பாரம்பரிய அரசியில் நவீன உணவு

By செய்திப்பிரிவு

ச.ச.சிவசங்கர் 

நம் காலத்தில் பாரம்பரிய நெற்பயிரில் பல ரகங்களை இழந்துவிட்டோம். கால மாற்றமும் பழம்பெரும் நெல்களைச் சேமிக்கத் தவறியதுமே இந்த நிலைக்குக் காரணம். தமிழ்நாட்டில் சுமார் ஆயிரம் நெல் வகைக்கு மேல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. தற்போது இருநூற்றுக்கும் குறைவான ரகங்களே எஞ்சி இருக்கின்றன. பொன்னி, பாஸ்மதியில் சமைத்துப் பழகிய இன்றைய தலைமுறையினருக்குப் பாரம்பரிய அரிசியைக் கையாள்வது சற்று சிரமம்.

புதுமையைப் புகுத்துவோம்

தொடக்கம் முதலே மெருகு கூட்டப்பட்ட அரிசியைச் சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு இயற்கை உணவைச் சாப்பிடச் சற்றுத் தயக்கம் இருப்பது இயல்பு. குறிப்பாக, நகர்ப்புறங்களில் பீட்சா, பர்கர் என மேற்கத்திய உணவுமுறைப் பழக்கம் உள்ளவர்களுக்குப் பாரம்பரிய உணவு வகையைப் பழகிக்கொள்வதற்குச் சற்றுத் தாமதம் ஏற்படும்.
கடந்த 13,14-ம் தேதி சென்னையில் செம்பருத்தி இயற்கை அமைப்பும் மண்வாசனை அமைப்பும் இணைந்து இன்றைய தலைமுறையினரிடம் இயற்கை உணவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமையல் நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்திருந்தன.

“பதினொரு ஆண்டுகளாகப் பாரம்பரிய அரிசி குறித்துப் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறோம், கடந்த ஓர் ஆண்டாக இது போன்ற பாரம்பரிய அரிசியை வைத்து சமையல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். மேலும் பழைய முறையிலேயே சமைப்பதால் அதைப் பின்பற்றுவதில் தொய்வு ஏற்படும் அதனால் பாரம்பரிய உணவுப் பொருட்களில் காலத்துக்கேற்ப புதிய உணவுகளை முயன்று வருகிறேன்” என இந்நிகழ்ச்சியின் நடத்துநரான ‘மண்வாசனை’ மேனகா குறிப்பிட்டார்.

சோறு வடித்த கஞ்சியில்தான் ஊட்டச்சத்து அதிகம். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் அந்தக் கஞ்சியைச் சாப்பிடுவது கிடையாது. இதை மேனகா சூப்பாக மாற்றி வெற்றி கண்டிருக்கிறார். உதாரணமாக, மாப்பிள்ளைச் சம்பா அரிசியில் வடித்த கஞ்சியில் அவர் ‘சூப்’ தயாரித்துள்ளார். மேலும் சிறுதானியம், காய்கறிகள் ஆகியவற்றைக் கொண்டு லாலி-பாப், கட்லெட் போன்ற இன்றைக்குப் பிரபலமாக இருக்கிற உணவுவகைகளைச் செய்து புதுமைகளைப் புகுத்துயுள்ளார்.

பாரம்பரிய அரிசியில் வடகம் தயாரித்துள்ளார். இயற்கை உணவு குறித்த புரிதல் நகர்ப்புறங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இளைஞர்கள் பலரும் இதில் ஆர்வமாக இருக்கிறார்கள். தற்போது ஊட்டச்சத்து பற்றிய கவனம் அதிகரித்துள்ளது. அதனால் பலரும் பாரம்பரிய அரிசியைத் தேடி வருகின்றனர், இது இன்னும் பரவலாக வேண்டும். பாரம்பரிய அரிசி, சிறுதானியங்களை வைத்து மண்வாசனை என்ற பெயரில் இயற்கை சார்ந்த உணவுப் பொருட்கள் தயாரித்து மேனகா விற்பனை செய்துவருகிறார். விரைவில் இயற்கை உணவுக்காக உணவகம் ஒன்றையும் அவர் ஆரம்பிக்கவுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்