இயற்கை 24 X 7- 36: உயிர்வளி திருடர்

By செய்திப்பிரிவு

அனைத்தும் பணம். குடிநீரும் பணம். மூச்சுக் காற்றும் பணம். சுருக்கமாக, இயற்கையே பணம்தான். ஓர் இயற்கைப் பொருளின் மதிப்பை அதன் உயிரியல் கூறுகளைக் கொண்டு விளக்கினால் நம் காதுகள் கேட்பதில்லை. அதையே பண மதிப்பில் கூறினால், உடனே அதன்மீது மதிப்பு வைக்கப் பழகிவிடுகிறோம்.

எடுத்துக்காட்டாக, 15 ஆண்டுகள் வயதுடைய ஒரு மரம் ஏழரை கிலோ முதல் பதினைந்து கிலோ வரை கரிவளியைத் (கார்பன் டைஆக்சைடு) தனக்குள் உள்வாங்கிக்கொள்கிறது என்றால், அந்தக் கணக்கு நமக்கு விளங்காது. அம்மரத்தை வெட்டினால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்றே மனம் கணக்கிடும். எனவேதான், உயிருள்ள மரத்தின் சேவையையும் பணத்தின் மதிப்பில் கணக்கிட்டார் கல்கத்தா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் டி.எம்.தாஸ் என்பவர். அதன்படி 50 வயதுடைய ஒரு மரம் 18 லட்சம் ரூபாய் வருமானம் தரும் சேவையை வழங்குகிறது என்கிறார் அவர். இதுவும் ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய பணமதிப்பின் அடிப்படையில் போடப்பட்ட கணக்கு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE