இயற்கை முறையில் புழு கட்டுப்பாடு- தேனி விவசாயி செய்யும் புதுமைக் கரும்பு சாகுபடி

By ஆர்.செளந்தர்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கரும்பு சாகுபடி நடைபெற்றுவருகிறது. வெட்டப்படும் கரும்புகள் அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. உற்பத்தி செய்யப்பட்ட கரும்புக்கு உரிய விலை கிடைக்கவில்லை, கரும்பு பயிருக்கு நோய் தாக்குதல் அதிகரிப்பு எனக் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் பலர் வேதனையடைந்து வருகின்றனர். ஆனால், தேனி அருகே அன்னஞ்சியில் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 15 ஆண்டுகளாகக் கரும்பு விவசாயத்தை மட்டுமே செய்து, அதிக லாபம் ஈட்டி சாதனை செய்துள்ளார் முதுகலை பட்டதாரியான விவசாயி ஆர்.மோகன்குமார்.

புழு கட்டுப்பாடு

தன் சாகுபடி முறை பற்றி அவர் பகிர்ந்துகொண்டது: “கரும்பு சாகுபடிக்கு நுனிக் குருத்துப் புழு, தண்டுப் புழு எதிரிகளாக உள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்தினாலே 90 சதவீதத்துக்கு மேல் மகசூல் பெற முடியும். இதைக் கட்டுப்படுத்தப் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்தால் மண் வளம் பாதிக்கப்படும். இதைத் தவிர்த்துவிட்டு, பாதிப்புகளை உண்டாக்கும் புழுக்களை இயற்கை முறையில் எளிதாக அழிக்க முடியும்.

கார்சீரா எனும் பூச்சிகள் மூலம் டிரைகோகிரம்மாஜப்பானி என்ற முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இதிலிருந்து வெளிவரும் பூச்சியிலிருந்து ஒட்டுண்ணி என்று அழைக்கப்படும் நுண்ணிய முட்டை கிடைக்கிறது. இந்த முட்டை ஒரு சி.சி. என்று அழைக்கப்படும். ஏழுக்கு 10 என்ற சதுர சென்டிமீட்டர் கொண்ட ஓர் அட்டையில், 15 ஆயிரம் நுண்ணிய முட்டைகளை ஒட்டி கரும்பு நடவு செய்த நான்கு மாதங்களிலிருந்து 15 நாட்கள் இடைவெளிவிட்டு மூன்று முறை ஒட்ட வேண்டும். மூன்று சிசி அட்டைகளைக் கரும்பு சோகைக்கு இடையில் கட்டிவிட்டால், அந்த முட்டைகள் ஒட்டுண்ணிப் பூச்சிகளை உருவாக்கிப் புழுக்களைத் தின்று, எஞ்சிய புழுக்களின் உடலில் தன்னுடைய முட்டைகளை இட்டுவிட்டுச் சென்று விடும். இதனால் புழுக்கள் முற்றிலும் அழிந்துவிடும்.

65 டன் விளைச்சல்

இந்த ஒட்டுண்ணிகளை உற்பத்தி செய்வதற்காகக் கூடாரம் அமைத்துக் கூண்டு மூலம் கார்சீரா பூச்சிகளை வளர்த்து வருவதுடன், ஒட்டுண்ணி முட்டைகளை விற்பனையும் செய்துவருகிறேன். ஓர் அட்டையில் ஒட்டப்படும் ஒரு சிசி முட்டையின் விலை வெறும் ரூ. 35 மட்டுமே. ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடிக்கு 10 சிசி மட்டும் பயன்படுத்தினால் போதும். புழுக்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிடும். இந்தப் புழுக்களின் பாதிப்பால் சராசரியாக ஒரு ஏக்கரில் 30 டன் மட்டுமே கரும்பு விளைச்சல் இருக்கும். ஆனால், எனக்கு 65 டன்வரை விளைச்சல் கிடைத்துவருகிறது. வேர்ப்புழு, தண்டுப்புழுக்களை அழித்ததன் காரணமாகக் கரும்பு விவசாயத்தில் வெற்றி பெற முடிந்தது” என்கிறார் மோகன்குமார்.

படங்கள்: ஆர். சௌந்தர்

விவசாயி மோகன்குமார், தொடர்புக்கு: 99448 65516

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்