சர்வதேச உயிரினப்பன்மை தினத்தை ஒட்டிச் சென்னையில் தேசிய உயிரினப்பன்மை அமைப்பின் சார்பில் கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், ஒன்றிய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, ஐக்கிய நாடுகள் சபைப் பிரதிநிதி, ஒன்றிய சுற்றுச்சுழல் துறையின் செயலாளர், பல்வேறு மாநில, யூனியன் பிரதேச அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், திரிபுரா, தெலுங்கானா, நாகலாந்து உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுச்சூழல் துறை பங்கேற்ற கண்காட்சியும் இதை ஒட்டி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
இந்திய அறிவியல் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் பிரவீன் குமார் ஒருங்கிணைப்பில் தமிழ்ப் பாவைக் கூத்தும் இதனுடன் நிகழ்த்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த லஷ்மண் ராவ் குழுவினர் இந்தக் கூத்தை நிகழ்த்தினர்.
நான்கு தலைப்புகளின் கீழ் இந்தக் கூத்து நடத்தப்பட்டது. வரையாடுகள், பாறு கழுகுகள், புலி சிலந்தி, அழிந்துவரும் விலங்கினங்கள் ஆகிய தலைப்புகளின் கீழ் இந்தப் பாவைக் கூத்து நிகழ்த்தப்பட்டது. உதாரணமாக புலி சிலந்தி தமிழ்நாட்டில் ராமநாதபுரம் பகுதியில் காணப்படும் ஓர் அபூர்வமான சிலந்தி இனம். இந்த வகை சிலந்தி ஒரு சிறுவனின் வீட்டுக்குள் நுழைந்துவிடுகிறது. பயந்து அதை அவன் கொல்ல முயல்கிறான். அப்போது அந்த வழியே வரும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர், அந்தச் சிலந்தியின் சிறப்புகளை எடுத்துக்கூறி, அது அழிந்துவரக்கூடிய இனம் என்பதையும் சொல்கிறார். மேலும் இம்மாதிரி உயிரினம் இறப்பதால் அறுபடும் உயிரினப் பன்மை குறித்து அவனுக்குப் புரியவைக்கிறார்.
இன்னொரு கதையில் ஒரு குடும்பம் உயிருக்கு உயிராக வளர்த்த மாடு இறந்துவிட, அதன் சடலத்தை பாறு கழுகு தின்ன வருகிறது. இது பிடிக்காமல் அவர்கள் அதை அடிக்க முயல்கிறார்கள். அவர்களுக்கும் இந்தப் பறவையைக் குறித்துப் புரியவைக்கிறார்கள் ஆர்வலர்கள். இதன் மூலம் உயிரினப் பன்மை சங்கிலியில் நாமும் இருக்கிறோம் என்பதை மக்களுக்குப் புரியவைக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago