நம் நெல் அறிவோம்: ஜொலிக்கும் தங்கச் சம்பா

By நெல் ஜெயராமன்

‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல' என்னும் பழமொழிக்கு மாறாக, அறுவடை செய்து நெல்லைத் தூற்றும்போது, தங்கம் போல் நெல் ஜொலிப்பதைக் காணலாம். அதனால்தானோ என்னவோ, இந்த நெல் ரகத்துக்கு `தங்கச் சம்பா’ என பெயர் வந்திருக்குமோ?

தங்கச் சம்பா பாரம்பரிய நெல் வகை, சம்பா பட்டத்துக்கு ஏற்றது. ஐந்தடி வரை வளரும் தங்கச் சம்பா மோட்டா ரகம். மத்திய காலப் பயிர். நூற்றி முப்பது நாளில் அறுவடைக்கு வரக்கூடியது. ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்ய ஏற்ற ரகம். சிவப்பு நெல், சிவப்பு அரிசி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மருத்துவ குணம் கொண்ட நெல் ரகம் இது.

நோய் எதிர்ப்பு சக்தி

பாரம்பரிய நெல் ரகங்களில் தங்கச் சம்பா நெல் அரிசியை உணவு, பலகாரங்களுக்கு பயன்படுத்தி வந்தால், உடல் ஆரோக்கியத்துடனும் முகம் பொலிவுடனும் இருப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும்.

தமிழகத்தில் பரவலாக இந்த நெல் சாகுபடி செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் ஏக்கருக்கு இருபது மூட்டை மகசூல் கிடைக்கும். அதிகபட்சம் ஏக்கருக்கு முப்பது மூட்டைவரை மகசூல் கிடைக்கும். இது இயற்கைச் சீற்றங்களையும் தாங்கி வளரக்கூடியது.

நெல் ஜெயராமன் தொடர்புக்கு: 94433 20954.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்