அனந்து
இயற்கை வேளாண்மையைப் பரப்ப அரசு என்ன செய்கிறது?
நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்யும் இயற்கை உழவர்களை ஊக்குவிக்க, இடுபொருள் வாங்க, அவர்களது மகசூலைச் சேமித்து வைக்கக் களம் எனப் பல அம்சங்களுக்கும் அரசு உதவ வேண்டும். மக்களுக்கு நஞ்சில்லாத உணவைத் தரும் இயற்கை வேளாண்மையைப் பெரிய அளவில் ஊக்குவிக்கவும் ஆதரிக்கவும் வேண்டும்.
ஆனால், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க இன்றைக்கு மத்திய அரசிடம் இருப்பதோ ஒரே ஒரு திட்டம் மட்டுமே!
பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (பரம்பராகட் கிரிஷி விகாஸ் யோஜனா) என்பது இயற்கை வேளாண்மையைப் பரப்ப உருவாக்கப்பட்ட திட்டம்.
வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைக்கவும், மண் வளத்தை மீட்டெடுக்கவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் இயற்கை வேளாண்மையைப் பரப்பவும், மரபு வேளாண்மையை மீட்டெடுக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடோ மிகவும் குறைவு (ஒட்டுமொத்த நாட்டுக்கும் ரூ. 360 கோடி மட்டுமே) என்றாலும், இயற்கை வேளாண்மைக்கு என இருக்கும் ஒரே திட்டம் இது மட்டும்தான்.
எந்த எந்த மாநிலங்களில் இயற்கை வேளாண்மை அரசுக் கொள்கையாக உள்ளது?
இயற்கை வேளாண்மைக் கொள்கை என்பது இயற்கை வேளாண்மையைப் பரப்புவதற்கான உற்பத்தி வழிமுறைகள், சந்தைப்படுத்துதல், உணவின் பயன்பாட்டுக் காலத்தைப்
(shelf life) பெருக்க முன்னெடுக்கப்படும் செயல்பாடுகள் ஆகியவற்றுக்காகவும் அரசின் பல்வேறு அங்கங்கள் மூலம் இந்தச் செயல்பாடுகள் அதிகரிக்கவும் வடிவமைக்கப்படுவது.
கேரளம், கர்நாடகம், சிக்கிம், குஜராத், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து எனப் பல மாநிலங்களிலும் சமீபத்திய ஆண்டுகளில் இயற்கை வேளாண் கொள்கை நடைமுறைக்கு வந்துள்ளது. சிக்கிம், மிசோரத்தில் பூச்சிக்கொல்லிகளை விற்கவோ மாநிலத்துக்குள் கொண்டுவரவோ தடை விதிக்கப்பட்டு, இந்த நடவடிக்கை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் இயற்கை வேளாண் கொள்கை வகுக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தயாரித்த வரைவு பல ஆண்டுகளுக்கு முன்பே சமர்ப்பிக்கப்பட்டுவிட்டாலும், இன்றுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அப்படி ஒரு கொள்கை கொண்டுவரப்பட்டால்தான் இயற்கை வேளாண்மை பரவலாகப் பரவி, எல்லோருக்கும் நஞ்சில்லாத நல்ல உணவு கிடைக்கும். சுற்றுசூழல், மண், நீர், காற்று, வேளாண் வாழ்வாதாரம், விதைப் பன்மையம் போன்றவையும் சிறப்பாகப் பாதுகாக்கப்படும். இயற்கை வேளாண் கொள்கையைத் தமிழக அரசு விரைவாக நடைமுறைப்படுத்தும் என்று நம்புவோம்.
கட்டுரையாளர்,
இயற்கை வேளாண் நிபுணர்
தொடர்புக்கு: organicananthoo@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago