இந்நூலில் அவ்வாறு தங்கச் சுரங்கத்தைத் தேடி அலைந்த டார்பி என்பவரின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. மேரிலாண்டிலிருந்த டார்பி தனது மாமாவுடன் கொரலாண்டோவில் இருந்த சுரங்கங்களுக்குச் சென்றார். சொந்தபந்தங்களிடமிருத்து கடன் பெற்ற பணத்தில் இயந்திரங்களை வாங்கி இருவரும் கடுமையாக உழைத்தனர். நிறையத் தங்கமும் கிடைத்தது!
ஆனால் இது வெகுநாள் தொடரவில்லை.விரைவில் சுரங்கம் வற்றி விட்டது. தோண்டினர், தோண்டினர்... ஏமாற்றம் தான் மிச்சம்! போதும் பாடு என நினைத்து, இயந்திரங்களை கிடைத்த விலைக்கு விற்று விட்டு ஊரைப் பார்க்கக் கிளம்பிச் சென்று விட்டனர்!
அந்த உபகரணங்களை வாங்கியவரோ, அவர்கள் விட்டுச் சென்ற அதே இடத்தில் களம் இறங்கினார். ஒரு சுரங்கப் பொறியாளரை வழிகாட்டுதலுக்கு வைத்துக் கொண்டார். என்ன ஆச்சர்யம்! மூன்று அடி தோண்டியவுடன் அங்கே தங்கத் தாது கொட்டிக் கிடந்தது! ஏராளம், ஏராளம், அள்ள அள்ளக் குறையவில்லை! செய்தியறிந்த டார்பிக்கு ஏக வருத்தம். தான் தொடர்ந்து முயலாமல் அயர்ந்ததே தோல்விக்குக் காரணம் என உணர்ந்தார்.
ஆனால் அதற்காக வீட்டில் படுத்து உறங்கவில்லை! காப்பீடு விற்கும் பணியில் சேர்ந்து அதில் அதிதீவிரமாக ஈடுபட்டார். உங்களுக்குத் தெரியாததா? காப்பீடு விற்பது எளிதா என்ன? நடையாய் நடக்கணுமே! நிறையப் பொறுமை வேணுமே! முன்பு மூன்றே அடியில் வெற்றியைத் தவற விட்டுவிட்டோமே என நினைத்து நினைத்து, காப்பீடு வாங்கும் வரை வாடிக்கையாளரை விடமாட்டார்! எனவே பின்னர் நம்ம ஆள் அதில் மிகப் பெரிய வெற்றியும் கண்டார்! 'சோர்வடைபவர்கள் வெற்றி பெறுவதில்லை, வெற்றி பெறுபவர்கள் சோர்வடைவதில்லை' என்பது தானுங்க உண்மை, நியதி!
ஐயா, கபடி விளையாட்டைப் பார்த்து இருப்பீர்கள். ஆளைப் பிடிச்சுட்டாங்கன்னா, அமுக்கப் பார்ப்பார்கள்! தப்பிக்கணும்னா, கோட்டைத் தொடணும்னா, நல்லா தம் பிடிச்சு முழு வேகத்தில, மொத்த சக்தியையும் ஒன்றுபடுத்தி பிச்சுக்கிடணும்ல?
அந்தச் சமயத்தில போய் தோத்துப்போயிடுவோம் என்கிற நினைப்போ, சோர்வோ வந்தால் போச்சுல்ல? அதுவே ஆளைக் கவுத்துடும்ல?
'ஒருவர் எதை இழந்தாலும் பரவாயில்லை, சமாளிச்சுக்கலாம். ஆனால் தன்னம்பிக்கையை இழந்து விட்டால் யாராலும் காப்பாற்ற முடியாது' என்பார்கள் உண்மைதானே?
அது சரி, இந்தச் சிங்கம் வேட்டையாடுவதைத் தொலைக்காட்சியில் பார்த்து இருக்கிறீர்களா? அல்லது படித்திருக்கிறீர்களா? ஐயா, காட்டுக்கு ராஜா என்று சொல்லப்பட்டாலும், கம்பீரத்திற்குக் குறைவில்லை என்றாலும், சிங்கம் ஓடக்கூடிய அதிகபட்ச வேகம் மணிக்கு சுமார் 50 கிலோ மீட்டர்தானாம்!
இது சிங்கம் வேட்டையாடத் துரத்தும் மிருகங்களின் வேகத்தை விட மிகக் குறைவு! மேலும் சிங்கத்திற்கு 300 அடிக்கு மேல் தொடர்ந்து ஓடுவது கடினமாம்! பின்னே அது எப்படி இரை தேடுகிறது, வேட்டையாடுகிறது, உயிர் வாழ்கிறது என்கிறீர்களா?
சிங்கம் மிகக் கனமானது, பலமானது அல்லவா? ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் எடை என்று திரைப்பட வசனம் கேட்டிருக்கிறோமே?அத்துடன் அது சாமர்த்தியமானது என்பதும் கவனிக்க வேண்டியது! தான் வேட்டையாடும் விலங்கினங்கள் தண்ணீர் குடிக்க வரும் நீர்நிலைகளுக்கு அருகே சென்று சிங்கம் காத்திருக்குமாம். பின்னர் சமயம் பார்த்து திடீரெனத் தாக்குமாம்! சிங்கம் சிங்கிலா வருவது என்பதெல்லாம் மற்ற இடங்களில் தான்! இரையைத் தாக்கும் பொழுது, பெரும்பாலும் மற்ற இரண்டு மூன்று சிங்கங்களுடன் சேர்ந்து ரவுண்டு கட்டித்தான் அடிக்கும்! அத்துடன் முழு மூச்சுடன் ஒரே பாய்ச்சலில் இரையின் கழுத்தைப் பிடிக்கும்! நம்ம வள்ளுவர் சொல்வாரே, ‘கொக்கின் குத்தொக்க சீர்த்த இடத்து' என்று, அது மாதிரி!
அண்ணே, நான் இத்துடன் நிறுத்திக்கிறேன். இனி சாணக்கியர் சொல்வதைப் பார்ப்போம். 'சிங்கங்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய ஒரு சிறந்த குணம், எந்தக் காரியத்தைச் செய்தாலும் முழுமனதுடனும், முழு முயற்சியுடனும் செய்ய வேண்டும் என்பதே' என்கிறார் அவர்!
இல்லைங்களா பின்னே? தொழிலில், ஏன், வாழ்க்கையில் வெற்றி பெறணும் என்றால் கூட எடுத்த காரியத்தில், ஒருமித்த எண்ணத்துடன் செயல்பட வேண்டுமில்லையா? பெருமுயற்சி செய்யும் பொழுது, சில சமயங்களில் தற்காலிகமாகத் தோல்விகள் ஏற்படலாம்.
ஆனால், அவைகளைக் கண்டு பயந்து விட்டால், வெற்றி இலக்கை அடைய முடியாதே! அரை மனதுடன் முயன்றால் பாதி வெற்றி கிடைக்குமா என்ன? அது முழுத் தோல்வியில் தானே முடியும்? தம்பி, சிங்கம் போல முழு மூச்சுடன் முயற்சி செய்யப்பா! அப்ப நிச்சயம் சிங்க நடை, வெற்றி நடை போடலாம்!
- somaiah.veerappan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago